Subscribe to Gizbot

வானத்தில் மிதக்கும் மர்ம நகரங்கள்..? நிஜமா, வெறும் பிரமையா..?

Written By:

உலகின் பல்வேறு பகுதிகளில் ப்ளோட்டிங் சிட்டி (floating city) அதாவது வானத்தில் மிதக்கும் நகரத்தை கண்டதாக பல ஆதரங்களும், நேரடி சாட்சிகளும், எல்லாவற்றையும் விட மேலாக புகைப்பட / வீடியோ பதிவுகளே உள்ளன..!

அந்த மர்மமான மிதக்கும் நகரம் தோன்றும் ஒவ்வொரு முறையும் அதன் மீதான அதிகப்படியான புரிதலை, தெளிவை பெற அறிவியல் ஆராய்ச்சியாளரிகளும், விஞ்ஞானிகளும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். அப்படியாக, மிதக்கும் நகரம் சாத்தியம் தானா..? போலி கதைகளா..? காட்சி பிரமையா..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நைஜீரியாவில் :

#1

2011-ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஒரு சிறிய எல்லை நகரமான டராஸோவில் நூற்றுக்கணக்கான மக்கள் வானத்தில் மிதந்த ஒரு பெரிய நகரத்தை கண்டுள்ளனர்.

மெல்லிய மேகம் :

#2

அந்த நகரத்தின் தரைப்பகுதிக்கு மிக அருகில் ஒரு மெல்லிய மேகம் சூழ்ந்துள்ளது, அதனுள் மிதக்கும் நகரம் வெளியாகியுள்ளது.

இயந்திரங்களின் ஒலி :

#3

வானத்தில் வெளியான மிதக்கும் நகரத்தை நேரில் கண்ட சாட்சிகள் அதில் அழகான பெரிய கட்டிடங்கள், பெரிய கோபுரங்களை பார்த்தது மட்டுமின்றி, நகரத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயந்திரங்களின் ஒலிகளையும் கேட்டுள்ளார்.

சீனாவின் போஷன் :

#4

நைஜீரியாவை தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சீனாவின் போஷன் நகரில் இரண்டாம் முறையாக மிதக்கும் நகரம் தோன்றியது..!

'பேய் நகரம்' :

#5

ஊடக தரவுகளின்படி, சீனாவில் தோன்றிய மிதக்கும் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சிகளாக இருக்கின்றன மற்றும் அதை 'பேய் நகரம்' என்றும் நம்புகின்றனர்.

காட்சி :

#6

சீனாவில் வெளியான அந்த மிதக்கும் நகரத்தில் வானளாவிய கட்டிடங்கள் இருப்பதை சமூக வலைத்தளங்கள் துல்லியமாக காட்சிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நகர அமைப்பு :

#7

2011-ஆம் ஆண்டு, சீனாவில் தெற்கு அன்ஹுயில் உள்ள ஹுனான்ஷான் நகரில் மிகத்தெளிவாக ஒரு மாபெரும் நகர அமைப்பு கொண்ட மிதக்கும் நகரம் தோன்றியது.

கலிபோர்னியா :

#8

இப்போது சமீபத்தில் சீனாவில் இரண்டாம் முறை தோன்றிய நகரத்தை போன்றே ஒரு மிதக்கும் நகரம் கலிபோர்னியாவில் வெளியாகியுள்ளது, இதற்கும் பல நகரவாசிகள் சாட்சிகளாய் உள்ளனர்.

மூன்று கோட்பாடுகள் :

#9

மிதக்கும் மர்மமான நகரத்தை அடிப்படையாக கொண்டு இதுவரை மூன்று கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

சதியாலோசனை :

#10

ஒரு இந்த மிதக்கும் நகரங்கள் முழுக்க முழுக்க ஒரு விரிவான புரளியாக இருக்க வேண்டும் அல்லது இதுவொரு மிகவும் ரகசியமான அரசாங்க சதியாலோசனை திட்டமாக இருக்க வேண்டும் அல்லது நிஜமாகவே மிதக்கும் நகரங்கள் வேறொரு உலகத்தின் நுழைவாக இருக்க வேண்டும்.

ஒரே மாதிரியான அமைப்பு :

#11

இந்த ப்ளோட்டிங் சிட்டி சர்ச்சையில் மிக மர்மமானபகுதி என்னவென்றால் கலிபோர்னியாவில் தோன்றிய மிதக்கும் நகரமும் சீனாவில் தோன்றிய நகரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளது தான்.

அணு பிளவு பரிசோதனை :

#12

சுவிச்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் சிஇஆர்என் (CERN) மையத்தில் நடத்தப்பட்ட பெரிய ஆட்ரான் மோதுவி அணு பிளவு பரிசோதனைகள் (Large Hadron Collider ‘atom smasher') மூலம் ஏற்படுவதே இந்த மிதக்கும் நகரம் என்று சிலர் நம்புகின்றனர்.

கருந்துளை :

#13

இதுவரையிலாக கருந்துளைகளை கண்டுபிடிக்கவும், சிறிய அளவிலான கருந்துளைகளை உருவாக்கவும் தான் விஞ்ஞானிகள் உயர் ஆற்றல் வெளிக்கிடும் 'அணு பிளவை' நிகழ்த்துயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணை பிரபஞ்சம் :

#14

இதுபோன்ற முயற்சிகளின் போது சிறிய அளவிலான கருப்பு ஓட்டைகளை உருவாக்கும் சாத்தியகூறுகளுடன் நமது சொந்த பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பின் மூலம் ஒரு 'இணை பிரபஞ்சத்தை' கசிய வைக்கவும் முடியும் என்று சில விஞ்ஞானி கள் நம்புகின்றனர்.

முன்பு காணாத நிகழ்வு :

#15

இது போன்ற அறிக்கைகளால் சிஇஆர்என் சோதனைகள் மூலம் பூமி கிரகம் முன்பு காணாத பல நிகழ்வுகளை உருவாகலாம் என்று பல மக்கள் நம்புகின்றனர், குறிப்பாக இதுபோன்ற மிதக்கும் நகரங்கள்.

நாசாவின் ரகசிய திட்டம் :

#16

இது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்றும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள் கூறுகிறாரக்ள்.

இல்லுஷன் :

#17

அதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான் - ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.

ஒளியியல் மாயை :

#18

இந்த மிதக்கும் நகரங்களை பாடா மார்கனா (Fata Morgana) என்றும் சிலர் நம்புகின்றனர், அதாவது துருவ பகுதிகளின் நிலம் மற்றும் கடல்களில் தென்படும் கானல் நீர். இதுவொரு இயற்கையான ஒளியியல் மாயை ஆகும்.

காற்று அடுக்கு :

#19

பாடா மார்கனா ஆனது வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள காற்று அடுக்குகளுக்குள் நுழைந்து கடந்து செல்லும் ஒளி கதிர்களால் ஏற்படுகிறன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

#20

'டூம்ஸ்டே' எனப்படும் கடைசி நாள்..?!


எட்டு மைல் சுரங்கம் : மறைந்திருந்த வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது.!!


தீர்வில்லாத கடல் இரகசியங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

#21

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Has a parallel universe opened? Mysterious floating city REAPPEARS in the sky. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot