Subscribe to Gizbot

'இதெல்லாம் பொய்'னு எல்லோருக்குமே தெரியும், உங்களுக்கு..??

Written By:

"பெரியவங்க சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும், ஏன் எதுக்குனு கேள்வி கேட்காமல் சொன்னதை மட்டும் செய்யணும்..!" - இந்த வசனத்தை நம்மில் பெரும்பாலும் அனைவருமே கேட்டுருப்போம். ஆனால், நம்மில் வெகு சிலர் மட்டுமே உண்மை நிலை எதுவென்று ஆராய்ந்து பார்த்திருப்போம். நம்ம ஆட்களுக்கு எல்லாவற்றிற்க்குமே ஆதாரம் தேவை அதுவும் அறிவியல் பூர்வமான, ஆணித் தனமான ஆதாரங்கள் தேவை. அப்போதான் கொஞ்சமாச்சும் நம்புவாங்க..!

அப்படியாக, பெரியவங்க சொன்னது, பக்கத்துக்கு வீட்டுக்காரன் சொன்னது, எங்கயோ படிச்சது என இன்று வரையிலாக நாம் சில பொய்களை உண்மை என்று நம்பிக்கொண்டே இருக்கிறோம். இனிமேலும் அவைகளை நம்பிக்கொண்டுருக்க வேண்டாம், யாரவது நம்ப சொன்னலும் தவறு என்று சொல்லிக்கொடுக்கலாம் - வாங்க !!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பொய் நம்பர் #01

#1

விஷம் எரிய ரத்தத்தின் நிறம் நீலம்..!

எப்போதுமே சிவப்பு தான் :

#2

அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. ரத்தம் எப்போதுமே சிவப்பு நிறம் தான். நமது இரத்த ஓட்ட அமைப்பு நீல இரத்த நாளங்கள் கொண்டுள்ளதால் நமது நம்ரம்புகள் நீல நிறமாக தோன்றுமே அன்றி ரத்தம் நீல நிறமாக மாறாது.

 பொய் நம்பர் #02

#3

ஒட்டகங்கள் அதன் திமிலில் நீரை சேமித்து வைத்திருக்கும்..!

கொழுப்பு சத்து :

#4

ஒட்டகங்களுக்கு பெரிய திமில் இருக்கும் அவைகளால் நீரின்றி நீண்ட நாட்கள் வாழ முடியும் என்பதெல்லாம் உண்மைதான், ஆனால், அவைகள் தனது திமிலில் சேமித்து வைத்திருப்பது கொழுப்பு சத்துக்களை தானே இன்றி நீரை அல்ல.

பொய் நம்பர் #03

#5

விண்வெளியில் ஏஈர்ப்பு சக்தி கிடையாது..!

ஈர்ப்பு விசை :

#6

விண்வெளியில் வீரர்கள் மிதக்கிறார்கள் தான் அதற்காக அண்டத்தில் ஈர்ப்பு விசை இல்லை என்று நினைத்து விடக்கூடாது. பூமியின் மிக தூரத்து விண்வெளி பிரதேசமான ஆந்த்ரோமெடா விண்மீன் (சுமார் 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு) கூட பூமி மீது ஈர்ப்பு விசையை செலுத்திக் கொண்டே தான் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

பொய் நம்பர் #04

#7

சக்கரையானது மிக இயக்கம் எனப்படும் ஹைப்பர்ஆக்டிவிட்டியை வழங்கும்..!

குழந்தைகள் - பெரியவர்கள் :

#8

ஆனால், நிஜத்தில் சக்கரையானது குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்குமே மிக இயக்கத்தை வழங்காது. வேண்டுமானால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் பற்சிதைவு ஆகியவைகளை வழங்கலாம்

பொய் நம்பர் #05

#9

ஸ்வீட்னர்கள் புற்று நோயை உண்டாக்கும்..!

சக்கரைக்கு மாற்றானவைகள் :

#10

சர்க்கரையை விட சக்கரைக்கு மாற்றானவைகள் நல்லாதா கெட்டதா என்ற சந்தேகம் ஒருபக்க இருக்க ஸ்வீட்னர்கள் புற்று நோயை உண்டாகுமா என்ற கேள்வி ஒன்று உள்ளது, அதற்கு விடை - நிச்சயமாக இல்லை !

பொய் நம்பர் #06

#11

பெரும்பாலான உடல் வெப்பம், உங்கள் தலை வழியாக தான் வெளியேறும்..!

மூடநம்பிக்கை :

#12

பிற உடல் பாகங்களை போன்றே தான் தலையும் உடல் வெப்பத்தை வெளியிடுகிறது, பெரும்பாலும் தலை பகுதி மூடப் பட்டு இல்லாததால் தான் இந்த மூடநம்பிக்கையானது உருவாகி வலம் வருகிறது.

பொய் நம்பர் #07

#13

சுறா மீன்களுக்கு புற்று நோய் வராது..!

குருத்தெலும்பு :

#14

சுறா குருத்தெலும்பு மூலம் புற்றுநோயை தடுக்க / குணப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் வெளியான புத்தகமாக 'ஷார்க்ஸ் டோன்ட் கெட் கேன்சர்' என்ற புத்தகத்தின் தலைப்பே இந்த மூட நம்பிக்கைக்கு காரணம்.

பொய் நம்பர் #08

#15

கண்ணாடி ஒரு திரவம்..!

திண்மம் :

#16

கண்ணாடி என்பது ஒரு வரையறைவடிவற்றதிண்மம் (amorphous solid) ஆகும்..!

பொய் நம்பர் #09

#17

சூரியன், பூமிக்கு அருகில் வந்துவிட்டது, அதுதான் அதிகப்படியான கோடை வெயிலுக்கு காரணம்..!

பூமியின் அச்சு :

#18

ஆனால், உண்மை என்னவென்றால் பருவங்கள் பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால் தான் ஏற்படுகிறது..!

பொய் நம்பர் #10

#19

பரிணாமம் - எப்போதும் விடயங்களை நன்றாக உருவாக்கும்..!

 மரபணு பிறழ்வுகள், சீரற்ற பிறழ்வு :

#20

முயற்சி செய்து செய்து ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டது போல பரிணாமம் என்பது இலக்கு சம்பந்தப்பட ஒன்று என்ற நம்பிக்கை இன்றுவரை இருக்கிறது. அது உண்மை அல்ல. பரிணாம வளர்ச்சி - இதை புரிந்துக்கொள்ள மரபணு பிறழ்வுகள், சீரற்ற பிறழ்வுகள் ஆகியவைகள் மற்றும் மேலும் பல சிறிய சிறிய விவரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும், ஒட்டக ச்சிவிங்கியின் கழுத்தை மட்டும் தெரிந்து வைத்து புண்ணியமில்லை.

மேலும் படிக்க :

#21

'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..??


நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

தமிழ் கிஸ்பாட் :

#22

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
10 Things Everyone "Knows" That Aren't True. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot