Subscribe to Gizbot

இந்த 9 மர்மங்களும் கண்டுப்பிடிக்கப்படுமா..?!

Written By:

"எல்லாமே சாத்தியம் தான்.!" என்று மார்த்தட்டிக் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அதிநவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, எல்லா விடயத்திலும் வென்று விடுவதில்லை என்பது தான் நிதர்சனம். அதிநவீனத்தை மீறிய சில செயல்களும், எந்த விதமான தொழில்நுட்ப யுகத்திலும் கண்டுப்பிடிக்க முடியாத காரியங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு..!

அப்படியாக நடந்த சில அசாத்தியமான செயல்கள், காரியங்கள், தகவல்கள் எல்லாமே இன்றுவரை புரிந்து கொள்ளவே முடியாத புதிர்காளாய் தான் இருக்கின்றன. அவைகளை தெளிவாக மிக துல்லியமாக புரிந்து கொள்ள, இன்னும் 100 ஆண்டுகளாவது தேவைப்படும். அவைகளில் பாக்தாத் பேட்டரிகள் மற்றும் பேய் கப்பல் எனப்படும் எஸ்எஸ் ஒரங் மேடான் ஆகிய மர்மங்களை தீர்க்க முடியுமா என்பதே சந்தேகம் தான்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
09. அன்டிகேதேரா மெக்கானிசம் (Antikythera Mechanism) :

09. அன்டிகேதேரா மெக்கானிசம் (Antikythera Mechanism) :

1900-ஆம் ஆண்டு, கிரீஸ் நாட்டின் அருகே நடந்த கப்பல் விபத்து ஒன்றில் இருந்து கிடைத்தது இந்த - அன்டிகேதேரா மெக்கானிசம்..!

கேள்விக்குறி :

கேள்விக்குறி :

இது ஒரு சிக்கலான அனலாக் கம்ப்யூட்டர் (Intricate analogue computer) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விடயங்களும் இன்றுவரை கேள்விக்குறி தான்..!

08. சறுக்கி செல்லும் பாறை :

08. சறுக்கி செல்லும் பாறை :

கலிபோர்னியாவில் உள்ள வரண்ட குளமான - ரேஸ்ட்ராக் ப்லாயாவின் (Racetrack Playa) நகரும் பாறைகள், ஏன் நகர்கிறது எப்படி நகர்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

நாசா :

நாசா :

நகரும் பாறைகள் (Sailing stones) - இதற்கு நாசாவால் கூட விளக்கம் கொடுக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

07. பண்டைய கால ராக்கெட் ஷிப் :

07. பண்டைய கால ராக்கெட் ஷிப் :

ஜப்பானில் கண்டுப்பிடிக்கப்பட்ட பண்டைய கால, குகை ஓவியமான இதில் ராக்கெட் போன்ற உருவம் தெளிவாக தெரிகிறது.

ஏலியன் :

ஏலியன் :

இந்த ஓவியத்தின் காலகட்டம் 5000 கிபி ஆகும். இதுவும் ஏலியன்கள் சார்ந்த பலமான ஆதாரங்களில் ஒன்றாகும்..!

06. 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இரும்பு ஸ்க்ரூ :

06. 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இரும்பு ஸ்க்ரூ :

ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் 1998-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது இந்த 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான ஸ்க்ரூ (Screw)..!

யார் :

யார் :

டைனோஸர்கள் கூட உருவாக அந்த காலகட்டத்தில், இது எப்படி உருவாகியது, இதை யார் உருவாக்கி இருப்பார்கள் என்பது விளங்காத புதிர்தான்..!

05. வாவ் சிக்னல் (WOW Siganl) :

05. வாவ் சிக்னல் (WOW Siganl) :

1977-ஆம் ஆண்டு கிடைத்த இந்த வாவ் சிக்னல் தான் ஏலியன் தேடலில் இருக்கும் தலைசிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

தகவல் :

தகவல் :

இருப்பினும் இந்த வாவ் சிக்னல் என்ன தகவலை உள்ளடக்கியுள்ளது என்பது இன்றுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

04. ஸ்டோன் காலண்டர் (Stone Calender) :

04. ஸ்டோன் காலண்டர் (Stone Calender) :

எகிப்து நாட்டின் சஹாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இது தான் உலகின் முதல் கல் காலண்டர் ஆகும்.

புரிதல் :

புரிதல் :

சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த கல் காலண்டர் சார்ந்த புரிதலும், இன்று வரை ஒரு புரியாத புதிர் தான்.

03. எஸ்ஓஎஸ் மெசேஜ் :

03. எஸ்ஓஎஸ் மெசேஜ் :

இந்தோனேஷிய கடலில் மிதந்து கொண்டிருந்த இந்த எஸ்எஸ் ஒரங் மேடான் (SS Ourang Medan) கப்பலில் இருந்து "கேப்டன் உட்பட அனைவரும் இறந்து விட்டனர்..!" என்று ஒரு மெசேஜ் கிடைத்தது. பின் சிறிது நேரம் கழித்து "நானும் இறந்து விட்டேன்" என்று மெசேஜ் வந்தது..!

பேய் கப்பல் :

பேய் கப்பல் :

இதை பேய் கப்பல் என்று சிலர் நம்ப, மறுபக்கம் இப்படி ஒரு கப்பலே இல்லை என்றும் சிலர் கூறுகிறார்கள், எப்படி இருந்தாலும் கப்பலில் இருந்து கிடைத்த மேசேஜ் ஒரு புதிர் தான்..!

02. சைனீஸ் மொஸையிக் லைன்ஸ் :

02. சைனீஸ் மொஸையிக் லைன்ஸ் :

கூகுள் மேப்பில் சிக்கிய இந்த விசித்திரமான கோடுகள் (Chinese mosaic lines)சீனாவின் கன்சு ஸெங் (Gansu Sheng) தீவுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

அர்த்தம் :

அர்த்தம் :

2004-ஆம் ஆண்டில் தான் இது உருவாகி உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் இதன் அர்த்தம் இன்று வரை மர்மம் தான்..!!

01. பாக்தாத் பேட்டரி :

01. பாக்தாத் பேட்டரி :

1752-ஆம் ஆண்டில்தான் மின்சாரம் என்ற ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

பயன்பாடு :

பயன்பாடு :

ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பாக்தாத் பேட்டரிகள் பயன்பாட்டில் இருந்துள்ளது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மர்ம புகைப்படம் : 15 ஆண்டுகளாக மவுனம் காக்கும் நாசா.!?


கூகுள் மறைத்த ரகசியம் அம்பலம்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
9 Mysteries still cannot solve. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot