Subscribe to Gizbot

'ஐரோப்பிய' நடராஜர் சிலை முன்பு நரபலி..!?

Written By:

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (European Organization for Nuclear Research) - உலகின் மிகப்பெரும் துகள் இயற்பியல் ஆய்வகத்தை இயக்கும் நோக்குடன் பிராங்கோ-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பன்னாட்டு நிறுவனமாகும்.

1954-ஆம் ஆண்டில் 12 ஐரோப்பிய நாடுகளுடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது இருபது ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எப்போதுமே சர்ச்சைக்கு உரிய உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சாதனமான, ஒரு பெரும் இயற்பியல்சார் செய்களக் கருவியான பெரிய ஆட்ரான் மோதுவியை (Large Hadron Collider - LHC) நிறுவியதும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நேர்மின்னி :

நேர்மின்னி :

எல்எச்சி ஆனது அதிகளவு ஆற்றலைக் கொண்ட நேர்மின்னிகளை (புரோத்தன்களை) எதிர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும்.

கருங்குழி :

கருங்குழி :

இச்சாதனம் மூலம் கருங்குழிகளை உருவாக்க முடியும் அதன் விளைவாக பூமியின் அழிவு தொடங்கி வைக்கப்படும் என்றும் பல ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.

பிரச்சனை :

பிரச்சனை :

எப்போதும் பிளாக் ஹோல் மற்றும் எர்த் எண்ட் நம்பிக்கையாளர்கள் மற்றும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களால் குறிவைக்கப்படும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு தற்போது வேறொரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளது.

 சர்ச்சை :

சர்ச்சை :

அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு மையத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை முன்பு நரபலி நிகழ்த்தப் படுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முக்காடிட்ட மக்கள் :

முக்காடிட்ட மக்கள் :

வெளியான வீடியோவானது ஜெனீவா அருகே உள்ள செர்ண்னின் வளாக முற்றத்தில் நடராஜர் சிலை அடிவாரத்தில் ஒரு இரவு நேரத்தில் முக்காடிட்ட மக்கள் கூடியுள்ளதை முதலில் காட்டுகிறது

ஒரு பெண் :

ஒரு பெண் :

உடனே ஒரு நபர் அணிந்திருந்த அங்கி விளக்கப்படவும் வெள்ளை உடை அணிந்த ஒரு பெண் வெளிப்படுத்த படுகிறார், பின் அவர் நடராஜர் சிலை முன்பு தரையில் படுக்க வைக்கப்படுகிறார்.

கூர்மையான கத்தி :

கூர்மையான கத்தி :

பின்னர் முக்காடிட்ட நபர்களில் ஒருவர் முன்வந்து சில அணுகுமுறைகள் நிகழ்த்தியப்பின்பு தனது கையில் வைத்திருந்த கூர்மையான கத்தி போன்ற பொருள் மூலம் அந்த பெண்ணை குத்துவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளது

மிரண்டு :

மிரண்டு :

இந்த காட்சியை பதிவு செய்த நபர் நிறுவன கட்டிடத்தின் உள்ளே இருந்துள்ளார் பின்னர் அவர் தான் கண்ட காட்சியை பார்த்து மிரண்டு பதிவை நிறுத்திவிட்டு ஓடியுள்ளார்.

வலைத்தள அறிக்கை :

வலைத்தள அறிக்கை :

இது சார்ந்த விளக்கத்தை தனது வலைத்தள அறிக்கையில் தெரிவித்த அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு "இது ஒரு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கற்பனை காட்சி" என்று கூறியுள்ளது.

கேலி :

கேலி :

மற்றும் இதனை நிகழ்த்தியவர்கள் நகைச்சுவை உணர்வு மிக மிக அதிகமாகும் என்றும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு கேலி செய்துள்ளது.

விடுதி :

விடுதி :

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களை அனுமதிக்கும் இந்த அமைப்பின் நிறுவன வளாக விடுதியில் பலர் தங்கவும் அனுமதிக்கப் படுகிறது உடன்பொது உறுப்பினர்கள் கூட தளத்திற்கு வருகை தரவும் செய்யலாம்.

அடையாள அட்டை :

அடையாள அட்டை :

பகலாக இருப்பினும் இரவாக இருப்பினும் அடையாள அட்டை பரிசோதனைக்கு பின்பே தளத்தில் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு விளக்கமளித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் :

கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் :

ஆனால், வீடியோ பதிவில் உள்ள இடம் கட்டுப்படுத்தப்பட்ட அணுகலுக்கு உள்ளான அலுவலக கட்டிடம் என்பதும் காட்சியில் தோன்றுபவர்கள் வாய்ப்பு கிடைக்கவும் நுழைந்தது போலவும் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 11 :

ஆகஸ்ட் 11 :

இந்த வீடியோ, " செர்ன்-ல் நிகழ்ந்த கொலை" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று ஃபிக்ஷன் செய்திகள் என்ற யூட்யூப் சேனலில் வெளியானது.

வீடியோ :

வெளியிடப்பட்ட வீடியோ..!

இயேசுவின் வருகை :

இயேசுவின் வருகை :

உலக முடிவுக்கு வழிவகுக்கும் கருங்குழிகளை உண்டாக்குகிறது, நரகத்தின் வாசலை திறக்கிறது, இயேசுவின் வருகையை தடுக்கிறது போன்ற பல கிறிஸ்துவர்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுகிறது போன்ற பல குற்றச்சாட்டுகள் இந்நிறுவனம் மீது உள்ளன.

போலி :

போலி :

உலகின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படும் உலகின் மிக சக்திவாய்ந்த துகள் முடுக்கி என்ற வினோதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்களின் மையத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இது போலியாக இருப்பினும் இத்தகு பாதுகாப்பு குறைபாட்டையே வெளிப்படுத்துகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா சொல்வதை நம்பலாமா..??


பேரழிவு : ரத்து செய்யப்பட்டதா..? ஒத்தி வைக்கப்பட்டதா.??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
CERN launches investigation after pranksters sneak onto campus to film fake human sacrifice. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot