கனவு நிஜமானது.! டைம் மெஷின் வடிவமைக்கும் முறை கண்டுபிடிப்பு.!?

By Meganathan
|

கனவு காண்பது உண்மையில் ஓர் நல்ல அனுபவம் ஆகும். நிஜத்தில் செய்ய முடியாத பல காரியங்களை கனவில் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன் துவங்கி இன்று வரை வெறும் கனவாகவே இருந்து வரும் விஷயம் தான் டைம் டிராவல் அதாவது காலப் பயணம். சிறு வயது நினைவுகளை பின்னோக்கி சென்று நேரில் காணும் அனுபவம் இன்றும் சிலருக்கு கனவாக வரலாம்.

காலப் பயணம் சார்ந்த மர்மங்கள் விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கும். ஆனால் இது அறிவியலும் இல்லை, பள்ளியில் கற்பிக்கப்படும் கணக்கும் இல்லை. இருந்தாலும் காலப் பயணம் சார்ந்த தகவல்கள் உண்மையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கும்.

ஈர்ப்பு அலை

ஈர்ப்பு அலை

1915 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கணித்த ஈர்ப்பு அலை சார்ந்த கோட்பாடுகள் குறித்த விரிவான தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளன.

ஆய்வு

ஆய்வு

இத்தகவல்களானது சோதனை மற்றும் எதிர்கால ஆயு்வகள் மூலம் பிரபஞ்சம் சார்ந்து பல்வேறு ரகசியங்களை உடைக்கும் என கூறப்படுகின்றது.

உண்மை

உண்மை

வரலாற்றில் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் நினைவுச்சின்ன கண்டுபிடிப்புகள் இதனுடன் தொடர்பு பெற்றிருப்பதால் இது உண்மை என இயற்பியலாளர்கள் நம்புகின்றனர்.

தொடர்பு

தொடர்பு

திணிவு மற்றும் ஈர்ப்பு அலைக்கும் தொடர்பு இருப்பது ஐசக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததில் இருந்தே நாம் நன்கு அறிந்த ஒன்றே.

நிலவு

நிலவு

இந்நிகழ்வானது, ஆப்பிள் தரையில் விழுவதும், நிலவு பூமியில் விழுவதும் ஒன்று தான் என ஐசக் நியூட்டனை நினைக்க தூண்டியது. ஈர்ப்பு அலை மூலம் இது அனைத்து விஷயங்களிலும் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.

நேரம்

நேரம்

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐன்ஸ்டைன் தனது சார்புப் கோட்பாடு மூலம் திணிவு மற்றும் ஈர்ப்பு அலைகளுக்கும் நேரத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

ஆய்வு

ஆய்வு

1879 ஆம் ஆண்டு பிறந்த ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டு தனது ஆய்வு மூலம் உலகம் ஒளியை பார்க்கும் முறையையே மாற்றியமைத்தது. ஒளி மற்றும் நீரின் அலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ஒளி அலைகளின் தன்மை அறிந்து கொள்ள முடிந்தது.

பித்தேகோரசு தேற்றம்

பித்தேகோரசு தேற்றம்

பள்ளியில் நீங்கள் பயின்ற பித்தகோரசு தேற்றம் மற்றும் ஐன்ஸ்டைனின் டைலேஷன் ஃபார்முலா உதவியோடு ஒருவர் பயணிக்கும் போது நேரம் குறையும் என்பதை அறிய முடியும்.

நேரம்

நேரம்

ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளின் படி காலப் பயணத்தில் நேரத்தை குறைக்க அதிவேகமாக நகர வேண்டும். உதாரணமாக பூமியில் இருந்து 2020 ஆம் ஆண்டு கிளம்பி 2052 ஆம் ஆண்டு வரை பயணம் செய்ய திட்டமிடும் போது ஒளியின் வேகத்தில் 95 சதவீத வேகத்தில் பயணிக்க வேண்டும். அதாவது நொடிக்கு சுமார் 285,000 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும்.

