ஸ்மார்ட்போன்களை அடுத்து MWC 2017 டெக்னாலஜி கண்காட்சியில் கவர்ந்த முக்கிய பொருட்கள்

MWC 2017 டெக்னாலஜி கண்காட்சியில் என்னென்ன பொருட்கள் முக்கியத்துவம் பெற்றன என்பது குறித்து பார்ப்போம்

By Siva
|

டெக்னாலஜி பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பார்சிலோனாவில் MWC 2017 டெக்னாலஜி கண்காட்சி மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் உலகின் முன்னணி நிறுவனங்களான எல்ஜி, நோக்கியா, லெனோவா, பிளாக்பெர்ரி, உள்பட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டன.

ஸ்மார்ட்போன்களை அடுத்து MWC 2017 டெக்னாலஜி கண்காட்சியில் கவர்ந்த முக்க

மேலும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி முன்னணி நிறுவனங்களின் கேட்ஜெட் உள்பட பல தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3, கேலக்ஸி புக் ஆகியவை இந்த கண்காட்சியின் ஹைலைட். மேலும் இந்த கண்காட்சியில் என்னென்ன பொருட்கள் முக்கியத்துவம் பெற்றன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

HP புரோ x2 ஹைப்ரிட் லேப்டாப் (HP Pro x2 hybrid laptop)

HP புரோ x2 ஹைப்ரிட் லேப்டாப் (HP Pro x2 hybrid laptop)

லேப்டாப் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான HP, விண்டோஸ் 10 ஓஎஸ்-ல் உருவானதுதான் இந்த இந்த புரோ x2 வகை லேப்டாப். எடை குறைவாகவும், அதே நேரத்தில் அழகிய வடிவத்திலும் உருவக்கப்பட்ட இந்த லேப்டாப்பின் கீபோர்ட் பல மோட்களில் உள்ளது. குறிப்பாக லிங்கிங் மோட், பிரசண்டேஷன் மோட், டேப்ளட் மோட் மற்றும் கமர்ஷியல் மோட் என்ற வடிவத்தில் உள்ளதால் பார்வையாளர்களை பெரிதும் கவரந்தது

மேலும் இந்த லேப்டாப்பில் 12 இன்ஸ் FHD 1080P டிஸ்ப்ளே மற்றும் டிஸ்ப்ளேயின் மேல் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் அமைந்துள்ளது. மேலும் இண்டெல் பெண்டியம் கோர் i3, i5, i7 பிராஸசருடன் அமைந்துள்ள இந்த லேப்டாபில் 8 GB ரேம் மறும் 512 GB SSDயும் அமைந்துள்ளது. மேலும் யூஎஸ்பி போர்ட், சிம்கார்ட் ஸ்லாட் மற்றும் ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களும் வாடிக்கையாளர்களை நிச்சயம் திருப்திபடுத்தும்

மேலும் இந்த லேப்டாபில் எலக்ட்ரிக்கல் ஷாக் பாதுகாப்பு, வெப்பம் மாறினாலும் தாங்கும் தன்மை, டஸ்ட் மற்றும் தண்ணீர் உள்ளே புகாவண்ணம் உள்ள பாதுகாப்பு ஆகியவை உள்ளது. இந்த லேப்டாப்பில் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.65000 என்பது குறிப்பிடத்தக்கது

நோக்கியா 5G ஃபர்ஸ்ட்:

நோக்கியா 5G ஃபர்ஸ்ட்:

MWC 2017 ல் நோக்கியா அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு 5ஜி தொழில்நுட்பம். இவ்வருடத்திற்குள் அறிமுகம் செய்யவுள்ள அடுத்த ஜெனரேஷனுக்கான இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா அறிமுகம் செய்யவுள்ளது. நோக்கியாவின் கிளவுட் பாக்கெட் கோர், டேட்டா லேயர் உள்பட பலவற்றில் உபயோகிக்கப்படும் இந்த 5G தொழில்நுட்பம், டெக்னால்ஜி உலகில் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

ஏற்கனவே அமெரிக்காவின் வெரிஜான் மற்றும் டல்லாஸ் ஆகிய பகுதிகளில் நோக்கியா 4ஜி தொழில்நுட்ப வசதியை அளித்துள்ள நிலையில் மிக விரைவில் 5G தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்ஹ்டக்கது.

