ஏலியன்களை இங்கு தேடுங்கள் கிடைக்கும் : அதிர்ச்சியை கிளப்பும் ஆராய்ச்சியாளர்.!?

Written By:

ஏலியன் இருக்கா, இல்லையா என்ற குழப்பத்திற்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. இந்நிலையில் ஏலியன் சார்ந்த ஆய்வு மற்றும் தேடலில் பல்வேறு உலக நாடுகளும், இதில் நம்பிக்கை கொண்ட ஆய்வாளர்களும் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

உலகில் ஏலியன் நடமாட்டம் குறித்த செய்திகள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் இடம் பிடித்திருக்கலாம். அதிக தெளிவில்லா புகைப்படங்கள் அதற்கு சாட்சியாகவும் கூறப்பட்டுள்ளன. இப்படி இருக்க ஏலியன் எனப்படும் வேற்று கிரக வாசிகள் வசிக்கும் கிரகம் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிரகம்

கிரகம்

அப்படியாக ஏலியன் வசிக்கும் கிரகம் இது தான் என அடித்து கூறுகின்றார் வானியற்பியலாளர் டாக்டர் ரோஸென் டி ஸ்டென்ஃபோ.

குளோபுளர் க்ளஸ்டர்

குளோபுளர் க்ளஸ்டர்

மேலும் ஏலியன் சார்ந்த நாகரீகங்களை தேட நட்சத்திர மண்டலத்தின் ஓரத்தில் இருக்கும் குளோபுளர் க்ளஸ்டர்கள் தான் சிறப்பானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வயது

வயது

பால் வழியின் ஹாலோவில் அமைந்திருக்கும் குளோபுளர் க்ளஸ்டர்களின் வயது சுமார் 1000 கோடி பழைமையானதே இதற்கு முதல் காரணமாக அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கம்

நெருக்கம்

அடுத்து அங்கு நட்சத்திரங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதாவது அருகாமையில் இருக்கும் மற்ற நட்சத்திரத்திற்க்கு செல்ல ஒரு மாதமே போதுமானது. இதுவே பூமியின் அருகே இருக்கும் நெருக்கமான நட்சத்திரத்திற்கு செல்ல 4.2 ஒளியாண்டுகள் தேவைப்படும்.

சூரியன்

சூரியன்

சூரியன் 460 கோடி ஆண்டுகள் தான் பழமையானது, இதனால் குளோபுளர் க்ளஸ்டர்கள் நம்மை விட அதிக முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புறக்கோள்

புறக்கோள்

இதுவரை குளோபுளர் க்ளஸ்டரில் மெத்துசிலா என்ற புனைப்பெயர் கொண்ட ஒரே புறக்கோள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. புறக்கோள் என்பது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கோளைக் குறிப்பதாகும்.

பைனரி சிஸ்டம்

பைனரி சிஸ்டம்

இந்த புறக்கோளானது பல்சர் எனும் பைனரி சிஸ்டம் கொண்டுள்ளது. இது சுழலக்கூடிய நட்சத்திரம் ஆகும். இதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படும். தற்சமயம் இருப்பதில் மிகவும் பழைமையான புறக்கோள் மெத்துசிலா ஆகும்.

வயது

வயது

மெத்துசிலா புறக்கோளின் வயது தற்சமயம் வரை 1027 கோடி ஆண்டுகள் என கூறப்பட்டுள்ளது.

க்ளஸ்டர்

க்ளஸ்டர்

இது போன்ற க்ளஸ்டர்களில் ஏலியன் வாழ்க்கை இருப்பதே கேள்வி குறியான ஒன்று தான் என்றாலும், குளோபுளர் க்ளஸ்டர்களில் ஏலியன் தேடல் சிறப்பான தேர்வாக இருக்கும் என டாக்டர் டி ஸ்டென்ஃபோ பிபிசியின் Sky At Night பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னடைவு

பின்னடைவு

நட்சத்திரங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அருகாமையில் இருக்கும் கோள் குடும்பங்களை அழித்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. இவ்வாறு செய்யும் போது வாழ்க்கை முறை வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.

ஆய்வு

ஆய்வு

மேலும் டாக்டர் டி ஸ்டென்ஃபோ நடத்திய ஆய்வில் ஆபத்துகள் இருக்க வாய்ப்புகள் இல்லை என கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேடல்

தேடல்

ஏலியன் சார்ந்த தேடலில் புதிய திருப்பு முனையாக இருக்கும் இவரது கருத்து உலக நாடுகளின் ஏலியன் தேடலில் புதிய திட்டங்களுக்கு வழி செய்யும் என்பது மட்டும் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மனித இனம் அழியும் - ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கம்..!

புதிய சர்ச்சை : ஏலியன்கள், சூரிய மண்டலத்தில் 'பதுங்கி' கிடக்கலாம்..!

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Globular star clusters 'a good place to look' for alien life Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்