போக்கிமான் ஜுரம் : போக்கிமான் போலவே இருக்கும் நிஜ உயிரினங்கள்..!

|

நேற்று வரையிலாக சக்திமான் எப்போடா மறுபடியும் டிவில போடுவான்னு காத்து கிடந்த பயலுகளுக்கு கையில கிடைச்சது என்னவோ போக்கிமான் தான். இன்றைய ட்ரெண்ட்க்கு 'போக்கிமான் கோ' வாசிகள் எல்லோருக்குமே சொந்தமாக ஒரு போக்கிமான் தேவை..? ஆனால் அதென்ன நாய் குட்டியா..? இல்ல பூனைக்கு குட்டியா..? ஆசைப்பட்டதும் வாங்கிக்கொள்ள..!!?

ஒரு உண்மை தெரியுமா..? போக்கிமான் ஒரு 'வீடியோ கேம்' வாழ் பிராணி என்று நம்மையெல்லாம் ஏமாற்றி விட்டார்கள். நிஜத்தில் போக்கிமான்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன..! நம்ப முடியவில்லை என்றால் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப் பட்டுள்ள உயிரினங்களை ஒரு லுக் விடுங்கள்..! உங்களுக்கே புரியும்..!

நிஜ போக்கிமான் #01

நிஜ போக்கிமான் #01

டம்போ ஆக்டோப்பஸ் (Dumbo Octopus) எனப்படும் பின்ன கணவாய். கடலின் 400 அடி ஆழத்தில் உலாவும் இதன் சிறகடிக்கும் காது போன்ற துடுப்புகள் தான் இதற்கு இப்பெயர் கிடைக்க காரணமாகும். போக்கிமான் வாசிகளை பொறுத்த மட்டில் இதுவொரு ஆழ்கடல் போக்கி மான்..!

நிஜ போக்கிமான் #02

நிஜ போக்கிமான் #02

ஜெர்போ (Jerboa) : இந்த நீண்ட பின்னங்கால்களைக் கொண்ட எலி போன்ற விலங்கு பாலைவனத்தில் வாழும் ஒரு உயிரினமாகும். இதை பார்த்ததுமே போக்கிநான் பிரியர்களுக்கு என்ன நினைவுக்கு வரும் என்பதை நாங்கள் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும்..!

நிஜ போக்கிமான் #03

நிஜ போக்கிமான் #03

சீன நீர் மான் (Chinese Water Deer) : அற்புதமான நீச்சலடிக்கும் பிராணியாக இது பல மைல் தூரம் இடைவெளி கொண்ட இரண்டு தனித் தீவுகளை கூட நீந்திக் கடக்கும். அதற்கு தான் இப்பெயர். போக்கிமான் வாசிகளின் கண்களுக்கே இதன் நீச்சல் திறமையை விட முக ஜாடையே அதிகம் பிடிக்கும்..!!

நிஜ போக்கிமான் #04

நிஜ போக்கிமான் #04

ரெட்-லிப்டு பேட்பிஷ் ( Red-Lipped Batfish) : பெருவின் காலாபகோஸ் தீவின் 75 மீட்டர் ஆழத்தில் அதிகம் காணப்படும் அசாதாரண அமைப்பியல் கொண்ட இந்த மீன் இனம் போக்கிமானை நினைவுப்படுத்துவது உண்மை தான்..!

நிஜ போக்கிமான் #05

நிஜ போக்கிமான் #05

லீஃப் ஷீப் (Leaf Sheep) : தாவர வகையாக இருப்பினும் க்ளெப்டோபிளாஸ்டி (kleptoplasty) என்ற விசித்திரமான முறையில் ஒளிச்சேர்க்கை செய்யும் ஒரே விலங்கினம் இது தான். விசித்திரம் தான் - போக்கிமான் போலவே..!

நிஜ போக்கிமான் #06

நிஜ போக்கிமான் #06

ஷூபெல் (Shoebill) : இவைகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் சூடான் முதல் ஜாம்பியா வரையிலான பெரிய சதுப்பு வெப்பமண்டலத்தில் அதிகம் வாழ்கின்றன. இதன் பெரிய மூக்கு இவைகளை போக்கிமானாய் காட்சிப்படுத்துகின்றன..!

நிஜ போக்கிமான் #07

நிஜ போக்கிமான் #07

ப்ளூ பேர்ட் ஆஃப் பாரடைஸ் (Blue Bird Of Paradise) : மிக மிக அழகான அதே சமயம் தேவையான நேரத்தில் விசித்திரமான உருவ அமைப்பை கொண்டு வர முடிந்த விசித்திரமான பறவை இனமான இது போக்கிமானுக்கு மிகப்பொருத்தம்..!

நிஜ போக்கிமான் #08

நிஜ போக்கிமான் #08

மெகாலோபிகிடே கேட்டர்பில்லர் (Megalopygidae Caterpillar) : சாதாரணமானவர்களுக்கு சிலநேரங்களில் இந்த கம்பளிப்பூச்சியானது பூனைக்குட்டி போல தோன்றினாலும் போக்கிமான்வாசிகளுக்கு பெரும்பாலும் என்னவாக தோன்றும் என்பதை சொல்லவே வேண்டாம்..!

நிஜ போக்கிமான் #09

நிஜ போக்கிமான் #09

பர்ரேலேயி (Barreleye) : ஒளி ஊடுருவுகிற தன்மை படைத்த தலை கொண்ட இந்த மீனை ஸ்பூப் பிஷ் (Spook Fish) என்றும் அழைப்பர். அட ஆமாம்ப்பா பார்க்க போக்கிமான் போல தான் இருக்கு..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

போக்கிமான் கோ வெற்றி : பின்னணியில் உளவியல் காரணங்கள்.!!


ஆபாசத்தை மிஞ்சிய ஆண்ட்ராய்டு கேம் : கூகுள் அதிர்ச்சி.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
9 Real Life Creatures That Are Definitely Pokemon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X