மின்சார துறையிடம் 'கையும் கட்டிங்-பிளேடுமாக' சிக்கிய மர்ம நபர்.. என்ன செய்தார் தெரியுமா?

|

சட்டவிரோத மின் இணைப்புக்காக வீட்டை சோதனை செய்யச் சென்ற மின்சாரத் துறை குழு இந்த வீடியோவை படம்பிடித்துள்ளது. காசியாபாத்தின் முராத்நாகரில் உள்ள மின்சாரத் துறைக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் சிலர் சட்டவிரோத மின் இணைப்புகளை உருவாக்கிப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை அடையாளம் காண அந்த பகுதியில் மின்சாரத் துறை சோதனை நடத்தியது.

'கையும் கட்டிங்-பிளேடுமாக' சிக்கிய மர்ம நபர்

'கையும் கட்டிங்-பிளேடுமாக' சிக்கிய மர்ம நபர்

இந்த திடீர் சோதனையில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் சட்டவிரோத இணைப்புகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் மட்டும் தப்பிக்க முயன்ற போது, கையும் களவுமாக மின்சாரத் துறையின் கேமரா வீடியோவில் சிக்கிக்கொண்டார். கையும் களவும் என்று சொல்வதைவிட கையும் கட்டிங் பிளேடு உடன் சிக்கிக்கொண்டார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

பாம்பு போலப் பதுங்கி வந்தது இதற்கு தானா தம்பி

பாம்பு போலப் பதுங்கி வந்தது இதற்கு தானா தம்பி

சோதனைக்கு சென்ற மின்சார துறை குழு ஒரு வீட்டின் கதவைத் தட்டியது, ஆனால் அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை. ஆனால், வீட்டினுள் ஆட்கள் இருப்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். இதனால் உடனே, ஒரு அதிகாரி வீட்டிற்கு அடுத்த பால்கனியை அடைந்து வீடியோ கேமராவை ஆன் செய்து ரெக்கார்ட் செய்ய துவங்கினர். அவர் கணித்தது போல, சட்டவிரோத இணைப்பை ஏற்படுத்திய நபர் பாம்பு போலப் பதுங்கி வந்ததை அவர் படம்பிடித்துள்ளார்.

ரூ.399-க்கு வரம்பற்ற டேட்டா, குரல் அழைப்பு நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோ சிறந்த திட்டம்!ரூ.399-க்கு வரம்பற்ற டேட்டா, குரல் அழைப்பு நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோ சிறந்த திட்டம்!

கையும் களவுமாக மின்சார துறையிடம் சிக்கிய நபரின் வீடியோ

சட்டவிரோத இணைப்பை துண்டிக்க அந்த வீட்டின் குடியிருப்பாளர் புத்திசாலித்தனமாக மாடியை சத்தமில்லாமல் அடைந்தார், மேலும் அவர் கட்டிங் பிளேடு கருவியின் உதவியுடன் சட்டவிரோத இணைப்பு கம்பிகளை வெட்டப் போகையில், பக்கத்து பால்கனியில் இருந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அதிகாரியிடம் சிக்கிக்கொண்டார்.

அசாதாரண முயற்சி தோல்வியுற்றது

அசாதாரண முயற்சி தோல்வியுற்றது

காத்திருக்கும் அதிகாரி அந்த நபரிடம் அவரின் அசாதாரண முயற்சி தோல்வியுற்றது என்பதை தெளிவுபடுத்தினார். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படி சட்டவிரோதமான இணைப்புகளை மின்சார துறைக்குத் தெரியாமல் பயன்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வீடியோவில் காணப்பட்ட நபரின் மீது கடும் நடவடிக்கை

வீடியோவில் காணப்பட்ட நபரின் மீது கடும் நடவடிக்கை

வீடியோவில் காணப்பட்ட நபரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருக்கிறார்.வெப்பம் காரணமாக, மின் நுகர்வு அதிகரித்ததால் மின்சாரத்திற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. "மூத்த அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், நாங்கள் இரவும் பகலுமாக சோதனை நடத்தி ஏராளமான சட்டவிரோத இணைப்புகளை கண்டறிந்துளோம் என்று அதிகாரி கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Man Tries To Cut An Illegal Electricity Connection Get Caught On Raid Video Goes Viral on Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X