இந்தியாவின் மறுப்பக்கம் : அதிபயங்கர டாப் 10 ஆயுதங்கள்.!!

By Staff
|

அதிநவீன ஆயுதங்கள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த நாடாக இந்தியா நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. புதிய மற்றும் அதிக சக்திவாய்ந்த ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு எவ்வித தாக்குதல்களையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படை தயாராக இருக்கின்றது. அதிநவீன ஆயுதங்களை பெற இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களை அதிகம் நம்பி இருக்கின்றது அனைவரும் அறிந்ததே.

பொரும்பாலான ஆயுதங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டு இருந்தாலும் அவை வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து மிகவும் சக்திவாய்ந்ததாகவும், அதிபயங்கரமானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய பாதுகாப்பு படையின் தலைசிறந்த டாப் 10 ஆயுதங்களை பற்றிய தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

10 T-90s Bheeshma-The destroyer

10 T-90s Bheeshma-The destroyer

டி-90 ரஷ்யாவின் மூன்றாம் தலைமுறை முக்கிய போர் பீரங்கி ஆகும். இது மேம்படுத்தப்பட்ட டி-72 வகை பீரங்கி என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் தாக்கும் திறன், சுலபத்தில் நகரும் தன்மை மற்றும் பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

தயாரிப்பு

தயாரிப்பு

டி-90 வகை பீரங்கி ரஷ்ய ராணுவத்தில் 1992 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய பாதுகாப்பு படையில் மொத்தம் 310 டி-90 வகை பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 120 பீரங்கிகள் இந்தியாவிற்கு வந்திருக்கின்றது.

திறன்

திறன்

டி-90 பீரங்கியின் மொத்த எடை சுமார் 46 டன் ஆகும். புதிய வகை டீசல் என்ஜின், ஜாமிங் சிஸ்டம், லேசர் வார்னிங் ரிசீவர் போன்றவைகளோடு 43 ரவுண்டு கொண்ட 125எம்எம் ஸ்மூத்போர் துப்பாக்கிகளும் 12.7எம்எம் ஹெவி மெஷின் துப்பாக்கிகளும் கொண்டிருக்கின்றது.

09 Barak 8-Shield for Incomming missiles

09 Barak 8-Shield for Incomming missiles

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தான் இந்த நேவல் பராக்-8 ஆகும்.

தயாரிப்பு

தயாரிப்பு

ஜனவரி 2006 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பம் மூலம் புதிய வகை நீண்ட தூர நில வான் ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஒப்பந்தத்தில் கோரப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் 2017 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு விடும்.

திறன்

திறன்

நில வான் ஏவுகணைகளை கொண்டு போர் விமானங்கள், யுஏவி, மற்றும் கப்பல் மூலம் ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்க முடியும். இந்த ஆயுத முறை இந்திய ராணுவத்தில் 2013 ஆம் ஆண்டு இணைந்தது.

08 INS Vikrant Undocked

08 INS Vikrant Undocked

ஐஎன்எஸ் விக்ராந்த் (IAC-1) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும். இந்திய கடற்படைக்காக இது கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது.

தயாரிப்பு

தயாரிப்பு

1999 ஆம் ஆண்டு துவங்கிய இதன் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழுமையான கட்டமைப்பு செலவுகள் சுமார் 19341 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறன்

திறன்

200 அடி அகலம் மற்றும் 860 அடி நீளம் கொண்ட இந்த போர் கப்பல் சுமார் 40,000 மெட்ரிக் டன் எடை தாங்கி நிற்கும் திறன் கொண்டிருக்கின்றது. இதில் சுமார் 30 எம்ஐஜி-29கே விமானங்களை நிறுத்தி கொள்ள முடியும். மேலும் ஷாட் டேக்-ஆப் பட் அரெஸ்டெட் ரிக்கவரி தொழில்நுட்பமும் 80 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் படைத்த ஜெனரல் எலக்ட்ரிக் LM2500+ கேஸ் டர்பைன் வழங்கப்பட்டுள்ளது.

07 Phalcon Awacs

07 Phalcon Awacs

ஏர்போன் எர்லி வார்னிங் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் (AWACS) சார்ந்த தொழில்நுட்பத்தில் இந்தியா தாமதமாகவே நுழைந்தது. ஆனால் இந்தியாவின் வருகை மற்ற நாடுகளை விட அதிகமான மேம்படுத்தப்பட்டிருந்தது.

தயாரிப்பு

தயாரிப்பு

இந்த தொழில்நுட்பத்தின் தயாரிப்பும் இந்தியா மற்றும் இஸ்ரேல் அரசு இணைந்து மேற்கொள்ளப்பட்டது. ஐஎல்-76 ஃபால்கன் வருகையின் மூலம் இந்தியா உலகளவில் AWACS ஆப்பரேட்டர்களுடன் இணைந்தது. இவ்வகை விமானத்தை கொண்டு இந்திய வான்வெளியை கண்கானித்தல், தகவல் தொலைதொடர்புகளை இடைமறித்தல் மற்றும் இதர கண்கானிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படுகின்றது.

திறன்

திறன்

இந்த விமானத்தில் இருக்கும் ரேடார் 360 கோணத்தில் மின்சார முறையில் ஸ்கேனிங் அர்ரே கொண்டுள்ளது. இந்த ரேடார் மற்றவைகளை விட 10 மடங்கு வேகமாக இலக்குகளை டிராக் செய்யும் என்பதோடு இதில் இன்டிகிரேட் செய்யப்பட்ட ஐஎஃப்எஃப் சிஸ்டம், எலக்ட்ரானிக் கவுன்டர் முறை, சுய பாதுகாப்பு வழங்கும் ECCM சூட், எதிரி ரேடார்களில் இருந்து தகவல்களை சேகரிக்கும் எலக்ட்ரானிக் இன்டெலிஜன்ஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

06 Agni V-The killer Missile

06 Agni V-The killer Missile

அக்னி V ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாகும். இது சுமார் 8000 கிமீ வரை சென்று தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு

தயாரிப்பு

இது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும். இந்தியாவில் வெற்றி பெற்ற ICBM ஏவுகணை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறன்

திறன்

அக்னி V மற்ற ஏவுகணைகளை விட அதிநவீனமானது. 1000 கிலோ நியூக்லியர் வார்ஹெட் சுமந்து கொண்டு 10மீ குறைவில் கச்சிதமாக தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

05 INS Chakra

05 INS Chakra

ஐஎன்எஸ் சக்ரா ரஷ்யா தயாரித்த அணு நிரப்பப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆகும். மற்ற நீரமூழ்கி கப்பல்களை போன்று இல்லாமல், இதனால் அதிக நேரம் நீருக்கு அடியில் இருக்க முடியும். இந்திய கடற்படை பயிற்சி மேற்கொள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் 10 ஆண்டுகளுக்கு லீஸ் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறன்

திறன்

அகுலா கிளாஸ் நீர்மூழ்கிகள் வழக்கமான ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும், இதில் நான்கு 533எம்எம் மற்றும் 650எம்எம் டோர்பெடோ ட்யூப்கள் கொண்டிருக்கின்றன. இவைகளை கொண்டு எதிரி கப்பல்களை தகர்க்க முடியும். மேலும் மற்ற நீர்மூழ்கிகளை விட அதிவேகமாக தாக்கும் திறன் படைத்திருக்கின்றது.

04 INS Vikramaditya

04 INS Vikramaditya

இந்திய கடற்பகுதியான ராஜாவாக ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கருதப்படுகின்றது. இந்திய பாதுகாப்பு படையின் தலைசிறந்த போர் கப்பலாக இது இருக்கின்றது.

