150 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியம்.. பெண்ணின் கையில் இருந்த iPhone! டைம் டிராவலர் உண்மையா?

|

90ஸ் கிட்ஸ் அரிய அறிமுகமானது தான் ஸ்மார்ட்போன்கள். கீபோர்ட் போன்கள் அழிந்து ஸ்மார்ட்போன்கள் உருவாகிய காலத்தை 90ஸ் கிட்ஸ் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் 150 ஆண்டுக்கு முன்பே ஸ்மார்ட்போன் இருந்திருக்கிறது, அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? தகவலை பார்க்கலாம் வாங்க.

மனிதர்களை ஆட்கொள்ளும் ஸ்மார்ட்போன்கள்..

மனிதர்களை ஆட்கொள்ளும் ஸ்மார்ட்போன்கள்..

1993 ஆம் ஆண்டு தான் ஐபிஎம் ஆல் வடிவமைப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் வெளியானது. இதில் காலண்டர், அட்ரஸ் புக், கால்குலேட்டர் உள்ளிட்ட பிற அடிப்படை அணுகலுடன் டச் ஸ்க்ரீன் ஆதரவும் இடம்பெற்றிருந்தது.

அந்த காலக்கட்டத்தில் பெரிதாக பேசப்பட்ட இந்த சாதனம் தற்போது யூஸ் அண்ட் த்ரோ பொருளாக மாறி வருகிறது என்றால் அது மிகையல்ல.

ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன் மனிதர்களை ஆட்கொண்டு வருகிறது.

சிந்திக்கும் தன்மைக்கு முற்றுப்புள்ளி

சிந்திக்கும் தன்மைக்கு முற்றுப்புள்ளி

ஒரு தகவலை அறிய வேண்டும் என்றால் மூளையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, இதற்கெல்லாம் எதுக்கு சிந்தித்துக் கொண்டு கூகுள் பண்ணால் தெரியப் போகிறது என உடனே ஸ்மார்ட்போனை தான் எடுக்கிறோம்.

மனிதர்களின் இரண்டாவது மூளையாகவே ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போன் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த ஓவியத்தில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கிறது.

150 ஆண்டுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியம்..

150 ஆண்டுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியம்..

150 ஆண்டுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியத்தில் உள்ள பெண்ணின் கையில் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு பொருள் இடம்பெற்றுள்ளது. இதற்கு பலவிதமான கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முதலில் அந்த ஓவியத்தில் உள்ள காட்சி விளக்கத்தை பார்க்கலாம்.

அழகான காட்டு வழிப் பாதையில் பெண் ஒருவர் நடந்து வருகிறார். அவருக்கு முன் ஆண் ஒருவர் கையில் பூ உடன் காதல் சொல்ல காத்திருப்பது போல் அமர்ந்துக் கொண்டிருக்கிறார். அதை கவனிக்காமல் அந்த பெண் கையில் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு பொருளை உபயோகித்தப்படி நடந்து வருகிறாள்.

இந்த ஓவியம் தான் தற்போது சமூகவலைதளத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

தலைப்புக்கு காரணம் என்ன?

தலைப்புக்கு காரணம் என்ன?

1860 ஆம் ஆண்டு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை வரைந்தவர் Ferdinand George Waldmuller ஆவார். "The Expected One" என்ற தலைப்பில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

"The Expected One" என்று குறிப்பிட காரணம் என்ன என்று தெரியவில்லை. அந்த ஆண்மகன் பெண்ணின் வருகைக்காக காத்திருக்கிறாரே அதை தான் Expected One என்று குறிப்பிடுகிறாரா? அல்லது பெண்களின் கையில் மொபைல் போன் எதிர்காலத்தில் என்பதை Expected One என்று குறிப்பிடுகிறாரா? என்பது தெரியவில்லை.

கையில் இருப்பது ஸ்மார்ட்போன் தான்..

கையில் இருப்பது ஸ்மார்ட்போன் தான்..

150 ஆண்டுக்கு முன்பு வரையப்பட்ட இந்த ஓவியத்தில் பெண்ணின் கையில் இருப்பது ஸ்மார்ட்போன் தான் என இணைய வாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் இது ஐபோன் போன்று இருக்கிறது எனவும், ஐபோன் தான் எனவும் குறிப்பிடுகின்றனர்.

ஐபோன் 2007 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது, இந்த ஓவியம் வரைந்தது 1860 என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

டைம் டிராவல் உண்மையா?

டைம் டிராவல் உண்மையா?

ஓவியர் ஃபெர்டினாண்ட் ஜார்ஜ் இந்த வினோதமான ஓவியத்தை வரைய டைம் டிராவல் செய்திருக்கிறார் எனவும் இதன் காரணமாகவே பெண்ணின் கையில் ஸ்மார்ட்போன் வைத்து தி எக்ஸ்பெக்டட் ஒன் என தலைப்பு வைத்திருக்கிறார் என சமூகவலைதள வாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

நிபுணர்கள் கருத்து

நிபுணர்கள் கருத்து

ஐபோன், டைம் டிராவல் என பல கருத்துகளை சமூகவலைதள வாசிகள் குறிப்பிட்டு வரும் நிலையில், ஓவியத்தில் பெண்ணின் கையில் இருக்கும் பொருள் என்னவென்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பொருள் பிரார்த்தனை புத்தகமாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். பிரார்த்தனை புத்தகம் சிறிய வடிவில் குட்டியாக இதேபோன்ற வடிவமைப்புடன் அந்த காலத்தில் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதுவாகக் கூட இருக்கலாம்..

இதுவாகக் கூட இருக்கலாம்..

மேலும் சிலர் இந்த ஓவியத்தில் உள்ள பொருள் முகம் பார்க்கும் கண்ணாடி என குறிப்பிடுகின்றனர். முகம் பார்க்கும் சிறிய வடிவில் இதேபோன்ற வடிவமைப்புடன் அந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

Pic: Wikimedia Commons Hajotthu

Best Mobiles in India

English summary
Smartphone Appeared in 150 year old painting: Is this Time Travel Reflection?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X