2 இடுப்பு.. 8 கால்களுடன் பிறந்த வினோதமான ஆட்டுக்குட்டி.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

|

கல்மேகா பகுதியில் வசிக்கும் விவசாயி சரஸ்வதி மொண்டல் என்பவரின் வீட்டில் வினோதமான ஆட்டு குட்டி ஒன்று பிறந்துள்ளது. இவர் சொந்தமாக ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். வியாழக்கிழமை அன்று, இவர் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் 2 இடுப்பு மற்றும் 8 கால்களுடன் பிறந்துள்ளது. இத்துடன் பிறந்த மற்றொரு ஆட்டுக்குட்டி வழக்கம் போல் சாதாரண உடல் அமைப்புடன் பிறந்துள்ளது.

2 இடுப்பு.. 8 கால்களுடன் பிறந்த வினோதமான ஆட்டுக்குட்டி..

இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் விசித்திரமான ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஒரு தலை, இரண்டு இடுப்பு மற்றும் எட்டு கால்களுடன் வினோதமான உருவத்தில் பிறந்துள்ளது. இந்த விசித்திரமான உடல் அமைப்பிற்குப் பின்னணியில் என்ன காரணம் இருக்கும் என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால், இது இயல்பான நிகழ்வு இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

சரஸ்வதி மொன்டல் வளர்த்த ஆடு ஈன்ற இரண்டு குட்டிகளில் சாதாரண உடல் அமைப்புடன் பிறந்த ஆடு முழு ஆரோக்கியத்துடன் உயிருடன் இருக்கிறது. ஆனால், இரண்டு இடுப்பு மற்றும் 8 கால்களுடன் பிறந்த விசித்திரமான ஆட்டுக்குட்டி, பிறந்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிர் இழந்தது என்று அதன் உரிமையாளர் சரஸ்வதி மொன்டல் தெரிவித்திருக்கிறார்.

இது போன்ற நிகழ்வுகள் உலகம் முழுக்க பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால், 8 கால்களுடன் பிறந்த முதல் ஆடாக இந்த ஆடு தான் இந்தியாவில் பிறந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமீபத்தில் குஜராத்திலும் ஒரு விசித்திரமான ஆட்டுக் குட்டி ஒன்று பிறந்தது. இது மனிதன் போன்ற முகத்துடன் பிறந்ததனால் மக்கள் வியப்படைந்தனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற செய்தி சேனல்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Best Mobiles in India

English summary
Baby Goat Born With 2 Hips and 8 Legs Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X