குறைவு

குறைவு

இந்நிலையில் திரும்ப வரும் போது உங்களது கடிகாரத்தில் நேரம் 2030 என காட்டும், அதாவது பூமியில் 2052 ஆம் ஆண்டு இருக்கும். இச்சமயம் நீங்கள் கிளம்பிய போது உங்களது சம வயதினரை விட நீங்கள் 22 ஆண்டுகள் இளமையாக இருப்பீர்கள்.

சாத்தியம்

சாத்தியம்

ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது, நொடிக்கு 285,000 கிமீ என்பது அதிவேகத்தை விட அதிக வேகம் ஆகும். தற்சமயம் பூமியில் இருக்கும் வாகனமானது நொடிக்கு 1 கி.மீ வேகத்தில் கூட செல்ல முடியாது. பூமியை விட்டு விண்வெளி செல்லும் விண்கலம் கூட நொடிக்கு 10 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லும்.

தகுதி

தகுதி

ஒரு வேலை இத்தகைய வேகத்தில் பயணம் செய்தாலும், இத்தகைய வேகத்திற்கு நம் உடல் ஒத்துழைக்க வேண்டும். இதனால் காலப் பயணம் என்பது சாத்தியம் என்றாலும், தற்சமயம் வரை இது மிகவும் கடிமான காரியம் ஆகும்.

ஃபிரான்க் டிப்லர்

ஃபிரான்க் டிப்லர்

காலத்தில் பின்னோக்கி பயணம் செய்ய உதவும் காலப் பயண இயந்திரம் ஒன்றை உருவாக்கி, இதற்கான ஆய்வு அறிக்கை ஒன்றை ஃபிரான்க் டிப்லர் வெளியிட்டார்.

1974

1974

1974 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆய்வு அறிக்கையில் காலப் பயண இயந்திரம், டிப்லர் சிலண்டர் எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.

தேவையானவை

தேவையானவை

காலப் பயண இயந்திரம் அதாவது டைம் மெஷின் கருவியை உருவாக்க அதிகப்படியான பணம், மிகப்பெரிய நீள் உருளை. மிகப்பெரிய என்றால் 100 கிமீ நீளம் கொண்ட உருளை தேவைப்படும். உருளையில் சூரியனுக்கு நிகரான பொருன்மை இருக்க வேண்டும். மேலும் இது இறுக்கமாக மூடப்பட்டிருப்பது அவசியமாகும்.

சுழல்

சுழல்

இவை முடிந்ததும் நீள் உருளையை அதிவேகமாக சுழல செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புவி மற்றும் நேரம் பாதிக்கப்பட்டு ஈர்ப்பு அலைகளில் மாற்றம் காணப்படும்.

உடல் நலம்

உடல் நலம்

இவ்வாறு செய்யும் போது உடலுக்கு பாதிப்பு ஏற்படும். பூமியின் திணிவு நம்மை இழுக்கும், இது நம் உடலுக்கு பேராபத்தை விளைவிக்கும், இதனால் நம் உடல் முழுவதும் நசுக்கப்படும் அபாயமும் இருக்கின்றது.

வினோதம்

வினோதம்

உடல் நசுங்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் போது இந்த கருவியானது காலத்தில் பின்னோக்கி செல்ல நேரத்தின் திசையை தகர்க்கும் என்பதால் உருளையின் சுழலுக்கு ஏற்ப உங்களால் சில காலம் பின்னோக்கி செல்ல முடியும். மீண்டும் திரும்பி செல்ல உருளையை விட்டு நகர்ந்தாலே போதுமானது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

டைம் டிராவல் : மறைக்கப்பட்ட ஒரு கருப்பு சரித்திரம்..!

டைம் மெஷின் இருப்பதை உணர்த்தும் 'சிக்கலான' ஆதாரங்கள்..!!

டைம் டிராவல் : 2050க்கு போகலாமா.??

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to build a time machine Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X