ரொம்ப வீக் : மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் நாசா..!

Written By:

மிகவும் மோசமான பாஸ்வேர்ட் ஆனது மிகவும் விபரீதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் சமீபத்தில் நாசாவிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஹேக் சம்பவம் ஒன்று..! சமீபத்தில், நாசாவின் 'டேட்டாபேஸ் கம்ப்யூட்டர்'களை 'ஹேக்' செய்து அமெரிக்க அரசின் ரகசிய திட்டமான விண்வெளி போர் கப்பல்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார் கேரி மெக்கின்னான்.

அதை தொடர்ந்து நாசாவிற்கு எதிராக மேலுமொரு ஹேக் சம்பவம் நிகழ்த்தப்பட்டு சுமார் 250 ஜிபி வரையிலான ரகசியமான தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
250 ஜிபி :

250 ஜிபி :

அனான்செக் என்ற ஹேக்கர் குழுவானது, நாசாவின் ட்ரோன் ஒன்றை ஹேக் செய்து சுமார் 250 ஜிபி வரையிலான நாசா சார்ந்த ரகசியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

வீடியோக்கள் :

வீடியோக்கள் :

வெளியான தகவல்களில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், விமான குறிப்புகள் மற்றும் 2,414 நாசா ஊழியர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் அடங்கும்.

தொழில்நுட்ப பாதிப்புகள் :

தொழில்நுட்ப பாதிப்புகள் :

உடன் நாசாவை ஹேக் செய்து எப்படி முறியடிக்க முடிந்தது என்பதை விளக்கும் விரிவான தொழில்நுட்ப பாதிப்புகள் குறித்த தகவல்களை ஸீன் (Zine) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது அனான்செக் ஹேக்கர் குழு.

222 மில்லியன் டாலர்கள் :

222 மில்லியன் டாலர்கள் :

அது மட்டுமின்றி ஹேக் செயலின் போது சுமார் 222 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நாசா ட்ரோனை பசிபிக் பெருங்கடலில் வீழ்த்த முயற்சி செய்ததாகவும் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பலவீனமான பாஸ்வேர்ட் :

பலவீனமான பாஸ்வேர்ட் :

ஹேக்கர்களுக்கு வெறும் 0.32 நொடிகளில் பாசிடிவ் ஹிட் கிடைக்கும் படியாக இருந்த மிகவும் மோசமான மற்றும் பலவீனமான பாஸ்வேர்ட்தான் இந்த ஹேக் சம்பவம் நிகழ்த்தப்பட காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரீன் ஷாட் :

ஸ்க்ரீன் ஷாட் :

ஹேக்கர் குழு இணைத்துள்ள ஒரு ஸ்க்ரீன் ஷாட், ட்ரோன் எப்படி அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது பின் எப்படி நாசாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது என்பதை விளக்குகிறது.

திட்டம் :

திட்டம் :

நாசாவின் நெட்வர்க்குகளை பல மாதங்களாக பின் தொடர்ந்து, அதன் பொது மற்றும் தனியார் பயணங்கள், விமானத்தளங்கள் மற்றும் விமானம் சார்ந்த பல தகவல்களை சேகரிக்கப்பட்ட பின்பே இந்த ஹேக் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கேரி மெக்கின்னான் :

கேரி மெக்கின்னான் :

நாசாவின் 'டேட்டாபேஸ் கம்ப்யூட்டர்'களை 'ஹேக்' செய்து அமெரிக்க அரசின் ரகசிய திட்டமான விண்வெளி போர் கப்பல்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய கேரி மெக்கின்னான் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?


ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா, தூக்கிடலாம் கவலை வேண்டாம்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Hackers cracked nasa drone released some data. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot