மர்மம் நிறைந்த ஏலியன் ஆய்வுகள் : மனம் திறந்த விசில் பிளோவர்.!!

By Meganathan
|

ஏலியன் சார்ந்த ஆய்வுகள் உலகில் பல காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. உண்மையில் ஏலியன்கள் இருப்பது குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றது. மறைக்கப்படும் ஒரே காரணத்தினால் தான் உலகில் ஏலியன் சார்ந்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் சில திடுக்கிடும் தகவல்கள் ஸ்லைடர்களில்..!

1

1

மிகவும் ரகசியமான ஏலியன் தொழில்நுட்பமான ரிவர்ஸ்-இன்ஜினியரிங் சார்ந்த ஆய்வு பணிகள் நிலத்தடியில் இயங்கும் ஏலியன்-அரசு சோதனை மையங்களில் நடைபெற்று வருவதாக ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2

2

'தகவல் தெரிவிப்பாளர் சாட்சிகளை வைத்து பார்க்கும் போது, அரசாங்கம் வேற்றுகிரக வாசம் மற்றும் கவர்ச்சியான ஏலியன் தொழில்நுட்பங்களை மறைத்து வருகின்றது,' என சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3

3

பல்வேறு தகவல் தெரிவிப்பாளர்கள் அரசு ஆய்வாளர்களாகவும், பொறியியல் ஒப்பந்ததாரர்களாகவும் பல்வேறு நிலத்தடி ஏலியன்-அரசாங்க ஆய்வு மையங்களில் பணியாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

4

4

நிலத்தடி ஆய்வு மையங்கள் பொதுவாக நெவேடா பாலைவனத்தின் ஏரியா 51 ராணுவ தளத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகின்றது.

5

5

விபத்தில் சிக்கிய யுஎஃப்ஒ'க்கள் ஏரியா 51 மற்றும் டுல்ஸ் நிலத்தடி வசதியில் வைக்கப்பட்டிருப்பதாக சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

6

6

1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் க்ராஷ் சைட்'இல் இருந்து எரிந்த நிலையில் ஏலியன் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், விபத்துக்குள்ளான யுஎஃப்ஒ'வில் இருந்து உயிருடன் இருந்த ஏலியன்களும் மீட்கப்பட்டதாக சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

7

7

உயிருடன் மீட்கப்பட்ட ஏலியன்கள் ஏரியா 51 பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அரசு ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ரிவர்ஸ்-இன்ஜினியரிங் உதவ கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது.

8

8

ஏரியா 51'இல் ரிவர்ஸ்-இன்ஜினியரிங் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதை தகவல் தெரிவிப்பாளர்களின் சாட்சிகளை வைத்து சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

9

9

தகவல் தெரிப்பாளர்களில் ஒருவரான பில் யுஹவுசி, தான் 1966 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை ஏரியா 51 பகுதியில், கிரே ஏலியனுடன் பொறியாளராக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

10

10

2009 ஆம் ஆண்டு மரணித்த யுஹவுசி, ஜெ-ராட் எனும் கிரே ஏலியனுடன் ஏரியா 51 பகுதியில் இயந்திர பொறியாளராக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

11

11

இவர் ஜெ-ராட் உடன் இணைந்து ரிவர்ஸ் இன்ஜினியரிங் முறையில் இயங்கும் ஸ்டெல்த் பறக்கும் தட்டு ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

12

12

ஜெ-ராட், விபத்தில் சிக்கிய ஏலியன் யுஎஃப்ஒ ஒன்றின் விமானி என்பதோடு இது ஏரியா 51 பகுதியின் ரகசிய ஹங்கரில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13

13

ஜெ-ராட் ஏலியனுடன் தகவல் பரிமாறி கொள்ள கிரே ஏலியன் தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தியதாக யுஹவுசி தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் மனித ஆய்வாளர்களை கிரே ஏலியன்களுடன் தகவல் பரிமாறி கொள்ள வழி செய்தது.

14

14

டெலிபதி மூலம் இயங்கும் இது எளிமையான ஒரு மொழி மாற்று கருவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

15

15

பில் யுஹவுசி ஏலியன் யுஎஃப்ஒ'வினை எப்படி இயக்கி பறக்க செய்ய வேண்டும் என்பதை மனிதர்களுக்கு செய்து காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

16

16

இதோடு கிரே வகை ஏலியன்களில் பல்வேறு பிரிவுகள் இருப்பதாகவும், அவை அதிக உயரம், குள்ளமான கிரே மற்றும் மனித உயரம் கொண்ட கிரே போன்றவை அடங்கும் என்றும் கூறப்படுகின்றது. எனினும் ஜெ-ராட் எந்த ரக ஏலியன் என்பது குறித்த தகவல் இல்லை.

17

17

யுஹவுசி மற்றும் இவரை போன்று இருக்கும் மற்ற தகவல் தெரிவிப்பாளர்களின் சாட்சிகளை வைத்து பார்க்கும் போது நம்மை விட மிகவும் அதிநவீன வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கான சந்தேகங்கள் எழுகின்றது.

18

18

ஏலியன் தொழில்நுட்பமான ரிவர்ஸ்-இன்ஜினியரிங் குறித்த ஆய்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் யுஹவுசி தெரிவித்துள்ளார்.

19

19

டுல்ஸ் ஏலியன்-அரசு நிலத்தடி ஆய்வு மையமானது நியு மெக்சிக்கோவின் அர்குலேட்டா மெஸ்ஸா எனும் பகுதியில் அமைந்துள்ளதாகவும் இது ஏரியா 51 பகுதியை விட பெரியது என்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

20

20

ஏலியன்-அரசு ஆய்வு மையத்தின் கட்டமைப்பு பணிகள் ஹார்ரி ட்ரூமேன் மற்றும் டுவைட் ஐசனோவர் குடியரசு தலைவர் பதவியில் இருந்த போது துவங்கியதாக நம்பப்படுகின்றது.

21

21

ஐசனோவர் வேற்றுகிரக வாசிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். கிரே மற்றும் ரெப்டில்லியன்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏலியன்கள் பூமியில் ஆய்வுகளை மேற்கொள்வது, மற்றும் ஏலியன் விஞ்ஞானிகள் ஏலியன்-மனித கலப்புகளை உருவாக்க உயிர் மரபணு சோதனை மேற்கொள்ள வழி செய்ய அனுமதிக்கும் என கூறப்படுகின்றது.

22

22

இந்த உயிர் மரபணு ஆய்வுகளுக்காக குறிப்பிட்ட அளவு மனிதர்களை ஆராய்ச்சி கினி பன்றிகளாக பயன்படுத்த ஏலியன்களுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

23

23

கிரே மற்றும் ரெப்டிலியன் வகை ஏலியன்கள் அழியாமல் இருக்க மனித-ஏலியன் கலப்புகளை உருவாக்குவதாக சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

24

24

இந்த ஒப்பந்தத்தில், ஏலியன்கள் தங்களது அதிநவீன தொழில்நுட்பம் குறிப்பாக வானியல் சார்ந்த தொழில்நுட்பங்களை அமெரிக்க அரசு பயன்படுத்த ஏலியன்கள் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

25

25

கிரே மற்றும் ரெப்டிலியன்களால் கடத்தப்படும் பெரும்பாலான மனிதர்கள், நாஸி முறையிலான உயிர்-மரபணு சோதனையில் ஈடுப்படுத்தப்படுவர் என சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

26

26

மேலும் கிரே மற்றும் ரெப்டிலியன்கள் உயிர்-மரபணு சோதனைக்காக மனிதர்களை கடத்துவதில், அமெரிக்க ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையை ஏலியன்கள் மீறுவதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

27

27

1950களில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் ஏலியன்கள் விதிமுறைகளை மீறுவது தெரிந்திருந்தும் அமெரிக்க அதிகாரிகளால் இதனை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

28

28

பெரும்பாலான நிலத்தடி மையங்களில் பரந்த ஆய்வகங்கள் மற்றும் பொறியியல் பட்டறைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

29

29

மேலும் இந்த ஆய்வகங்களில் கடத்தப்பட்ட மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டு ஆராய்ச்சி கினி பன்றிகளாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

30

30

அமெரிக்க அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் நூறு முதல் ஆயிரம் கிரே ஏலியன்கள் பென்டகனில் அதி நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க பணியாற்றி வருவதாக, பொறியாளரும் தகவல் தெரிவிப்பாளருமான யுஹவசி தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் : காட்சி நோக்கில் வழங்கப்பட்டுள்ளன.

தொகுப்பு : The Inquisitr

Best Mobiles in India

English summary
Aliens work with human scientists at Area 51 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X