சூரிய குடும்பத்தை அதிவேகத்தில் கடந்து செல்லும் 'ஏலியன் டஸ்ட்'..!
சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நமது அண்டத்தின் அருகில் மிதக்கும் சில சிறப்பு துகள்களை (special particles) கண்டுப்பிடிதுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து சனி கோளை சுற்றி வந்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் காசினி விண்கலம் இதை கண்டறிந்துள்ளது..!
'ஏலியன் டஸ்ட்' என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு துகள்கள் ஆனது நமது சூரிய குடும்பத்தின் வெளியே இருந்து வருகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏலியன் டஸ்ட் :
சனி கிரகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட துகள்களை காட்டிலும் 'ஏலியன் டஸ்ட்' ஆனது மிகவும் வேகமானதாகவும், பல்வேறு திசைகளில் படருவதாகவும் இருக்கின்றதாம்.

உடுக்களிடை :
இந்த ஏலியன் டஸ்ட்தனின் தோற்றமானது உடுக்களிடையாக (Interstellar)இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் சந்தேகிக்கப்படுகிறது.

தனித்துவம் :
கண்டுப்பிடிக்கப்பட்ட ஏலியன் டஸ்ட் ஆனது மிகவும் குழப்பாமான ஒன்றாக இருக்கும் அதே சமயம் மிகவும் தனித்துவம் வாய்ந்த விண்வெளி பொருள் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயின்ட் கேஸ் :
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மூலம் உருவான மிகபெரிய கிரகங்களை ஜெயின்ட் கேஸ் (Gaint gas)என்பர். அம்மாதிரியான கிரகங்கள் மற்றும் அதன் நிலவுகளை ஆராயும் விண்கலம் தான் காசினி. காஸ்மிக் டஸ்ட் அதாவது அண்டத்தில் கிடைக்கும் தூசிகளை வைத்து பகுப்பாய்வு நடத்தி வருகிறது.

36 தூசிகள் :
அப்படியாக அண்டத்தில் காசினி சேகரித்த தூசிகளில் 36 தூசிகள் மிகவும் சிறப்பானவைகள் ஆகும், அவைகள் எல்லாம் ஏலியன் டஸ்ட் க்ரெயின்ஸ் (Alien
Dust Grains) எனப்படுகின்றன.

வெற்றிடம் :
இவ்வகையான ஏலியன் தூசிகள் நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடத்தில் (Void) இருந்து வருகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளன.

கருத்து :
1990-ல் இஎஸ்ஏ/நாசாவின் அல்ஸெஸ் ஆய்வின் (ESA/NASA Ulysses Mission) சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்களில் இருந்து ஏலியன் டஸ்ட் கண்டறியப்பட்டது என்ற கருத்தையே வெளியிட்னர்.

இன்டர்ஸ்டெல்லார் இன்டர்லோபெர்ஸ் :
அதன் மூலம் காசினி விண்கலத்தின் உதவுடன் சனி கிரகத்தின் இன்டர்ஸ்டெல்லார் இன்டர்லோபெர்ஸ்தனை (Interstellar interlopers) கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

அதிவேகம் :
சுமார் 45,000 மைல் என்ற விகிதத்தில் விண்வெளியில் அதிவேகத்தில் பறக்கும் நுண்ணிய தூசி துகள்கள் ஆனது காசினி விண்கலத்தின் ஊடே புகுந்து செல்லும் போது தான் காசினி மூலம் கண்டறியப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

கற்களால் ஆன கூறுகள் :
காசினியின் முந்தைய கண்டுபிடிப்புகள் போல் இல்லாமல் சமீபத்திய கண்டுப்பிடிப்பானதில் ஏலியன் தூசிகள் ஐஸ்களால் அல்லாது கனிமங்களால் உருவகியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மெக்னீசியம் , சிலிக்கான் , இரும்பு மற்றும் கால்சியம் போன்றவைகளின் கலவைகளில் உருவான கற்களால் ஆன கூறுகள்.

பிரபஞ்சத்தின் பிறப்பு :
சில விண்கற்களில் காணப்படும் ஸ்டார்டஸ்ட் ஆனது நமது பிரபஞ்சத்தின் பிறப்பு முதல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதும், இதுவரையிலாக அதுபோன்ற ஏலியன் டஸ்ட்கள் காசினியிடம் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
ஏலியன்கள் தகவல்கள் அனுப்பி 'உள்ளன'..! ஆனால் அவைகள்..?!
பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications