இந்திய வான்படை பெருமைப்பட வைக்கும் உண்மைகள்.!!

Written By:

இந்திய பாதுகாப்பு படைகளில் ஒரு அங்கமாக வான்படை இருக்கின்றது. இப்படையானது எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை பாதுகாக்க பணியாற்றி வருகின்றது. உலகளவில் 4வது பெரிய படையாக இருக்கின்றது. இது அனைவரும் அறிந்த தகவல்கள் தான், ஆனால் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட்

லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட்

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிட்டெட் இந்த திட்டத்தை 1983 ஆம் ஆண்டு துவங்கியது. இனிஷியல் ஆப்பரேஷன் க்ளியரன்ஸ் பெற்ற பின் டெஜாஸ் ஜனவரி 10 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு ஃபைனல் ஆப்பரேஷன் க்ளியரன்ஸ் பெற்றது.

நிறுவனம்

நிறுவனம்

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பொது பிரிவில் இந்நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகின்றது. எனினும் இது பாகிஸ்தான் விமான படையை விட தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்ஷல்

மார்ஷல்

இந்திய வான்படையின் முதல் பெண் மார்ஷல் பத்மாவதி பன்டோபத்யே ஆவார்.

வான்படை மார்ஷல்

வான்படை மார்ஷல்

இந்திய வான்படையின் மார்ஷல் பதவி தான் விமான படையின் உயர் பதவி ஆகும். இது இந்திய ராணுவ படை தளபதிக்கு நிகரான பதவி என்பதோடு இந்த பதவியை இன்று வரை ஒருவர் மட்டுமே எட்டியிருக்கின்றார். இப்பதவியை பெற்றவர் அர்ஜன் சிங் ஆவார்.

இடம்

இடம்

இந்திய வான்படை உலகளவில் 4வது தலைசிறந்த விமான படை ஆகும்.

கருட் கமான்டோ படை

கருட் கமான்டோ படை

இந்து மதத்தில் சிறப்புமிக்க கருட பறைவையை தழுவி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய வான்படையில் கருட் கமான்டோ படையில் 1500 வீரர்கள் இருக்கின்றனர், இவர்கள் சிக்கலான திட்டங்களை சரியாக முடிக்க பேருதவியாக இருக்க வழி செய்வர்.

பரம் விர் சக்ரா

பரம் விர் சக்ரா

இந்திய வான்படையில் பரம் விர் சக்ரா பெற்ற ஒரே வீரர் நிர்மல்ஜித் சிங் செக்கான் மட்டுமே ஆவார்.

வான்படை தளம்

வான்படை தளம்

உலகின் உயரிய வான்படை தளம் இந்திய வான்படைக்கு சொந்தமானது. தரையில் இருந்து சுமார் 22,000 அடி உயரத்தில் சியாச்சின் கிளேஷியர் பகுதியில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.

லோகோ

லோகோ

இந்திய வான்படை விமானங்களில் இருக்கும் சின்னம் 1933 ஆம் ஆண்டில் இருந்து இது வரை சுமார் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளது.

தொடரும்

விரைவில்

இந்திய வான்படை சார்ந்த அனைத்து தகவல்களையும் ஒரே தொகுப்பில் நிறைவு செய்ய முடியாது. இந்திய வான்படையின் வியக்க வைக்கும் பல்வேறு தகவல்கள் மற்றும் ஓர் தொகுப்பில் தொடரும்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Interesting Facts About Indian Air Force You Never Knew Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot