Subscribe to Gizbot

எளிமையாக சம்பாதிக்க உதவும் 6 ஆன்லைன் தளங்கள்.!

Posted By: Jijo Gilbert

பணத்திற்கு தேவை என்று வந்துவிட்டால், நம்மையே ஒரு கலெக்டரைப் போல உணர்கிறோம். இந்நிலையில் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது தான் நவீன முறையாக உள்ளது. ஆனால் நீங்கள் ஒரு ப்ளாக் தொடங்கி நடத்தும் போது, அதுதொடர்பான புள்ளிவிவரங்களை பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள்.

எளிமையாக சம்பாதிக்க உதவும் 6 ஆன்லைன் தளங்கள்.!

ஏனெனில் பெரும்பாலான ப்ளாக்குகள் தொழில் ரீதியாக சிறப்பாக செயல்படுவதில்லை என்பதால், தோல்வி அடையும் ப்ளாக்குகளின் சதவீதம் 90%-க்கும் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பும் தயாரிப்பிற்கு ப்ளாக் மூலம் ஆதரவை திரட்ட மட்டுமே முடியும்.

இந்நிலையில் ஒரு தயாரிப்பை கட்டியெழுப்புவது உங்களுக்கு பெரிய அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் பட்சத்தில், எந்த கஷ்டமும் இல்லாமல் கூடுதலாக பணம் சம்பாதிக்கும் சில விறுவிறுப்பான வழிகள் இருக்கத் தான் செய்கின்றன.

நீங்கள் ஒரு கல்லூரி மாணவன் அல்லது மாணவியாக இருந்து, ஓய்வு நேரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்பினால், கீழ்க்காணும் இணையதளங்கள் மூலம் எளிதாகவும் விரைவாகவும் அது சாத்தியப்படும். இந்தக் கட்டுரையில், கூடுதலாக பணம் சம்பாதிக்க உதவும் 6 இணையதளங்களின் விவரங்களைப் பட்டியலிட்டு உள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அமேசான் மெக்கானிக்கல் டர்க்

அமேசான் மெக்கானிக்கல் டர்க்

இது அமேசான் எம்டர்க் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதனால் செய்யப்படும் நேர்த்தியோடு சிறு பணிகளை சிறப்பாக முடிக்கப்பட வேண்டிய ஒரு சந்தை பகுதியாக இந்த போர்ட்டல் விளங்குகிறது. ஒரு கணக்கெடுப்பு, ஒரு இணையதளத்தை பார்ப்பது, ஒரு கட்டுரையை எழுதுதல், ஒரு கட்டுரையை மொழிப்பெயர்த்தல் மற்றும் வீடியோவை விளக்குதல் (வீடியோ எழுத்து வடிவத்திற்கு மாற்றுவது) போன்ற பணிகள் இதில் உள்ளன.

இந்தப் பணிகளை விரைவாக முடித்து, அதற்கான பணத்தை துரிதமாக பெற்று கொள்ள முடியும். இந்த இணையதளத்தின் பட்டியலில் அல்லது அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உங்கள் நாடு இருக்கிறதா என்பதை நீங்கள் சோதித்து பார்க்க வேண்டியுள்ளது.

 பிக்கிடொமையின்ஸ்

பிக்கிடொமையின்ஸ்

படைப்பு ஆற்றலை பயன்படுத்தி, வருமானத்தை அளிக்கும் இது ஒரு சிரமம் இல்லாத இணையதளம் ஆகும். உங்களால் படைப்பு ஆற்றல் மிகுந்த மற்றும் நகைச்சுவையான டொமையின் பெயர்களை யோசிக்க முடிந்தால், PickyDomains.com உங்களுக்கு ஏற்றதாக அமையும். இந்த இணையதளத்தில் வரும் கோரிக்கைகள் பட்டியலிடப்படுகிறது. இதை தகுந்த முறையில் பரிசோதித்து பார்த்து, உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். அதில் எப்படியாவது $20 இலிருந்து $50 வரை நீங்கள் சம்பாதிக்க முடியும். உங்கள் டொமையின் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

மைக்ரோவர்க்கர்ஸ்

மைக்ரோவர்க்கர்ஸ்

இது அமேசான் எம்டர்க் போன்றே செயல்பட்டாலும், நோக்கத்தில் வேறுபடுகிறது. ஒரு படிவத்தை நிரப்புதல், ஒரு இடுகைக்கு கருத்து தெரிவித்தல், உள்நுழைதல் போன்ற சிறுசிறு பணிகளை முடிப்பதன் மூலம் வருமானத்தை விரைவாக ஈட்ட முடியும்.

லேகேகா

லேகேகா

சமஸ்கிருத மொழியில் அமைந்த இந்த வார்த்தைக்கு, 'எழுத்தாளர்' என்று அர்த்தம். எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரை இலக்காக வைத்து செயல்படும் இந்த தளத்தில், எழுதும் கட்டுரைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் கிடைக்கிறது. உங்களுக்கு எழுதுவது பிடிக்கும் என்றால், உடனே லேகேகாவில் பெயரை பதிவு செய்யுங்கள். இதில் பல்வேறு மொழிகளில், வெவ்வேறு தலைப்புகளில் பணிகள் அளிக்கப்பட்டு, தரமான உள்ளடக்கங்கள் படைக்கப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)
ஃபிவெர்

ஃபிவெர்

ஒருவர் எதையும் விற்கக்கூடிய வகையில் அமைந்த ஒரு மிகப்பெரிய போர்ட்டல் ஆகும். பாடப்பட்ட பாடல்கள், வடிவமைப்புகள், காப்பிரைட்டிங், கட்டுரை எழுதுதல் என்று எது வேண்டுமானால் இருக்கலாம். இதில் எண்ணற்ற பணிகள் குவிந்து கிடப்பதால், இது ஒரு தனித்தன்மையுள்ள தளமாக விளங்குகிறது. இதில் பூனைகளின் படங்களை வரைதல், ஒரு ஜிங்கள் உருவாக்குதல், வீடியோ திருத்தம் செய்தல் என்று சில பொழுதுபோக்கு அம்சங்களும் காணப்படுகின்றன.

இன்னும் எதற்காக யோசிக்கிறீர்கள், மேலே உள்ளதில் உங்களுக்கு ஏற்ற பணியில் ஈடுபட தொடங்குங்கள். இதை விட சவாலான பணிகளை அளிக்கும், இன்னும் எண்ணற்ற மற்ற தளங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம்.

டெசிபியரல்:

டெசிபியரல்:

டெசிபியரல் (Desipearl) என்பது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கெட்டிங் தளங்களில் ஒன்றாகும். பல்வேறு வலைதளங்களில் இருந்து சிறந்த கட்டுரையை தேர்வுசெய்து ஊக்குவிக்கும் வகையில் இந்த டெசிபியரல் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 200-க்கும் அதிகமானவர்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளனர். டெசிபியரல் பொறுத்தவரை அங்கிலம் மற்றும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, குஜராத்தி, பெங்காலி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் பிராண்டுகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
If you're in college and wish to use your free hours making money, these websites offer a simple and quick way. This article lists five of those money-making sweet spots that can provide you with some extra cash. Take a look at these apps from here.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot