'அழிக்கப்பட்ட' புகைப்பட ரோல்கள் : கிழிகிறது நாசாவின் முகத்திரை..!?

|

நிரூபிக்கப்படாத, ஆதாரமில்லாத ஒன்று 'மறுபடியும் மறுபடியும்' வாதாடப்படுகிறது, சர்ச்சைக்கு உள்ளாகிறது என்றால் அது பொய்யாக இருக்க வாய்ப்பு குறைவு என்பது தான் நிதர்சனம்.

அப்படியாக உலக வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குறிய ஒரு நிகழ்வுதான் - 'அமெரிக்காவின் முதல் நிலவு பயணம்'. அந்த ஒட்டுமொத்த நிகழ்வே ஒரு நாடகம் என்று வாதாடும் கூட்டம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் அந்த குறிப்பிட்ட நிகழ்வில் ஏகப்பட்ட மர்மங்கள் மறைக்கப்படுகின்றது என்று ஒரு கூட்டம் வாதாடுகிறது. தற்போது அந்த நிகழ்வு சார்ந்த மர்மங்கள் மறைக்கப்படவில்லை, 'அழிக்கப்பட்டு விட்டது' என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் நாசாவின் விசில்ப்ளோயர் ஆன ஜார்ஜ் லியோனார்ட் (George Leonard)..!

நடமாட்டம் :

நடமாட்டம் :

ஜார்ஜ் லியோனார்ட் தானாக முன்வந்து நிலவில் "வேறு யாரோ இருக்கிறார்கள்" என்ற சர்ச்சைக் குறிய கருத்தை கூறியுள்ளார் அதாவது நிலவில் வேற்றுகிரகவாச நடமாட்டம் இருக்கிறது என்கிறார்.

உண்மையான தகவல் :

உண்மையான தகவல் :

மேலும் இது சார்ந்த உண்மையான தகவல்களை பல ஆண்டுகளாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மறைக்கிறது அல்லது அழித்து விட்டது என்றும் ஜார்ஜ் லியோனார்ட் கூறியுள்ளார்.

புகைப்பட ஆய்வாளர் :

புகைப்பட ஆய்வாளர் :

ஜார்ஜ் லியோனார்ட் - நாசாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு புகைப்பட ஆய்வாளர் (Photo analyst) ஆவார்.

 நுண்ணிப்பு :

நுண்ணிப்பு :

அதிலும் முக்கியமாக நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வமான நிலவின் புகைப்படங்களை நுண்ணிப்பாக ஆராய்பவர், முடிந்த அளவிலான மர்மங்களை தகர்க்க பார்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 புத்தகம் :

புத்தகம் :

ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்ட பல புகைப்படங்களை அவர் தனது புத்தகமான சம்படி எல்ஸ் இன் தி மூன்-ல் பிரசுரமாக்கியுள்ளார் (Somebody else in the Moon)

ஒரிஜினல் புகைப்படங்கள் :

ஒரிஜினல் புகைப்படங்கள் :

நாசாவினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் அளவில் மிகவும் சிறியதாகவும், தற்காலத்திற்கு ஏற்ற ரெசெல்யூசன் தரத்தில் இல்லை என்றாலும் கூட ஒரிஜினல் புகைப்படங்களில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த தவறவில்லை என்கிறார் ஜார்ஜ் லியோனார்ட்.

மறுப்பு :

மறுப்பு :

மறுபக்கம் மிகவும் மோசமான ரெசெல்யூசன் கொண்ட புகைப்படங்கள் கணிப்புகளை மேலும் மேலும் சிக்கலாகத்தான் மாற்றுகிறது என்று ஜார்ஜ் லியோனார்ட் கருத்துகளுக்கு மறுப்பும் தெரிவிக்கப்படுகிறது.

40 ரோல் புகைப்படங்கள் :

40 ரோல் புகைப்படங்கள் :

வெளியிடப்பட்ட புகைப்படங்கள் ஒருபக்கம் ஆதாரமாய் வாதாடப்பட்டுக் கொண்டிருக்க, சர்ச்சைக்குறிய பெரும்பாலான புகைப்படங்கள் 'அழிக்கப்பட்டு' விட்டன, அதாவது சுமார் 40 ரோல் புகைப்படங்கள்.

ஆதாரம் :

ஆதாரம் :

"அமெரிக்காவின் அப்போலோ மிஷன் சார்ந்த சுமார் 40 ரோல் புகைப்படங்கள் அழிக்கப்பட்டுவிட்டது" என்று ஓய்வு பெற்ற அமெரிக்க இராணுவ கமாண்ட் சர்ஜெண்ட் மேஜர் ஆன பாப் டீன் (Bob Dean) வெளிப்படையாக கூறிய கருத்து தான் அதற்கு ஆதாரம்.

 அழிக்கப்பட்டு விட்டது :

அழிக்கப்பட்டு விட்டது :

அதாவது " நிலாவிற்கு விண்கலம் சென்றது, நிலவை சுற்றித் திரிந்தது, நிலவில் விண்வெளி வீரர்கள் தரை இறங்கி அங்குமிங்கும் நடமாடியது போன்ற பல புகைப்படங்கள் அழிக்கப்பட்டு விட்டது" என்று அவர் கூறினார்.

