பொது கழிவறையில் இருந்து வெளிவந்த சிங்கம்.. குவியும் பாராட்டுக்கள்.. வனராசாவுக்கு என்ன அவசரமோ?

|

ஜங்கிள் சஃபாரி சமயத்தில் பல விலங்குகள் மற்றும் பறவைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காண்பது என்பது மிகவும் இயல்பான ஒன்று தான். ஆனால், அதுவே மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் வனவிலங்குகளைப் பார்த்தால் அது மிகவும் வினோதமான நிகழ்வாக அமைந்துவிடும். அப்படி பொது இடங்களில் வனவிலங்குகளைப் பார்ப்பதே அரிதான நிகழ்வாகக் காணப்படும் போது, சமீபத்தில் ஒரு பொது கழிப்பறையிலிருந்து சிங்கம் வெளிவந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

பொது கழிப்பறையில் இருந்து வெளிவந்த காட்டின் ராஜா

பொது கழிப்பறையில் இருந்து வெளிவந்த காட்டின் ராஜா

பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட பொது கழிப்பறையில் இருந்து காட்டின் ராஜா வெளியில் வரும் காட்சியை ஒரு பெண் தனது ஸ்மார்ட்போனில் படம்பிடித்துள்ளார். இவர் படம் பிடித்த இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. பொது கழிப்பறையில் இருந்து சிங்கம் வெளியேறுவதை யாரும் யூகித்துக் கூட பார்த்திருக்க முடியாது.

மக்களுக்கான பொது கழிவறைக்குள் எப்படி சிங்கம் சென்றது?

மக்களுக்கான பொது கழிவறைக்குள் எப்படி சிங்கம் சென்றது?

காட்டிற்குள் சுற்றுலா பயணிகள் சஃபாரி ரைட் சென்ற போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்டிற்குள் சஃபாரி ரைட் செய்ய வரும் சுற்றுலாப் பயணிகளை திடீர் என்று இயற்கை அழைத்தாள், அவர்கள் வசதிக்காகக் காட்டிற்குள் கட்டப்பட்ட ஒரு பொது கழிவறை தான் இந்த வீடியோ பதிவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த பொது கழிவறைக்கு யாரும் எதிர்பார்த்திடாத விருந்தாளியாகக் காட்டின் ராசாவே வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய ரெட்மி 9 பிரைம் வாங்க அருமையான வாய்ப்பு.. இதவிட்ட இவ்வளவு கம்மி விலையில் மீண்டும் கிடைக்காது..புதிய ரெட்மி 9 பிரைம் வாங்க அருமையான வாய்ப்பு.. இதவிட்ட இவ்வளவு கம்மி விலையில் மீண்டும் கிடைக்காது..

வனராசாவை வாசலில் வைத்துப் படம்பிடித்த பெண்

வனராசாவை வாசலில் வைத்துப் படம்பிடித்த பெண்

காட்டிற்குள் இருக்கும் பொதுக் கழிப்பறைக்கு இந்த சிங்கம் எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பொது கழிவறைக்குள் சிங்கம் இருப்பதை ஒரு பெண் சுற்றுலாப் பயணி கவனித்துள்ளார். இதனால் அவர் உடனடியாக அவரின் ஸ்மார்ட்போனை எடுத்து வீடியோ ரெக்கார்டிங் செய்யத் துவங்கியுள்ளார். நகரும் காரில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை வீடியோ பதிவு தெளிவாகக் காட்டுகிறது.

கம்பீரமாக பொது கழிவறை கதவை விட்டு வெளிவந்த சிங்கம்

கம்பீரமாக பொது கழிவறை கதவை விட்டு வெளிவந்த சிங்கம்

அந்த பெண் அமர்ந்திருக்கும் கார், பொது கழிவறையை நெருங்கும்போது, ​சிங்கம் கம்பீரமாகக் கதவை விட்டு வெளியே வருவதை நீங்கள் வீடியோவில் காணலாம். வீடியோவின் பின்னணியில், பலர் ஆச்சரியமாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. அநேகமாக அவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை சஃபாரி காருக்குள் இருந்தபடி கண்டுள்ளனர் என்பது தெரிகிறது. இந்த வீடியோவை பதிவு செய்த பெண் அதை நகைச்சுவை கலந்த கேப்ஷன் உடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முடிவை இன்றே எடுங்கள்- ரூ.8,799 முதல் உச்ச அம்ச ஸ்மார்ட்போன்கள்- அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை!முடிவை இன்றே எடுங்கள்- ரூ.8,799 முதல் உச்ச அம்ச ஸ்மார்ட்போன்கள்- அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை!

இயற்கை வனராசாவையும் அவசரமாக அழைத்ததா?

இயற்கை வனராசாவையும் அவசரமாக அழைத்ததா?

"லூ எப்போதும் மனிதர்களுக்குப் பாதுகாப்பானது அல்ல, சில சமயங்களில் மற்றவர்களும் இதைப் பயன்படுத்தலாம்" என்று அவரின் கேப்ஷன் குறிப்பிடுகிறது. இந்த வீடியோவை இதுவரை 17.6K நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர் மற்றும் ரீட்வீட் செய்துள்ளனர். ஒரு பொது கழிப்பறையில் ஒரு அசாதாரண விலங்கு தோன்றியதைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட்டாலும், மற்றவர்கள் வேறு சில கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.

கண்ணியமான காட்டு ராசா

இனி நாம் ஒரு காட்டு சஃபாரி பயண சமயத்தில் நம்மை இயற்கை அவசரமாக அழைத்தாலும், எந்தவொரு பொது கழிப்பறையையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். அதேபோல், மற்றொருவர் இந்த சிங்கத்தை மிகவும் கண்ணியமான சிங்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், இன்னும் ஒரு பயனர் இந்த சிங்கத்தை பார்த்தாவது சிலர் திருந்த வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளார்.

ஸ்டோரேஜுக்கு இனி ஹார்ட் டிரைவ் தேவையில்லை.. DNA சேவை போதும்.. எதிர்காலத்தின் மிரட்டலான கண்டுபிடிப்புஸ்டோரேஜுக்கு இனி ஹார்ட் டிரைவ் தேவையில்லை.. DNA சேவை போதும்.. எதிர்காலத்தின் மிரட்டலான கண்டுபிடிப்பு

குவியும் பாராட்டிற்கான காரணம்

குவியும் பாராட்டிற்கான காரணம்

காரணம், அவர் இந்த சிங்கம் ஆண் என்பதனால், அது மிகவும் சரியான ஆண்கள் கழிவறையைப் பயன்படுத்தியுள்ளது என்று நெட்டிசன்கள் பாராட்டியுள்ளார். வனராசாவுக்கு என்ன அவசரமாக இருந்தாலும், அது சில மனிதர்களை போல் திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, பொறுப்பாக பொது கழிவறையைப் பயன்படுத்தியுள்ளது என்று நகைச்சுவையுடன் கமெண்ட் செய்துள்ளார். வனராசாவுக்கு என்ன அவசரமோ கண்ணுக்குத் தெரிந்த பொது கழிவறையைப் பயன்படுத்தி பிரபலம் ஆகிவிட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lion Walks Out Of Public Toilet Video Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X