ஹோம் மினி ஸ்பீக்கரில் புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்

|

கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், தனது ஆடியோ ரசிகர்களுக்காக மிகவும் பயனுள்ள சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது தனது ஹோம் ஆப்-ல் வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டின் மூலம் பயனர், அஸிஸ்டென்ட் வசதி இருக்கும் ஸ்பீக்கர்கள் மற்றும் எந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உடனும் எளிதாக இணைக்க முடியும்.

ஹோம் மினி ஸ்பீக்கரில் புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்

ப்ளூடூத் ஸ்பீக்கரை கூகுள் ஹோம் ஆப் மூலம் எளிதில் இணைத்து, இசை மற்றும் பாடல்களை இணைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் தானாக ஒலிப்பரப்பலாம். பல்வேறு அறைகளில் உள்ள வெவ்வேறு ஸ்பீக்கர்களுடன் வாய்ஸ் கமாண்டுகள் மூலம் இணைத்து பாடல்களை ப்ளே செய்யலாம். ஆனால், வாய்ஸ் கமாண்டுகளை அஸிஸ்டெண்ட் வாயிலாக சொல்ல கூகுள் ஹோமை உபயோகிக்க வேண்டும்.

மிகச்சிறிய அப்டேட்டாக தோன்றினாலும், இசை ரசிகர்களால் பெரும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இந்த அப்டேட்டின் மூலம் 49 டாலர் கூகுள் ஹோம் மினி மேம்படுத்தப்பட்டு, மந்தமாக இருந்த ஆடியோ ஸ்பீக்கர்களை சிறப்பாக செயல்படவைத்துள்ளது.

ஆனாலும் ஹோமை போல இந்த மினி ஸ்பீக்கர் இன்னமும் அதிக பரப்பில் தன் ஒலி கேட்கும் அளவிற்கு மேம்படுத்தப்படவேண்டும். இருந்தாலும் தற்போது ப்ளூடூத் ஸ்பீக்கர்களை ஏற்கெனவே உள்ள ஸ்பீக்கர்களுடன் கூகுள் அஸிஸ்டென்ட் உதவியுடன் இணைத்து சிறப்பான ஒலி அமைப்பை பெறலாம்.

ஆப்பிளின் ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ - எதை தேர்ந்தெடுக்கலாம்?ஆப்பிளின் ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ - எதை தேர்ந்தெடுக்கலாம்?

தற்போது வெளிவந்துள்ள அறிக்கைகள் உண்மையெனில், கூகுள் நிறுவனம் தனது வைபை மெஸ் ரௌட்டர் மற்றும் இதர ஸ்மார்ட் ஹோம் பொருட்களுடன் கூகுள் மினியையும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த கூகுள் ஹோம் மினி என்பது, கூகுள் அஸிஸ்டென்ட் வசதியுடன் கூடிய ஒரு சிறிய ஸ்பீக்கர் ஆகும். மெஸ் மற்றும் பேப்ரிக் பொருட்களால் செய்யப்பட்ட இந்த ஸ்பீக்கர்,இயங்கும் போது பயனர்கள் தெரிந்து கொள்ள வசதியாக 4 எல்.ஈ.டி விளக்குகளை கொண்டுள்ளது.

வாய்ஸ் கமாண்டுகளை உள்ளீடாக பெற்றுக்கொண்டு கூகுள் ஹோம் மினி பல்வேறு செயல்பாடுகளை செய்யவல்லது. வானிலை பற்றிய தகவல்களை அறிவது, செய்திகளை கேட்பது, பாடல்களை இசைப்பது மற்றும் ஐ.ஓ.டி மற்றும் ஸ்மார்ட் ஹோம் கருவிகளை இயக்குவது போன்றவை கூகுள் ஹோம் மினியால் செய்யக்கூடிய சில முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Home speakers just got some useful features that would come in handy for audiophiles. The company has rolled out a new update to its Home app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X