அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தும் வடகொரியா.!!

Written By:

பல்வேறு உலக நாடுகளும் அமைதியை வலியுறுத்தும் அதே வேலையில் ஆயுதங்கள், மற்றும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. வளர்ந்த நாடுகள் துவங்கி வளர்ச்சி பாதையில் இருக்கும் நாடுகள் வரை பாதுகாப்பு காரணம் காட்டி ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சில காலமாக இருப்பது வடகொரியா எனலாம். தென்கொரியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியாவின் செயல்பாடுகள் குறித்த சில தகவல்களை இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பதிலடி

பதிலடி

தென்கொரிய மற்றும் அமெரிக்காவின் ராணுவ ஒத்திகைக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியாவின் சமீபத்திய செயல்பாடுகள் இருந்து வருகின்றது.

அணு ஆயுத சோதனை

அணு ஆயுத சோதனை

அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டதை அடுத்து முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியாவின் கிம் ஜாங் யுன் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.

சோதனை

சோதனை

மேலும் வடகொரியா சார்பில் குறைந்த தூர ஏவுகனை மற்றும் ஆர்டிலெரி ஷெல் போன்றவைகளை கடலில் செலுத்தி சோதனையில் வெற்றி கண்டுள்ளது.

வாடிக்கை

வாடிக்கை

சமீப காலங்களில் வடகொரியா இது போன்ற சோதனைகளை அவ்வப்போது செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காலிபர்

காலிபர்

வடகொரியா சோதனை செய்த ஆயுதங்களில் பெரிய காலிபர் ஆர்டிலெரி ராக்கெட் அமைப்புகள் சுமார் 200 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

வளர்ச்சி

வளர்ச்சி

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை, அணு ஆயுதங்களை தயாரிப்பதில் வடகொரியா நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ரீ-என்ட்ரி

ரீ-என்ட்ரி

ஏவுகனைகள் அதிக சூடாகாமல் இருக்கவும், பல்வேறு சூழல்களில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் ரீ-என்ட்ரி எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக வடகொரியா தெரிவித்திருக்கின்றது.

திட-எரிபொருள் ராக்கெட்

திட-எரிபொருள் ராக்கெட்

மேலும் அதிக சக்தி வாய்ந்த திட-எரிபொருள் ராக்கெட் என்ஜின்களை கடந்த வாரம் வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அமெரிக்கா எச்சரிக்கை, அலறும் ரஷ்யா, சீனா.!!

டைம் மெஷின் வடிவமைக்கும் முறை கண்டுபிடிப்பு.!?

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
North Korea's most aggressive threats, and weapons launches Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot