தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.! இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!

|

தொழில்நுட்பம் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கம் ஆகியுள்ளது. ஸ்மார்ட்போன், லேப்டாப், இன்டர்நெட் போன்ற அம்சங்கள் இல்லாமல், யாராலும் இந்த காலகட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதே உண்மை.

தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.!

நமது வாழ்வில் அங்கமாகிப் போன இந்த தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள வேடிக்கையான உண்மைகளை அறிந்தால் நிச்சயம் உங்களுக்குப் பிரமிப்பாகவே இருக்கும். சரி வாங்கத் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகளைப் பார்க்கலாம்.

1. கூகுள் பெயர் பின்னால் ஒளிந்துள்ள உண்மை இதுதான்!

1. கூகுள் பெயர் பின்னால் ஒளிந்துள்ள உண்மை இதுதான்!

நாம் இன்று பயன்படுத்திக்கொண்டிருக்கும் கூகுள் என்ற பெயர் தற்செயலாக உருவாக்கப்பட்டது. அதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் கூகுள் என்பது கூகோல் என்பதற்குப் பதிலாகத் தவறுதலாக உருவாக்கப்பட்ட ஒரு பெயர். கூகோல் (Googol) என்பது பெரிய எண் 1க்கு பின்னால் 100 பூஜ்ஜியத்தைக் கொண்ட எண் என்பது பொருள், அத்தனை பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பிழையினால் உருவான பெயரைத்தான் நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம்.

2. எலக்ட்ரானிக் பிரைன்ஸ் என்றால் என்ன தெரியுமா?

2. எலக்ட்ரானிக் பிரைன்ஸ் என்றால் என்ன தெரியுமா?

1950களில் பர்சனல் கம்ப்யூட்டர்கள் "எலக்ட்ரானிக் பிரைன்ஸ்" என்றே பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. விசித்திரமான பெயர்.

3. வேர்ல்டு வைடு வெப் (WWW) பற்றிய வேடிக்கையான உண்மை

3. வேர்ல்டு வைடு வெப் (WWW) பற்றிய வேடிக்கையான உண்மை

நாம் பயன்படுத்தி வரும் வேர்ல்டு வைடு வெப்பைக் காட்டிலும் ஈமெயிலிற்கு வயது அதிகம் என்பது தான் உண்மை.

4. கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள வேடிக்கையான ஒற்றுமை தெரியுமா?

4. கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள வேடிக்கையான ஒற்றுமை தெரியுமா?

ஹெச்பி, கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற அனைத்து நிறுவனங்களும் ஐடி நிறுவனங்கள் என்ற ஒரு ஒற்றுமையைத் தவிர வேறு ஒரு வேடிக்கையான ஒற்றுமையும் உள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் வாகன கேரேஜில் உருவாக்கப்பட்டவை என்பதே அது.

5.பில் கேட்ஸின் வீடு எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா?

5.பில் கேட்ஸின் வீடு எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா?

பில் கேட்ஸின் வீடு வடிவமைக்கப்பட்டது, மேக் கணினியைப் பயன்படுத்தித் தான் என்ற வேடிக்கையான உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால் இது பில் கேட்ஸிற்கு மட்டும் தெரியும்.

6. கம்ப்யூட்டர் வைரஸ் பற்றிய வேடிக்கை உண்மை

6. கம்ப்யூட்டர் வைரஸ் பற்றிய வேடிக்கை உண்மை

ஒவ்வொரு மாதமும் சுமார் 6000 புதிய வைரஸ்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன என்பது சற்று வேடிக்கையான உண்மை தான். அப்போ இன்றைய தேதி வரை எத்தனை கோடி வைரஸ்கள் இணையத்தில் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

7. தொழில்நுட்பம் மேல் பயம் கொண்டவர்களும் உண்டு தெரியுமா?

7. தொழில்நுட்பம் மேல் பயம் கொண்டவர்களும் உண்டு தெரியுமா?

