ஒட்டுமொத்த சூரிய குடும்பத்துக்கே 'ஆப்பு' வைக்கும் 10 வன்முறை நிகழ்வுகள்..!

Written By:
  X

  புகைப்படங்களிலும், தொலைநோக்கி மூலம் பார்க்கும் போதும் - விண்வெளி, விண்மீன் திரள்கள் மற்றும் வானவில் நெபுலாக்கள் மிகவும் அழகான, அமைதியாக தோன்றும். ஆனால், விண்வெளியானது மிகவும் அனுபவம் மிக்க விஞ்ஞானிகளை கூட குழப்பும் வண்ணம் மிகவும் விசித்திரமான, வன்முறை மிகுந்த ஒன்றாகும் என்பது தான் நிதர்சனம்..!

  அப்படியாக, ஒரு சில விண்வெளி வன்முறை சம்பவங்களானது நமது சூரிய குடும்பத்தின் மிக அருகமையில் நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் மனிதர்களாகிய நாம் வாழும் காலத்திலேயே கூட நிகழலாம் என்றும் விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அப்படியாக நமது சூரிய குடும்பத்தை தாக்கக்கூடிய 10 வன்முறையான விண்வெளி நிகழ்வுகள் சார்ந்த தொகுப்பே இது..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  வன்முறை நிகழ்வு #10 :

  ரின்ங்டு மார்ஸ் (Ringed Mars)

  கேள்விகுறி :

  செவ்வாய் கிரகம் தனது அருகாமை நிலவ்போடு மோதல் நிகழ்த்தி சனி கோளுக்கு இருப்பது போன்ற ரிங் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இது நிகழும் போது சூரிய குடும்ப அமைப்பில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதும் அதே சமயம் இது நிகழ எப்படியும் சுமார் 40 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவரையிலாக மனித இனம்நீடித்து வாழுமா என்பதே மிகப்பெரிய கேள்விகுறி தான்..!

  வன்முறை நிகழ்வு #09 :

  க்ரம்பிலிங் மூன் (Crumbling Moon)

  வாய்ப்பு :

  செவ்வாய் கிரகத்திற்கு ரிங் ஏற்படுவது போன்றே, நமது நிலவும் நம் பூமி கிரகத்தின் ரிங் ஆக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அனால் அது நிகழ சுமார் 5 பில்லியன் ஆண்டுகளாவது ஆகுமாம்.

  வன்முறை நிகழ்வு #08 :

  மில்க்கோமேடா (Milkomeda)

  புதிய கேலக்சி :

  அதாவது நம் சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலம் ஆனது அருகாமை மண்டலத்தோடு நிகழ்த்தும் மோதலை தான் ஆந்த்ரோமெடா (Andromeda) என்கிறார்கள். இந்த மோதல் நிகழ்ந்து இரண்டு மண்டலங்களும் இணைந்து புதிய ஒரு கேலக்சியை உருவாக்குமாம். மறுபக்கம் நமது பால்வெளி மண்டலம் ஆனது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு தான் நீடிக்கும் என்ற கருத்தும் உண்டு.

  வன்முறை நிகழ்வு #07 :

  கில்லர் க்ளவுட் (Killer Cloud)

  கொடூரமான விண்வெளி மூடுபனி :

  நமது சூரிய குடும்பம் ஆனது ஒரு கொடூரமான விண்வெளி மூடுபனி மூலம் தாக்கப்படலாம் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு தாக்கப்படும் போது அது தான் உயிர் இனங்களின் கடைசி நாட்களாக இருக்கும்.

  வன்முறை நிகழ்வு #06 :

  மீண்டும் கேரிங்க்டன் நிகழ்வு (Carrington Repeat)

  நேரடியாக தாக்கும் :

  1859-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று, ரிச்சர்ட் கேரிங்டன் என்ற ஒரு தன்னார்வ வானியலாளர் வரலாற்றின் மிக மோசமான சூரிய புயலை கண்டறிந்தார் அதை தான் கேரிங்க்டன் நிகழ்வு எனப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வானது போமியை நேரடியாக தாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  வன்முறை நிகழ்வு #05 :

  டெத் ஸ்டார்ஸ் (Death Stars)

  வாய்ப்பு :

  வால் நட்சத்திரங்களின் ஒரு பெரிய கொத்து தான் ஊர்ட் மேகம் எனப்படுகிறது. அவ்வாறான ஊர்ட் மேகத்தினுள் ஏகப்பட்ட இறந்த நிலை நட்சத்திரங்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரியனை சுற்றி வந்துகொண்டிருக்கும் இதுபோன்ற ஊர்ட் மேகப் பொருள்களுடன் பூமி கிரகம் மோதல் நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது அதுவும் மிகமிக சிறிய அளவிலான வாய்ப்பு..!

  வன்முறை நிகழ்வு #04 :

  பாராசிட்டிக் ட்ராப் (Parasitic Dwarf)

  வெப்பாற்றல்

  சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 3260 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பினும் அண்டத்தின் அடைப்படையில் பார்க்கும் போது ஒட்டுண்ணி உறவு கொண்டுள்ள டி பைசிடிஸ் (T Pyxidis) என்ற இருமை நட்சத்திர அமைப்பானது சூரிய குடும்பத்தின் அருகமையில் தான் இருக்கிறது. அவைகள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வெப்பாற்றல் வெடிப்பை (thermonuclear blasts) நிகழ்த்துகிறது அது பூமி கிரகத்திற்கு அடிப்படை ஆபத்துக்களை விளைவிக்குமாம்.

  வன்முறை நிகழ்வு #03 :

  பிளானட் சமாஷ் அப் (Planet Smash Up)

  நிலை :

  சூரிய குடும்ப கிரகங்களின் சுற்று வட்டப்பாதையானது நிலையான ஒன்றில்லை. குறிப்பாக இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் எதோ இரண்டு கிரகங்களுக்கு மத்தியில் நிகழப்போகும் மோதலுக்கு பின்பு மெர்குரி கிரகம் ஆனது தனது சுற்றுவட்டப் பாதையை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகி ஒரு கட்டத்தில் பூமி கிரகத்தோடு மோதும் வாய்ப்பும் உள்ளதாம்..!

  வன்முறை நிகழ்வு #02 :

  தி பிக் சேன்ஜ் (The Big Change)

  சூப்பர்கூல் நிலை :

  ஒட்டுமொத்த பிரபஞ்சம் ஆனதும் ஒரு சூப்பர்கூல் நிலைக்கு செல்லும் அதே நேரத்தில் ஒரு வெற்றிடமாகத்தான் இருக்கும். இதை தான் தி பிக் சேன்ஜ் என்கிறார்கள்.

  வன்முறை நிகழ்வு #01 :

  வுல்ப்-ராயெட் ஸ்டார் (Wolf-Rayet Star)

  காம்மா கதிர் :

  குறிப்பாக வுல்ப்-ராயெட் ஸ்டார் ஆனது இன்னும் நூறு ஆண்டுகளில் சூப்பர்நோவாவாக மாறும். பின்பு அதன் வழிப்பாதையின் அடிப்படையில் பார்க்கும் போது அது காம்மா கதிர்களை பூமியை நோக்கி பாய்ச்சலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க :

  'நரகத்தை' கண்டுப்பிடித்து விட்டோம் : ஆராய்ச்சியாளர்கள் அதிரடி..!


  1859-ல் போல் 'மீண்டும்' நடந்தால், மீள்வது மிகவும் கடினம் - விஞ்ஞானிகள் அச்சம்..!

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  10 Violent Events That Will Hit Our Solar System. Read more about this in Tamil GizBot.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more