Home
Miscellaneous

பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மை : ஆய்வாளர்கள் தகவல்.!!

By Meganathan

மனித குலத்தின் மிகப்பெரிய தேடல், பல கோடி முதலீடுகள் செய்யப்பட்டு வரும் தேடல், பல ஆண்டு கால தேடல் - மகிழ்ச்சி என்னவென்றால் பதில் கிட்டத்தட்ட நெருங்கப்பட்டுவிட்ட தேடல், பிரபஞ்சத்தில் மனித இனமின்றி, வேற்று கிரகவாசிகளின் தேடல் தான் அது..!

பல காலமாக நடைபெற்று வரும் தேடலில் பிரபஞ்சத்தில் நமக்கு முன்பாகவே மேம்பட்ட அதிநவீன நாகரிகம் (வேற்று கிரக வாசிகள்) வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தது மட்டுமின்றி, அதை பல சமன்பாடுகள் மற்றும் கோட்பாடுகள் கொண்டு நிரூபணமும் செய்கின்றன..!

1

1

பிரபஞ்சத்தின் முதல் மேம்பட்ட நாகரிகமாக மனிதர்கள் இருக்க முடியாது. 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நிகழ்தகவியல் வாதம் அதாவது ( டிரேக் ஈக்வேஷன் ) முடிவுகளின் சமீபத்திய பதிப்புகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

2

டிரேக் ஈக்வேஷன் எனப்படுவது பிரபஞ்சத்தில் வாழும் வேற்றுகிரக நாகரிகங்களின் எண்ணிக்கையை நிகழ்தகவியல் வாதம் மூலம் குறிப்பிடுவதாகும்.

3

3

நாசாவின் கெப்ளர் விண்கலம் சேகரித்த தகவல்களை பயன்படுத்தி பிரபஞ்சத்தில் ஆய்வாளர்கள் புதிய சமன்பாடு ஒன்றை இயற்றியுள்ளனர். அதில் பிரபஞ்சத்தில் பூமியை தவிற எத்தனை வெளி கோள்கள் இருக்கின்றன என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

4

4

பிரபஞ்சத்தில் தற்சமயம் இருக்கும் நாகரிகத்தோடு, பிரபஞ்சத்தில் இருக்கவே வாய்ப்பற்ற ஒரே ஒரு நாகரிகத்திற்கு ஏற்ப இந்த சமன்பாட்டினை ஆய்வாளர்கள் அமைத்துள்ளனர்.

5

5

பிரபஞ்சத்தின் வாழத்தக்க கிரகத்தில் இருக்கும் மேம்பட்ட நாகரிகத்தினர் மிகவும் குறைவாக இருந்தால், பிரபஞ்சத்தில் வாழக்கூடிய மேம்பட்ட நாகரிகமானது மனித இனம் கிடையாது - என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

6

6

வளர்ந்த நாகரிகம் இருந்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பின், 10 பில்லியன் ட்ரில்லியனுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தில் மனிதர்கள்தான் மேம்பட்ட நாகரிகத்தினர் எனலாம்.

7

7

இதோடு கெப்ளர் தகவல்கள் தொழில்நுட்ப ரீதியாக ஏலியன்கள் இருந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையே முன் நிறுத்துகின்றது.

8

8

மேம்படுத்தப்பட்ட நாகரிகத்தினர் பிரபஞ்சத்தில் வேறு எங்கேயும் வாழ்கின்றனரா, என்ற கேள்வி டிரேக் ஈக்வேஷனின் திகைப்பான மூன்று நிச்சயமற்ற தன்மைகளில் வைக்கப்பட்டதாக அடாம் ஃப்ரான்க் தெரிவித்தார். இவர் ரோச்ஸ்டெர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் இந்த ஆய்வின் இணை ஆசிரியர் ஆவார்.

9

9

நம் அனைவருக்கும் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பது தெரியும். ஆனால் அவைகளில் எத்தனை நட்சத்திரங்கள் வாழக்கூடிய கிரகங்களை கொண்டிருக்கிறது என்பது தெரியாது.

10

10

மேலும் இந்த கிரகங்களில் மேம்பட்ட நாகரிகம் எவ்வாறு கண்டுபிடிப்பது என்றும் அவை எவ்வாறு அழியும் என்பது போன்ற தகவல்களும் நமக்கு தெரியாது.

11

11

தற்சமயம் நமக்கு தெரிந்த வரை ஐந்தில் ஒரு நட்ச்சத்திரங்களில் வாழக்கூடிய தன்மை கொண்ட கிரகங்கள் இருக்கலாம் என்றும் அவைகளின் வெப்பநிலை குறித்த தகவல்களையும் யூகிக்க முடியும்.

12

12

கெப்ளர் மற்றும் இதர விண்கலங்களை கொண்டு தேடியதில் இத்தகவல்கள் கிடைக்கப்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

13

13

ஃப்ரான்க் மேலும் கூறும் போது மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் வாழ்வார்கள் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை என தெரிவித்தார்.

14

14

மனித இனம் தற்சமயம் சுமாராக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான அடிப்படை கூற்றான தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற சமூகங்கள் எத்தனை காலம் வாழ முடியும் என்பதை தெரிவிக்க இயலாது என அவர் தெரிவித்தார்.

15

15

நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!


பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!

16

16

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Did Advanced alien civilization exist before us Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X