Home
Miscellaneous

குவியும் ஆதாரங்கள் : ஹிட்லரின் ரகசியமான ப்ளையிங் சாசர்..!

By Muthuraj

ஹிட்லரின் படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள பிரதேச போர் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்கும் அதே சமயம், மென்மேலும் போர் களங்களை வெற்றிகரமாய் கைப்பற்ற உதவும் 'வார்-வின்னிங் சூப்பர் வெப்பன்'களை (war-winning super-weapon) அதிகம் உருவாக்க உத்தரவிட்டார் ஹிட்லர்..!

அதாவது, வி2 ராக்கெட்டுகள் மற்றும் முதல் தலைமுறை ஜெட் போர் விமானங்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களில் ஹிட்லரின் மிகவும் ரகசிய ஆயுதமான ப்ளையிங் சாசர் மிகவும் மர்மமான ஒரு விடயமாகவே இன்றுவரை நீடிக்கிறது. ப்ளையிங் சாசர் - நிஜமாகவே உருவாக்கம் பெற்றதா அல்லது ஒரு கட்டுக்கதையா என்ற குழப்பத்திற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.!

குண்டு வீச :

குண்டு வீச :

லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் குண்டு வீசுவதற்காக, ஜெர்மனியானது பறக்கும் சாசரை வடிவமைக்க திட்டமிட்டது.

ப்ளையிங் சாசர் :

ப்ளையிங் சாசர் :

அப்படியாக, மணி-வடிவ பறக்கும் பொருளாக, அதாவது ஏலியன்களின் பறக்கும் தட்டு போலிருக்கும் வடிவமைப்பில் ப்ளையிங் சாசர் ஆனது நாஜிக்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

யூஎப்ஒ :

யூஎப்ஒ :

முன்னாள் போலாந்து பத்திரிகையாளர் ஒருவர் ஜெர்மானியர்கள் யூஎப்ஒ எனப்படும் பறக்கும் தட்டு ஒன்றை உருவாக்குகின்றனர் என்று கூறி கோட்பாடு உருவாக்கியுள்ளார்.

முன்மாதிரி :

முன்மாதிரி :

இதுதான் ஜெர்மன் யுஎஃப்ஒ-வின் முன்மாதிரி (Prototype of a German UFO) என்று இன்டர்நெட்டில் வெளியாகி வைரல் ஆன புகைப்படம்..!

பறக்கவிடப்பட்டு இருக்கலாம் :

பறக்கவிடப்பட்டு இருக்கலாம் :

அதனை தொடர்ந்து ஹிட்லரின் நாஸி விஞ்ஞானிகள் மூலம் ப்ளையிங் சாசர் விமான வகையானது உண்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் மிகவும் அதிநவீன ஆயுதமான இது பறக்கவிடப்பட்டு இருக்கலாம் என்றும் கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

நிரூபிக்கும் ஆதாரங்கள் :

நிரூபிக்கும் ஆதாரங்கள் :

இந்த ப்ளையிங் சாசர் ரகசிய திட்டமானது நிகழ்ந்துள்ளது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களும் இருக்கின்றன.

சாட்சிகள் :

சாட்சிகள் :

அந்த ஆதாரங்களில் குறிப்பாக, 1944-ல் தேம்ஸ் மீது மிகவும் குறைவான உயரத்தில் ஜெர்மன் இராணுவத்தின் இரும்பு கிராஸ் குறியீடு கொண்ட ஒரு பறக்கும் தட்டை பார்த்ததாய் சாட்சிகள் உள்ளன.

 செய்தி கட்டுரை :

செய்தி கட்டுரை :

அது மட்டுமின்றி அப்போது வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மர்மமான பறக்கும் தட்டு' சார்ந்த செய்தி கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.

மர்மமான கருவி :

மர்மமான கருவி :

அக்கட்டுரையுடன் சேர்த்து நகரத்தின் மிக உயரமான கட்டங்களுக்கு மேல மிகவும் வேகமாக (high speed) பறக்கும் மர்மமான கருவியின் புகைப்படமும் வெளியானது.

அமெரிக்கர்கள் :

அமெரிக்கர்கள் :

மேலும் "ஜெர்மானிய பறக்கும் தட்டு ஆயுதமாக ப்ளையிங் சாசர் என்பது நிச்சயமாக இருக்கிறது என்று அமெரிக்கர்கள் அதிகம் நம்புகிறார்கள்" என்றும் அக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

தரவு :

தரவு :

உடன், ப்ளையிங் சாசர் உருவாக்கம் பற்றிய பெரும்பாலான தரவுகளை (Paper works) ஜெர்மானியர்கள் அழித்துவிட்டனர் என்றும் அக்கட்டுரை தெரிவித்துள்ளது.

கனடா ஆய்வாளர்கள் :

கனடா ஆய்வாளர்கள் :

இருப்பினும் கூட 1960-களில் கனடா நாட்டின் பறக்கும் தட்டு ஆய்வாளர்கள் ஜெர்மனியின் ப்ளையிங் சாசர் போன்றே ஒரு பறக்கும் ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் அது பறந்ததா என்பது பற்றிய ஆதரங்கள் இல்லை.

பணி :

பணி :

ஜெர்மனியின் பறக்கும் சாசர் திட்டத்தில் ருடோல்ப் ஸ்க்ரீவர் (Rudolf Schriever) என்பவர் எஞ்சினீயர் மற்றும் டெஸ்ட் பைலட்டாகவும்,ஓட்டோ ஹபர்மோல் (Otto Habermohl) என்பவர் மற்றொரு எஞ்சினீயராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஸ்க்ரீவர் - ஹபர்மோல் :

ஸ்க்ரீவர் - ஹபர்மோல் :

அதனாலேயே பறக்கும் சாசர் திட்டமானது ஸ்க்ரீவர் - ஹபர்மோல் (Schriever-Habermohl scheme) என்ற பெயரின் கீழ் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ராக் :

ப்ராக் :

1941 - 1943 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ப்ராஜக்ட் ஆனது ப்ராக்கை (Prague) மையமாக கொண்டு இயங்கியது தெரியவந்துள்ளது.

நேச நாட்டு கைதிகள் சாட்சியம் :

நேச நாட்டு கைதிகள் சாட்சியம் :

சுமார் ஆறு கெஜம் அளவில் உள்ள வெள்ளி நிற பறக்கும் சாசரை பல்வேறு காலகட்டங்களில் பலமுறை பார்த்துள்ளதாக நேச நாட்டு கைதிகள் சாட்சியம் தெரிவித்துள்ளதும் ப்ளையிங் சாசருக்கான பெரிய ஆதாரம் ஆகும்.

15 முன்மாதிரிகள் :

15 முன்மாதிரிகள் :

ப்ளையிங் சாசர் வடிவமைப்பு ப்ராஜக்டில் சுமார் 15 முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டன என்கிறார் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய மற்றொரு எஞ்சினீயர் ஆன ஜோசப் ஆன்ட்ரியாஸ் எப்.

ஜெர்மன் லஃப்ட்வேஃப் விமானம் :

ஜெர்மன் லஃப்ட்வேஃப் விமானம் :

உண்மையில் ப்ளையிங் சாசர் என்று ஒன்று கிடையவே கிடையாது பிஎம்எக்ஸ்எம்7இ மெஸ்ஸர்ஸ்ஷிமிட் 262 ஜெர்மன் லஃப்ட்வேஃப் விமானம் தான் (BMXM7E Messerschmitt 262 German Luftwaffe plane) என்றும் பலரால் நமப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி :

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி :

போருக்கு பின்பு பல ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவி புரிந்தனர் என்பதும், ப்ளையிங் சாசர் உருவாக்கம் என்ற கோட்பாட்டை உருவாக்கியது முன்னாள் போலாந்து பத்திரிகையாளரான இகோர் விட்கவ்ஸ்கி (Igor Witkowski) என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

6 பெண்களுக்கு எதிராக அமெரிக்கா செய்த வரலாற்று துரோகம்..!


1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிமு நாகரீகத்து தொலைபேசி..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Hitler's secret flying saucer Did the Fuhrer plan to attack London and New York in UFOs. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X