டெக்னோபோபியா என்பது தொழில்நுட்பத்தின் மேலான பயம், நோமோபோபியா என்பது மொபைல் போன் இல்லாமல் இருப்பதற்கான பயம், சைபர்ஃபோபியா என்பது கணினிகளின் மேல் உள்ள பயம். இந்த பயங்கள் உள்ளவர்கள் மட்டுமே தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் உள்ளனராம்.

8. விண்டோஸின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

8. விண்டோஸின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

நாம் பயன்படுத்தும் விண்டோஸின் அசல் பெயர் "இன்டெர்பேஸ் மேனேஜர்" ஆம். அப்போ விண்டோஸ் எப்படி வந்துச்சு?

9. நீங்கள் பிறக்கையில் இணையதளத்திற்கு என்ன வயது என்று தெரியுமா?

9. நீங்கள் பிறக்கையில் இணையதளத்திற்கு என்ன வயது என்று தெரியுமா?

இணையதளத்திற்கு வயது 10,000+ நாட்களாம், நீங்கள் பிறந்த தினத்தன்று இணையதளத்திற்கு என்ன வயது என்று அறிய இங்கே கிளிக் செய்யுங்கள். இணையதள வயது.

2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!

10. QWERTY கீபோர்டு பின்னால் ஒளிந்துள்ள உண்மை

10. QWERTY கீபோர்டு பின்னால் ஒளிந்துள்ள உண்மை

QWERTY கீபோர்டு உண்மையில் உங்களை மெதுவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமாக டைப் செய்ய விரும்பினால் Dvorak Keyboard ஐ முயற்சி செய்து பாருங்கள்.

11. உலகின் மிகப் பெரிய ஹார்டு டிரைவ் எவ்வளவு ஸ்டோரேஜ் தெரியுமா?

11. உலகின் மிகப் பெரிய ஹார்டு டிரைவ் எவ்வளவு ஸ்டோரேஜ் தெரியுமா?

தற்பொழுது, உலகின் மிகப் பெரிய ஹார்டு டிரைவ் ஸ்டோரேஜ் 60TB SSD ஆகும்.

12. ஆப்பிள் பற்றிய வேடிக்கையான உண்மை

12. ஆப்பிள் பற்றிய வேடிக்கையான உண்மை

ஆப்பிள் II வெளியிடப்பட்டபொழுது அதில் வழங்கப்பட்ட ஸ்டோரேஜ் வெறும் "5 மெகா பைட்டு"கள் மட்டுமே.

ஏலியன்களின் ஸ்பேஷிப் வெளிப்படையாக போட்டு உடைத்தார் அதிபர் டிரம்ப்.!ஏலியன்களின் ஸ்பேஷிப் வெளிப்படையாக போட்டு உடைத்தார் அதிபர் டிரம்ப்.!

13. கணினி பற்றிய நீங்கள் அறியாத உண்மை

13. கணினி பற்றிய நீங்கள் அறியாத உண்மை

உலகின் முதல் கணினி கிட்டத்தட்ட 2.5 மீட்டர் உயரமும் சுமார் 30,000 கிலோ எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

14. சிமிட்டா நொடிகள்

14. சிமிட்டா நொடிகள்

சராசரி கணினி பயனர் ஒரு நிமிடத்திற்கு 7 முறை கண்களைச் சிமிட்டுகின்றனராம், இது சாதாரண விகிதமான 20 முறையை விடக் குறைவு என்பது வேடிக்கையான உண்மை.

15. கம்ப்யூட்டர் மவுசு முதலில் எதில் உருவாக்கப்பட்டது தெரியுமா?

15. கம்ப்யூட்டர் மவுசு முதலில் எதில் உருவாக்கப்பட்டது தெரியுமா?

கம்ப்யூட்டர் மவுசு முதலில் டக் ஏங்கல்பார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு மரத்திலிருந்து செதுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாம்.

உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்!உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Intresting Fun Facts About Technology : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X