1000 பகுதிகளாக பிரிக்கப்பட்ட புத்தரின் உடல் மிச்சங்கள், சிக்கிய தங்கப்பேழை..!

|

கௌதமபுத்தர் - கி.மு 563-க்கும் கி.மு 483-க்கும் இடையில் வாழ்ந்தவர் ஆவார். நேபாளத்தில் ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை கண்டறிந்துள்ள அகழ்வாய்வாளர்கள் கிறிஸ்த்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தர் வாழ்ந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்..!

தற்போது சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் 1000 ஆண்டுகள் வயதான சீன பேழை ஒன்றை கண்டறிந்ர்துள்ளனர்..!

பேழை :

பேழை :

பேழைக்குள் இருந்து கிடைக்கப்பெற்ற எலும்பு துண்டுகள் ஆனது கவுதம புத்தருடையது என்று கூறுகிறது பேழையின் செதுக்கியசித்திரங்கள்.

தொகுப்பு :

தொகுப்பு :

இதன் மூலம் பேழைக்குள் இருந்த அந்த மண்டையோடு துண்டு கவுதம புத்தருடையது என்றும் உடன் உள்ள எஞ்சியுள்ள எலும்புகள் பிற புத்த துறவிகளின் தொகுப்பு என்றும் நம்பப்படுகிறது.

ஸ்தூபி :

ஸ்தூபி :

கோவிலுக்கு அடியில் ஒரு மறைவிடத்தில் இருந்த கல் பேழையை திறந்த போது அதனுள் ஸ்தூபி என்று ஒரு அழகுபடுத்தப்பட்ட சன்னதியை கண்டுபிடித்துள்ளனர். அது தியானம் செய்ய பயன்படுத்தப்படும் இடமாக இருந்திருக்கலாம்..!

பெட்டி :

பெட்டி :

கண்டுபிடிக்கப்பட்ட பேழையானது 117 சென்டிமீட்டர் உயரமும் , 45 சென்டிமீட்டர் அகலம் ( 1.5 அடி , 4 அடி) கொண்ட சந்தனக்கட்டை, தங்கம் மற்றும் வெள்ளியால் உருவான ஆபரணங்கள் பதிக்கப்பட்ட ஒரு பெட்டியாகும்..!

பெயர்கள் :

பெயர்கள் :

கண்டுபிடிக்கப்பட்ட பேழையானது 1000 சிஇ காலத்தை சேர்ந்தது என்றும், அப்பேழையை உருவாக்கியவர்கள், உருவாக்க நிதியுதவியவர்கள் மற்றும் பேழை கொண்டிருக்கும் எலும்பு துண்டுகள் ஆகியோர்களின் பெயர்களை கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி கலசம் :

வெள்ளி கலசம் :

கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் 20 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஒரு வெள்ளி கலசத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கதை :

கதை :

செதுக்கப்பட்ட கல்வெட்டுக்குள் பாதுகாக்கப்படும் இந்த கால பேழைக்குள் இருக்கும் புத்தரின் மண்டை எலும்பு கொண்ட சிறிய தங்கபேழையானது எப்படி இங்கு வந்தது என்ற கதையை சொல்கிறது.

தகனம் :

தகனம் :

புத்தர் இறந்த பிறகு அவரது உடல் ஆயிரக்கணக்கான பகுதிகளாக பிரிக்கப்பட்டபின் ஹிரன்னாவட்டி (Hirannavati) நதியில் தகனம் செய்யப்பட்டது, அதில் 19 பகுதிகள் சீனாவிற்கு கொண்டுவரப்பட்டது என்ற டெமிங் (Deming) கதை ஒன்றும் உள்ளது

ஏனைய பெளத்த துறவி :

ஏனைய பெளத்த துறவி :

அந்த துண்டுகளில் ஒன்று ஏனைய பெளத்த துறவிகளின் இணைக்கப்பெற்று இந்த தங்க பெட்டிக்குள் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பல திருப்பங்கள் :

பல திருப்பங்கள் :

பேழை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை வந்தடைவதற்க்கு இந்த பேழையின் பயணத்தில் பல திருப்பங்கள் வந்துள்ளது என்பதும் கண்டறியபட்டுள்ளது.

பேரரசர்  ஸேன்ஸோங் :

பேரரசர் ஸேன்ஸோங் :

பின்னர் இந்த கோவில் 11-ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஸேன்ஸோங் மூலம் பராமரிக்கப்பட்டு, அதன் மறைவான சன்னதியில் பாதுகாப்பாக பேழை வைக்கப்பட்டுள்ளது.

தாமரை மலர்கள் :

தாமரை மலர்கள் :

அழகுபடுத்தப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பேழைகளில் தாமரை மலர்கள், பீனிக்ஸ்கள் மற்றும் அதன் பாதுகாவலர்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.!!


6000 ஆம் ஆண்டு பழமை வாய்ந்த உலகின் முதல் வானியல் தொலைநோக்கி.!!


கண்டுபிடிப்பு : கம்போடிய காட்டில்மறைந்து கிடந்த இடைக்கால நகரங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Have archaeologists discovered Buddha's remains. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X