மக்களோடு கலந்துட்டாங்க.. இப்ப நம்புவீங்களே: காருக்குள் பதுங்கி இருந்த ஏலியன்?- இதோ ஆதாரம்!

|

கூகுள் எர்த் பயன்படுத்திய போது காரின் பின் இருக்கையில் "ஏலியன்" இருப்பதை கண்டறிந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். காரின் பின் சீட்டில் நான் என்ன பார்க்கிறேன் என்று யாராவது சொல்ல முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார். இந்த புகைப்படமும் கேள்வியும் தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏலியன்ஸ் இருப்பது உண்மையா?

ஏலியன்ஸ் இருப்பது உண்மையா?

ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்ற மர்மம் நீண்டகாலமாகவே நீடித்து வருகிறது. ஏலியன்ஸ் இருப்பது உண்மை, அவர்களுக்கு மனிதகுலம் குறித்து தெரியாமல் இருப்பது நல்லது என்ற விவாதங்களும் ஏலியன்ஸ் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற விவாதங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

வேற்றுகிரகவாசிகள், ஏலியன்ஸ்கள் இருப்பது உண்மை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல தகவல்கள் வெளிவந்தாலும். அதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

பதில் தெரியாத கேள்விகள்

பதில் தெரியாத கேள்விகள்

பல கேள்விகள் இந்த தொழில்நுட்ப முன்னேற்ற காலத்திலும் இன்னும் கேள்விகளாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பதற்கு இப்போது வரை பதில் இல்லை. அதேபோல் தான் ஏலியன்ஸ் குறித்த கேள்விகளும்.

கோழியும் உள்ளது முட்டையும் உள்ளது என்பது போல் ஏலியன்ஸ்கள் போன்ற புகைப்படங்கள் உள்ளது. ஆனால் உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

காரில் சிக்கிய ஏலியன் உருவம்

காரில் சிக்கிய ஏலியன் உருவம்

அதன்படி கிரிஸ்டல் பேட்டர்சன் என்ற பெண் கேரேஜ் கடையை கண்டறிய மேப்பிங் தளத்தை பயன்படுத்திய போது ஒரு ஏலியன் புகைப்படம் சிக்கி இருக்கிறது. கூகுள் எர்த் மூலம் இந்த புகைப்படம் கண்டறியப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் கூகுள் எர்த் பயன்படுத்தியதன் மூலம் இந்த புகைப்படம் வைரலாகிறது. கூகுள் எர்த் என்பது பூமியின் பல்வேறு பகுதிகளில் புவியியல் குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ள உதவும் தளமாகும்.

காரின் பின் சீட்டில் இருந்த ஏலியன்

காரின் பின் சீட்டில் இருந்த ஏலியன்

அதன்படி அமெரிக்காவில் ஒரு பெண் கேரேஜ் கடையை கூகுள் எர்த் செயலி மூலம் பார்த்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு காரை கவனித்திருக்கிறார். அந்த காரில் ஏதோ விநோதத்தை உணர்ந்த பெண் அதை ஜூம் செய்து பார்த்திருக்கிறார். அங்கு தான் அந்த பெண்ணுக்கு அதிர்ச்சிக் காத்திருந்திருக்கிறது. காரணம் அந்த காரின் பின் சீட்டில் விசித்திரமான உருவம் பதுங்கி இருப்பது தென்பட்டிருக்கிறது.

நிர்வாணமாகத் தெரியும் ஓட்டுனர்

நிர்வாணமாகத் தெரியும் ஓட்டுனர்

இந்த புகைப்படம் அமெரிக்காவின் மைனேயில் உள்ள மேப்லெட்டனில் இருந்து எடுக்கப்பட்டது. காரின் பின்புறத்தில் ஏலியன் போன்ற ஒரு உருவம் அதிர்ச்சி என்றால், இந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் நிர்வாணமாகத் தெரிகிறார் என்பது மற்றொரு அதிர்ச்சி. இந்த புகைப்படத்தையும் இதுகுறித்த கருத்தையும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் பார்க்கலாம்.

ஏலியனை பார்த்த பெண் என்ன சொன்னார்?

ஏலியனை பார்த்த பெண் என்ன சொன்னார்?

இதுகுறித்து அந்த பெண் கூறியதாக கிரிஸ்டல் டெய்லி ஸ்டாரில் வெளியான கருத்துகளை பார்க்கலாம். "அந்த காரை முதலில் பார்த்தேன். அதில் ஓட்டுனர் நிர்வமாணமாக இருப்பது போல் தெரிந்தது. வித்தியாசமாக இருக்கிறதே என்று ஜூம் செய்து பார்த்தேன், அப்போது பின் சீட்டில் இருந்த உருவம் சிதைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அது ஏலியனாக இருக்கலாம் என்பதை உணர்ந்தேன். கேரேஜ் விற்பனையை தேடிய போது நான் இதை கண்டுபிடித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்

நெட்டிசன்கள் சொன்ன கருத்துக்கள்

நெட்டிசன்கள் சொன்ன கருத்துக்கள்

இந்த புகைப்படம் குறித்து சமூகவலைதள வாசிகள் பல விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தெளிவாக ஒரு வேற்றுகிரகவாசி எனவும் எப்படி பூமியில் அதை கண்டுபிடித்தீர்கள்? எனவும் மிஸ்டர் பொட்டாட்டோ ஹெட் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏலியன்ஸ் இருக்கா.. இல்லையா?

ஏலியன்ஸ் இருக்கா.. இல்லையா?

ஏலியன் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய நாசா களமிறங்கி இருக்கிறது. பிரபஞ்சத்தின் எத்தனையோ அதிசியங்கள் படிப்படியாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி ஏலியன்ஸ் குறித்த உண்மை தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Mysterious Creature like Alien Sited in Car Back Seat: Google Earth User Posted the Pic

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X