அரசியல் :

அரசியல் :

"அவைகள் எல்லாம் நீங்கள் பார்க்க உரிமை இல்லாத, அரசியலால் ஏற்றுக் கொள்ளப்படாத, சமூகத்தின் அடிப்படையால் ஏற்றுக் கொள்ள முடியாத, சீர்குலைக்கும் 'ரோல்'கள்" என்று பாப் டீன் அம்பலப்படுத்தினார்.

 சர்வதேச விசாரணை :

சர்வதேச விசாரணை :

பாப் டீன் கருத்து மட்டுமின்றி, 'நிலவு பயணம் குறித்து' அமெரிக்காவின் மீது சர்வதேச விசாரணை நடத்துமாறு ரஷ்யா கோரியதும் குறிப்பிடத்தக்க ஒரு சந்தேகமாகும்.

பதிவாக்கப்பட்ட காட்சிகள் :

பதிவாக்கப்பட்ட காட்சிகள் :

அதாவது 1969-ஆம் ஆண்டு நிலவில் அமெரிக்கர்கள் இறங்கிய போது பதிவாக்கப்பட்ட காட்சிகள் பல மறைக்கப்பட்டு விட்டது என்று ரஷ்யா குற்றம் சாட்டியது.

நிலவு பாறை :

நிலவு பாறை :

அது மட்டுமின்றி 1969 முதல் 1972 வரையிலாக அமெரிக்கா மேற்கொண்ட நிலவு பயணத்தின் போது சுமார் (தோராயமாக) 400 கிலோ கிராம் எடையுள்ள நிலவு பாறை அமெரிக்காவால் பெறப்பட்டுள்ளது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியது.

 வேற்றுகிரக வாசம் :

வேற்றுகிரக வாசம் :

புகைப்படம் மற்றும் பதிவான காட்சிகளோடு சேர்த்து வேற்றுகிரக வாசம் சார்ந்த உண்மைகளும் மறைக்கப்படுகிறது என்பதை ஜார்ஜ் லியோனார்ட் மட்டுமில்லை நிலவில் காலடி பதித்த ஆறாவது மனிதரான டாக்டர் எட்கர் மிச்சலும் நம்புகிறார்.

உறுதி :

உறுதி :

அவர் ஒருமுறை "மனித இனம் மிகவும் தனிமையானதாக இருப்பது எப்படி என்று இத்தனை நாள் அதிசயித்துக் கிடந்தது ஆனால், நம் காலத்திலேயே நாம் தனியாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது" - என்று கூறியது வேற்றுகிரக வாசிகளின் இருப்பை உறுதி செய்கிறது.

மர்மங்கள் :

மர்மங்கள் :

நிலவில் பல மர்மங்கள் உள்ளது என்பதை பிளாஸ்மா விஞ்ஞானியான டாக்டர். ஜான் பிரான்டன்பர்க் (John Brandenburg) நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை :

செயற்கை :

டாக்டர். ஜான் பிரான்டன்பர்க், நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் கொஞ்சம் கூட பிழையின்றி செயற்கையாக உருவாக்கப்பட்டவைகள் என்று நம்புகிறார்.

10 ஆதாரங்கள் :

10 ஆதாரங்கள் :

மேலும் அமெரிக்கா நிலாவிற்கு செல்லவே இல்லை என்பதை நிரூபிக்கும் 10 ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது..!

ஆதாரம் #10 :

ஆதாரம் #10 :

அமெரிக்கா நிலாவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது, அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது.

 ஆதாரம் #09 :

ஆதாரம் #09 :

அப்பலோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலும் இல்லை. இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளிக்கிறது.

ஆதாரம் #08 :

ஆதாரம் #08 :

ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைப்பதின் மூலம் இது படடமக்கப்பட்டது என்கிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.

ஆதாரம் #07 :

ஆதாரம் #07 :

முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி எப்படி நிலாவிற்கு சென்றனர் என்பது இன்றும் கேள்வி குறி தான்..!

ஆதாரம் #06 :

ஆதாரம் #06 :

வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், விண்வெளி வீரரின் ஹெல்மட்டில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபலிக்கிறது.

ஆதாரம் #05 :

ஆதாரம் #05 :

நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறுகிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.

ஆதாரம் #04 :

ஆதாரம் #04 :

வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.

ஆதாரம் #03 :

ஆதாரம் #03 :

வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை..!

ஆதாரம் #02 :

ஆதாரம் #02 :

வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப்பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்றாகும்.

ஆதாரம் #01 :

ஆதாரம் #01 :

ஒரே மாதிரியான பின்புலம் (Backdrop) கொண்ட பல வீடியோ காட்சிகள்..!

நம்பவில்லை :

நம்பவில்லை :

அமெரிக்கா நிலாவிற்கு சென்றதை, 20% அமெரிக்கர்களே நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..?!


மீண்டும் சீனாவில் தோன்றிய மிதக்கும் நகரம்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
A NASA whistleblower claiming that there is extraterrestrial activity on the moon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X