தயாரிப்பு

தயாரிப்பு

இந்திய கடற்படையில் 2013 ஆம் ஆண்டு இணைந்த ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மேம்படுத்தப்பட்ட கெய்வ் கிளாஸ் போர் கப்பல் ஆகும். இந்த போர் கப்பலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 14 2014 ஆம் ஆண்டு நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

திறன்

திறன்

இந்த போர் கப்பலானது 283.5 மீட்டர் நீளமும் 22 டெக் கொண்டிருக்கின்றது. இதில் 6 டர்போ அல்டெர்நேட்டர்களும் 6 டீசல் அல்டெர்நேட்டர்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 18 மெகாவாட் சக்தியை உருவாக்க முடியும். மேலும் இதில் 36 விமானங்களை நிறுத்தி வைக்குமளவு திறன் கொண்டிருக்கின்றது.

03 Arjun Mark-II Main Battle Tank

03 Arjun Mark-II Main Battle Tank

இந்திய பாதுகாப்பு படையின் அதிபயங்கர ஆயுதமாக அர்ஜூன் மார்க -II விளங்குகின்றது. இது மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி ஆகும்.

தயாரிப்பு

தயாரிப்பு

அர்ஜூன் மார்க் II பீரங்கியானது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். இந்த பீரங்கியில் 13 முக்கிய மேம்படுத்தல்களும், மொத்தமாக சுமார் 93 மேம்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திறன்

திறன்

எவ்வித சூழலிலும் சிரமம் இன்றி பயணித்து இலக்குகளை விரைவாக டிராக் செய்து அழிக்கும் திறன் கொண்டிருக்கின்றது. இதில் அதிநவீன ஹைட்ரோ-நியூமாடிக் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் இதன் MBT அதிநவீன ஆர்னமன்ட் மற்றும் ஏவியோனிக் முறைகளின் மூலம் இன்டகிரேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் 12.7 எம்எம் NSVT மெஷின் கன் போன்றவை இதில் வழங்கப்பட்டுள்ளது.

02 Brahmos missile

02 Brahmos missile

இது சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.

திறன்

திறன்

பிரமோஸ் உலகின் அதிவேக க்ரூஸ் ஏவுகணையாக கருதப்படுகின்றது. இந்திய பாதுகாப்பு படையின் தலைசிறந்த ஏவுகணைகளில் ஒன்றாக பிரமோஸ் கருதப்படுகின்றது. இது மற்ற ஏவுகணைகளை விட மூன்று மடங்கு வேகமானதாக இருப்பதோடு இலக்குகளை 3 அல்லது 4 மடங்கு துல்லியமாகவும், 9 மடங்கு அழுத்தமானதாகவும் இருக்கின்றது. நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி என பல விதமான வழி முறைகளில் இருந்து ஏவப்படக்கூடியது.

01 Su-30Mki

01 Su-30Mki

இந்திய வான்படையின் மிகவும் தலைசிறந்த போர் விமானமாக சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ இருக்கின்றது. இது செப்டம்பர் 27, 2002 ஆம் ஆண்டு அறமுகம் செய்யப்பட்டது.

தயாரிப்பு

தயாரிப்பு

சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ போர் விமானமானது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இது இந்திய வான்படைக்காக உருவாக்கப்பட்டதாகும்.

திறன்

திறன்

மணிக்கு சுமார் 2100 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ போர் விமானமானத்தில் 12 ஹார்டுபாயின்ட் கொண்ட 30 எம்எம் GSH-1 துப்பாக்கி, ஆறு வகையான ஏர்-டூ-ஏர் ஏவுகணைகளும், ஆறு வகையான வெடிகுண்டுகளும் இருக்கின்றது. மேலும் இந்த ஆண்டில் இதில் பிரமோஸ் சுமந்து செல்லும் வசதியும் உள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அமெரிக்காவை 'மீண்டும் மீண்டும்' கலங்கடிக்கும் வடகொரியா..!

உறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..?!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Powerful HiTech Weapons In INDIAN ARMED FORCES 2016 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X