'நரகத்தை' கண்டுப்பிடித்து விட்டோம் : ஆராய்ச்சியாளர்கள் அதிரடி..!

Written By:
  X

  சூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்ஸோபிளான்ட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளான்ட் (exoplanet or extrasolar planet) எனப்படும். 1988-ஆம் ஆண்டு முதல் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட எக்ஸோபிளானட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சமீபத்திய ஆண்டுகளில் பூமி கிரகத்தை ஒற்ற எக்ஸோபிளானட்கள் தேடல் ஆனது மிகவும் வேகமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறது..!

  முன்பு போல் இல்லாது, தற்போது மிகவும் சக்தி வாய்ந்த ரேடியோ மற்றும் ஆப்டிக்கல் தொலைநோக்கிகள் (radio and optical telescopes) விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. உடன், பல விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்கள் (Space probes) சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற பின்பும் கூட நமக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அரை டஜன் கிரகங்கள் :

  அப்படியாக கண்டுப்பிடிக்கப்பட்ட - பூமி கிரகம் போன்றே இருக்கும் - எக்ஸோபிளானட்களில் அரை டஜன் கிரகங்கள் மட்டுமே அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு திரவ நீர்வழி தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள கிரகங்கள் ஆகும்.

  விசித்திரம் :

  இதுபோன்ற தேடலின் போது பல வியத்தகு கிரகங்களும் கூட வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படியாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசித்திரம் தான் - கேன்ஸ்ரி 55 இ (Cancri 55 e).!

  கேன்ஸ்ரி 55 இ :

  சமீபத்திய வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகவும் புதிரான கிரகங்களில் கேன்ஸ்ரி 55 இ கிரகமும் ஒன்றாகும்.

  வியப்பான கலவை :

  குறிப்பாக, கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் வியப்பான கலவையானது (eerie composition) அதை ஒரு நரகம் போல் காட்சிப்படுத்துகிறது என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

  இரண்டு முகங்கள் :

  கேன்ஸ்ரி 55 இ கிரகத்திற்கு இரண்டு முகங்கள் அல்லது இரண்டு அரைக்கோளம் (two faces or hemispheres) உள்ளது.

  எரிமலை - இருள் :

  கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் ஒரு 'முகம்' ஆனது கொதிக்கும் எரிமலைக்குழம்பால் மூடப்பட்டிருக்கிறது மற்றொரு முகமானது நிரந்திர இருளான நிலையில் (perpetual state of darkness) இருக்கிறது.

  உயர் வெப்பநிலை :

  சூரியனை நோக்கி உள்ள கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் பகுதியானது சுமார் 2,000 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலையில் உள்ளது.

  விஷ வாயு :

  அது மட்டுமின்றிஅந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நொடியில் உயிரைப் பறிக்கும் விஷ வாயுவான ஹைட்ரஜன் சயனைடுதனை (Hydrogen Cyanide) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

  பைபிள் விவிலிய விளக்கங்கள் :

  செவ்வாய் போன்ற உயிர் வாழத் தகுதியில்லாத கிரகங்கள் பல இருப்பினும், பைபிள் விவிலிய விளக்கங்களின் படி நரகம் ஆனது இப்படித்தான் இருக்கும் என்பதை ஒற்று இருக்கிறது கேன்ஸ்ரி 55 இ..!

  பெரிய பெரிய மாக்மா குளங்கள் :

  பூமி கிரகம் முழுக்க ஆங்காங்கே எரிமலை ஆறுகள் மற்றும் பெரிய பெரிய மாக்மா குளங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் அப்படிதான் இருக்கும் கேன்ஸ்ரி 55 இ.

  இரண்டு மடங்கு :

  அது மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ, பூமி கிரகத்தை விட இரண்டு மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  வரைபடம் :

  ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியால் (Spitzer Space Telescope) கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, இந்த கிரகத்தில் முதல் வெப்பநிலை வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

  பூட்டப்பட்டுள்ளது :

  விண்வெளியில் நிலவு பூமியோடு பூட்டப்பட்டுள்ளது போல, கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது சூரியனோடு பூட்டப்பட்டுள்ளது. எனவே தான் அக்கிரகத்தின் ஒரு பகுதியானது எப்போதுமே கொளுத்தும் சூரியனை எதிர்கொள்கிறது மறுபக்கம் நிரந்தரமாக இருளில் மூழ்கி கிடக்கிறது.

  கதிர்வீச்சு :

  இவைகள் மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது ஒரு குண்டு வெடிப்பு அல்லது உள்வெடிப்பு நிகழ்ந்ததற்கு சமமான அளவிற்கு வலுவான கதிர்வீச்சை வெளியிடுகிறது.

  இருக்கவே முடியாது :

  வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விண்வெளியில் இது போன்ற ஒரு விசித்திரமான மற்றும் படுபயங்கரமான ஒரு கிரகப்பொருள் இருக்கவே முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள், அதனால்தான் இதை நரகம் என்று குறிப்பிடுகின்றனர்.

  மேலும் படிக்க :

  பூமியை காப்பாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் !


  பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Researchers Claim They Have Found Hell. Read more about this in Tamil GizBot.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more