மெல்ல மெல்ல வெளிப்படும் பிளாக் ஹோல் புதிர்களும், பூமியின் முடிவும்..!

|

பிளாக் ஹோல்கள் (Black Holes) எனப்படும் கருங்குழிகள் எப்போதுமே ஒரு புதிர் தான், விசித்திரம் தான். முக்கியமாக பிளாக்ஹோல்களை தலைமுறை தலைமுறையாக புரிந்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு கருங்குழிகளும் அவைகளால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் பிரபஞ்சத்தின் அல்டிமேட் எல்லையைப்பற்றி தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் மிக அதிகம்..!

அவர்களின் ஆர்வத்திற்கு தீனிப்போடும் வகையில் புதிதாக ஒரு பிளாக் ஹோல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது..!

ஜப்பான் :

ஜப்பான் :

சமீபத்தில் ஜப்பான் நாட்டின் தேசிய வானியல் வல்லுனர்கள் குழு (National Astronomical Observatory of Japan) புதிய பிளாக் ஹோல் ஒன்றின் இருப்பை கண்டறிந்துள்ளது.

இரண்டாவது பெரிய கருங்குழி :

இரண்டாவது பெரிய கருங்குழி :

வெளியான ஆய்வுமைய தகவலில் இருந்து, கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள பிளாக் ஹோல் ஆனது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய கருங்குழி என்றும் நம்பப்படுகிறது.

இரண்டு வகை :

இரண்டு வகை :

கருங்குழிகள் இரண்டு வகைப்படும் #1 ஸ்டெல்லார் மாஸ் பிளாக் ஹோல்ஸ் ( stellar-mass black holes), #2 சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்ஸ் (supermassive black holes -SMBH)

நட்சத்திர வெடிப்பு :

நட்சத்திர வெடிப்பு :

முதல் வகையான ஸ்டெல்லார் பிளாக் ஹோல்கள் மாபெரும் நட்சத்திரங்களின் வெடிப்பில் இருந்து உருவாக்கம் பெறுகின்றன.

விண்மீன் திரள் :

விண்மீன் திரள் :

இரண்டாம் வகையான சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்கள் பெரும்பாலும் விண்மீன் திரள்களின் மையங்களில் காணப்படுகின்றனவே தவிர, அவைகள் எப்படி உருவாக்கம் பெறுகின்றன என்ற விளக்கம் கிடைக்கப்பெறவில்லை.

கணிப்பு :

கணிப்பு :

இதுவரையிலாக ஏகப்பட்ட சூப்பர் மாசிவ் பிளாக் ஹோல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள போதிலும் அவைகள் உருவாக்கம் பற்றி ஒரே ஒரு கணிப்பு மட்டும் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேர்க்கை :

சேர்க்கை :

அதாவது, பல இடைநிலை பிளாக் ஹோல்களின் சேர்க்கையில் இருந்தே சூப்பர் மாசிவ் பிளாக் ஹோல்கள் உருவாக்கம் பெறுகின்றன என்பது தான் அந்த கணிப்பு..!

நிலையான அம்சம் :

நிலையான அம்சம் :

சமீபத்தில் ஜப்பான் விண்வெளி வல்லுனர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள பிளாக் ஹோல் ஆனது, 'சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்கள் ஏன் பெரும் விண்மீன் திறல்களுக்கு நடுவிலேயே நிலையான அம்சம் கொண்டுள்ளது'? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

புதிர்களுக்கு விடை :

புதிர்களுக்கு விடை :

'ஆரம்பத்தில் சிறிய அளவில் உருவாகும் பிளாக் ஹோல்கள் போகப்போக பிற பிளாக் ஹோல்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் அல்லது அளவே இல்லாத ஒரு உருவத்தை பெறும்' என்பது போன்ற பல பிளாக் ஹோல் புதிரக்ளுக்கு விடை கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

சுவாரஸ்யமான பண்பு :

சுவாரஸ்யமான பண்பு :

தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள பிளாக் ஹோலில் இருந்து ஒரு சுவாரஸ்யமான பண்பு கொண்ட புதிரான எரிவாயு மேகம் (வாயு மேகம் CO 0.40-0.22) கொண்டுள்ளது.

விசித்திரமான ஈர்ப்பு புயல் :

விசித்திரமான ஈர்ப்பு புயல் :

வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் நிகழும் விசித்திரமான ஈர்ப்பு புயல் மூலம் தான் பிளாக் ஹோலின் இருப்பு உறுதி செய்யப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது..!

ரேடியோ டெலஸ்கோப் :

ரேடியோ டெலஸ்கோப் :

ஜப்பான் தேசிய வானியல் ஆய்வகத்தின் கீழ், நோபியமா (Nobeyama) என்ற 45 மீட்டர் நீளமுள்ள ரேடியோ டெலஸ்கோப் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நொடி :

கடைசி நொடி :

நாம் வாழும் பூமி கிரகத்தை பிளாக் ஹோல்கள் விழுங்கினால் அந்த கடைசி நொடி எப்படி இருக்கும் என்ற அறிவியலாளர்களின் சில விளக்கங்களும் உண்டு..!

விளைவு 01 :

விளைவு 01 :

ஒருவேளை பூமி கிரகம், பிளாக் ஹோலுக்குள் விழுந்தால் 3 விளைவுகளை எதிர்நோக்கலாம். அப்படியாக, முதல் விளைவை - ஸ்பேகட்டிபிக்கேஷன் (Spaghettification) என்கிறார்கள் அறிவியல் விஞ்ஞானிகள்.

நூடூல்ஸ் எஃபெக்ட் :

நூடூல்ஸ் எஃபெக்ட் :

அதாவது, பிளாக்ஹோலை மிக நெருங்கும் பொருள் ஆனது நீட்டித்து விரிவடையும் (அதாவது சூடு நீரில் போட்ட நூடூல்ஸ் போல விரியும்). இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவானதை நூடூல்ஸ் எஃபெக்ட் (Noodle Effect) என்றும் அழைக்கப்படுகிறது என்பதும், 'ஸ்பேகட்டி' (spaghetti) என்பது ஒரு பாஸ்டா வகையின் பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழிந்து இறக்க நேரிடும் :

கிழிந்து இறக்க நேரிடும் :

பூமி கிரகத்தில் இருக்கும் உயிர் இனங்கள் மற்றும் பெரும்பாலான பொருட்கள் விரிவடையும் தன்மை (அதாவது எலாஸ்டிக் (Elastic) தன்மை) கொண்டவைகள் அல்ல. ஆகையால், பிளாக் ஹோலுக்குள்ளே அல்லது பிளாக் ஹோலுக்கு மிக நெருக்கமாக பூமி சென்றால் உலகில் உள்ள மனிதர்கள் விரிந்து கிழிந்து இறக்க நேரிடும் என்கிறது இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவின் விளக்கம்.

விளைவு 02 :

விளைவு 02 :

பூமி கிரகம், பிளாக் ஹோலுக்குள் விழுந்தால் - முப்பரிமாண இருப்பை (Holographic Existence) உணரும் என்கிறது ஒரு அறிவியல் கோட்பாடு. அதாவது பூமி கிரகம் தன்னை தானே ஒரு நிறைவில்லாத பிரதியை (Imperfect copy) எடுத்துக்கொண்டு ஒரு வகையான மூப்பரிமான காட்சியை அளிக்குமே தவிர அழிந்து போகாது என்கிறது இந்த கோட்பாடு.

கோட்பாடுகள் :

கோட்பாடுகள் :

இந்த கோட்பாடானது இரண்டு எதிரெதிர் கோட்பாடான ஃபூஸ்பால் (Fuzzbaal) மற்றும் ஃபையர்வால்ஸ் (Firewalls) ஆகிய இரண்டுக்குமே எதிர் கருத்தை முன் வைக்கும் ஒரு கோட்பாடு.

ஃபூஸ்பால் - ஃபையர்வால்ஸ் கோட்பாடு :

ஃபூஸ்பால் - ஃபையர்வால்ஸ் கோட்பாடு :

ஃபூஸ்பால் கோட்பாடு ஆனது பிளாக் ஹோல் எல்லையை தீண்டும் எந்தவொரு பொருளும் அழியாது என்கிறது. ஃபையர்வால்ஸ் கோட்பாடோ, பிளாக் ஹோல் எல்லையை தொடும் எந்தவொரு பொருளும் அழிந்து போகும் என்கிறது.

விளைவு 03 :

விளைவு 03 :

பிளாக் ஹோல் ஆனது தன்னை நெருங்கும் எந்தவொரு புதிய பொருள் மீதும் அதிகப்படியான கதிர்வீச்சை (Radiation) வெளிப்படுத்தும் பண்பை கொண்டது.அப்படியாக, பிளாக் ஹோல் மூலம் ஈர்க்கப்பட்டு ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவு ஏற்பட்டு விரிவடைந்து கிழிவதற்கு முன்னே அதீத கதிர்வீச்சால் முழு கிரகமும் வருத்தெடுக்கப்படலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..!


பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
New discovered Black Hole reveals truths about the Universe’s ultimate dead end. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X