நமக்கே விபூதி அடிக்க பார்க்கும் ஜியோ, உஷாராக இருங்க மக்களே.!நமக்கே விபூதி அடிக்க பார்க்கும் ஜியோ, உஷாராக இருங்க மக்களே.!

சாம்சங் கியர் VR:

சாம்சங் கியர் VR:

இந்த MWC 2017 ல் வாடிக்கையாளர்களை கவர்ந்த இன்னொரு அம்சம் சாம்சங் கியர் VR. வெர்டியூவல் ரியாலிட்டி என்று அழைக்கப்படும் இந்த VR, ஏற்கனவே கேலக்ஸி புக், கேலக்ஸ் டேப் எஸ் 3 ஆகிய சாம்சங்க் தயாரிப்புகளுடன் வெளிவந்த உபகரணங்களில் மேம்பட்ட உபகரணம். ஒரு கையில் உபயோகப்படுத்தப்படும் வகையில் உருவாகியுள்ள இந்த VR, வித்தியாசமான டிசைனில் உள்ளது.

ஹோம், பேக், வால்யூம் கண்ட்ரோலர் ஆகியவற்றுடன் அமைந்துள்ள இந்த VR-ல் 42எம்.எம் லென்ஸ்களுடன் மைக்ரோ யூஎஸ்பி, யூஎஸ்பி போர்ட் ஆகியவை உள்ளது. இந்த VR ஹெட்செட் சாம்சங் கேலக்ஸி அனைத்து மாடல்களுக்கும் நோட்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும்

அமேசான் அலெக்ஸாவின் மோட்டோ போன்கள்;

அமேசான் அலெக்ஸாவின் மோட்டோ போன்கள்;

இந்த MWC 2017 ல் மோட்டோராலா நிறுவனம் மோட்டோ G5 மற்றும் மோட்டோ G5 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததோடு, மோட்டோரோலா மற்றும் அமேசான் ஆகியவை இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம் மோட்டோ மோட்ஸ்

இந்த அமேசான் மோட்டோ மோட், பயனாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். செய்திகளை படிக்க உதவுவது, உபேர் பயணத்தை புக்கிங் செய்வது, உள்பட பல வாய்ஸ் கட்டளைகளை இதன்மூலம் பிறப்பிக்க முடியும். மேலும் இந்த மோட்டோ பவர் பேக்கில் 50% பேட்டரியையும் சேமிக்க முஇட்யும் இதன் விலை $49 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்தவற்றில் டர்போ பவர் மோட்டோ மோட், வயர்லெஸ் சார்ஜின் மோட்டோ மோட், சார்ஜிங் அடாப்டர் ஆகியவை முக்கியமானவை ஆகும். மேலும் விரைவில் வெளியாகவுள்ள கேம்பேட் மோட்டோ மோட் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

நோக்கியாவின் ஹெல்த் அப்ளிகேசன்:

நோக்கியாவின் ஹெல்த் அப்ளிகேசன்:

நோக்கியாவின் டிஜிட்டல் ஹெல்த் அப்ளிகேசன்கள் குறித்த அறிவிப்பும் இந்த MWC 2017 கண்காட்சியில் வெளியாகியுள்ளது. நமது ஹெல்த் சம்பந்தமான குறிப்புகள், ஏற்படும் பிரச்ச்னைகள், அதற்குரிய தீர்வுகள் ஆகியவற்றை பதிவு செய்யும் அப்ளிகேசன், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எந்த உபகரணத்திலும் இணைத்து கொள்ளும் வகையிலான இந்த அப்ளிகேசன்கள் இவ்வருட மத்தியில் நோக்கியா நிறுவனத்தால் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
At the MWC 2017, many announcements were made other than the smartphones we had already covered. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X