Subscribe to Gizbot

இரண்டாம் உலகப்போர் : வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கொலைக்கருவிகள்..!

Written By:

ஆயுதங்கள் ஒரு எளிய கொள்கையில் தான் இயங்குகின்றன, இயக்கப்படுகின்றன. அது மக்களை கொல்வது அல்லது முடமாக்குவது. அப்படியாக ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் பங்கு கொண்ட இரண்டாம் உலகப்போரில் பலியான உயிர்கள் இன்றும் எண்ணில் அடைக்கப்பட்டு கொண்டே இருகின்றன..!

இரண்டாம் உலகப்போரின் போது எதிரிநாட்டு வீரர்களையும், மக்களையும் முடிந்தவரையிலாக கொன்று குவிக்க வேண்டுமென்றே சில கொலை கருவிகளும் உருவாக்கப்பட்டன. இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் எதிரிகளை அழிக்கலாம் என்பதையே தான் நோக்கமாய் கொண்டிருந்தன என்பதற்கு சான்று தான் இந்த கொலை கருவிகள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கொலைக்கருவி #10 :

கொலைக்கருவி #10 :

டாச்பன்சர் (Tauchpanzer) - நாஸிக்களால் உருவாக்கப்பட்டு, ஆப்ரேஷன் சி லையனில் (Operation Sea Lion) பயன்படுத்தப்பட்டது..!

கடலின் அடித்தளம் :

கடலின் அடித்தளம் :

'நீந்தும் டான்க்' (Diving Tank) என்ற அர்த்தம் கொண்ட இது கடலில் இறக்கிவிடப்பட்டால், கடலின் அடித்தளத்திற்கு சென்று பிரிட்டனிடம் இருந்து பாதுகாப்பு அளித்து கடற்கரையோரங்களில் இறங்கும் வீரர்களுக்கு ஆதரவு வழங்கும்..!

கொலைக்கருவி #09 :

கொலைக்கருவி #09 :

டிடி டான்க் (DD Tank) - நாஸிக்கள் கடலில் மூழ்கி தாக்கும் டாங்கிகளை உருவாக்க நேச நாடுகளின் பொறியாளர்கள் மிதக்கும் டாங்கிகளை உருவாக்கத்தொடங்கினர்.

மிதக்க வைக்கும் :

மிதக்க வைக்கும் :

டாங்கிகளை சுமக்கும் தொட்டியானது ப்ரொபல்ஷன் கருவிகள் மூலம் டாங்கிகளை கடலில் மிதக்க வைக்கும் இந்த வகை ஆயுதமானது முதன்முதலில் 1941-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

கொலைக்கருவி #08 :

கொலைக்கருவி #08 :

கர்ல் கேராட் (Karl-Gerat) - துப்பாக்கி வடிவமைப்பை மனதில் கொண்டு மிகவும் பிரம்மாண்டமாய் ஜெர்மனியால் உருவாக்கப்பட்டது..!

1800 கிலோகிராம் குண்டு :

1800 கிலோகிராம் குண்டு :

மிகவும் பிரம்மாணடமான மோட்டார் அமைப்பை கொண்ட இது 1800 கிலோகிராம் எடை கொண்ட குண்டை சுமார் 5 கிலோமீட்டர் முதல் 10 கிலோமீட்டர் தூரம் வரை வீசி சர்வ நாசம் செய்யக்கூடியது.

கொலைக்கருவி #07 :

கொலைக்கருவி #07 :

ஸ்ட்ராம்ட்ரிகர் (Sturmtiger) - எதிரிகள் மறைந்து கொள்ளும் நகர்புற கட்டிடங்களை துவம்சம் செய்யும் ஒரு ஆயுதம் வேண்டும் என்ற ஹிட்லரின் நேரடி ஆணையின் கீழ் உருவான ஆயுதம் இது..!

ஒன்றுமில்லாது செய்யும் :

ஒன்றுமில்லாது செய்யும் :

பெரிய அளவிலான ராக்கெட்களை வீசி கட்டிடங்களையும் எதிரிகள் மறைந்து கிடக்கும் மாபெரும் சுவர்களையும் ஒன்றுமில்லாது செய்யும் இது கவசம் பூட்டப்பட்ட ஒரு ஆயுதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலைக்கருவி #06 :

கொலைக்கருவி #06 :

தி ஸேனோ ப்ராஜக்ட் (The Zveno Project) - 1920-களில் தரைப்படைக்கு ஆதரவாய் இருக்க உருவான சோவியத் திட்டம்..!

இணைக்கப்பட்டு :

இணைக்கப்பட்டு :

இந்த ப்ராஜக்ட்டில் மிக பிரம்மாண்டமான சோவியத் டிபி-3 பாமர் உடன் மிகவும் சிறிய மற்றும் குறைந்த தூர (டைவ்-பாமர்கள்) இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.!

கொலைக்கருவி #05 :

கொலைக்கருவி #05 :

மிஸ்டல் ப்ளையிங் பாம்ப் (Mistel Flying Bomb) - ஜெர்மன் சேயில்பிளேன் சங்கம் மூலம் 1942-இல் உருவாக்கப்பட்டது..!

ஆளில்லா விமானம் :

ஆளில்லா விமானம் :

மிஸ்டல் ஆனது வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு ஆளில்லா விமானம் ஆகும், அதன் மேலே இணைக்கப்பட்ட ஒரு போர் விமானத்தின் பைலட் மூலம் இலக்கை வழிகாட்டும் படியான ஒரு கருத்தில் உருவானது..!

கொலைக்கருவி #04 :

கொலைக்கருவி #04 :

தி சர்காப் (The Surcouf) - 1920-களுக்கு பின்பு பிரான்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த நீர் மூழ்கி...!

பீதி :

பீதி :

இதன் 2,800 மெட்ரிக் டன் டிஸ்ப்ளேஸ்மெண்ட் வசதி எதிரி நாடுகளை வாய்பிளக்க வைக்கும், மேலும் அதில் இணைக்கப் பெற்றுள்ள இரண்டு 20 சென்டி மீட்டர் துப்பாக்கிகள் பீதியையும் சேர்த்தே கிளப்பின..!

கொலைக்கருவி #03 :

கொலைக்கருவி #03 :

டைப் 17 சப்மெரையின் (Type XVII Submarine) - 1933-ல் ஜெர்மன் பேராசிரியர் ஹெல்முத் வால்டர் அவர்களின் சாத்தியமான புரட்சிகரமான நீர்மூழ்கி வடிவமைப்பின் கீழ் உருவானது.

30 நாட்ஸ் :

30 நாட்ஸ் :

அப்போதைய நீர்மூழ்கிகள் நீருக்கடியில் சுமார் 7 நாட்ஸ் (Knots) வேகத்தில் தான் பயணித்தன, ஆனால், இது 30 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும் படியாக உருவாக்கப்பட்டது.

கொலைக்கருவி #02 :

கொலைக்கருவி #02 :

நகாஜிமா ஏ6எம்2-என் ரூபே (Nakajima A6M2-N ‘Rufe') - இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் மிதக்கும்படியான வடிவமைப்பு கொண்ட ஒரே போர் விமானம் இது தான்..!

பெர்ல் ஹார்பர் தாக்குதல் :

பெர்ல் ஹார்பர் தாக்குதல் :

தீவுப்பகுதிகளில் இருக்கும் தளங்களை அடையவே உருவாக்கம் பெற்ற இவ்வகை விமானத்தின் முதல் முன்மாதிரிதான் பெர்ல் ஹார்பர் தாக்குதலில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது..!

கொலைக்கருவி #01 :

கொலைக்கருவி #01 :

தி கேனல் டிபென்ஸ் லைட் (The Canal Defence Light) - நாஸி படையின் கனமற்ற ஆயுதங்களை முடக்க வேண்டும் என்ற ஒரு கூட்டு முயற்சியில் உருவான ஆயுதம்..!

 திகைப்பூட்டும் விளைவு :

திகைப்பூட்டும் விளைவு :

இதில் இருந்து வெளியாகும் மிகவும் சக்திவாய்ந்த ஒளியானது வேகமாக விரிவடை எதிரி வீரர்களுக்கு திகைப்பூட்டும் விளைவுகளை ஏற்படுத்தி குமட்டல் மற்றும் மயக்கம் போன்றவைகளை உருவாக்கும் படியாக உருவாக்கப்பட்டது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஹிட்லரின் நாஸி 'இரகசியங்கள்'..!


தீமை தான் வெல்லும் : ஹிட்லர் உட்பட..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
10 Bizarre World War II Weapons That Were Actually Built. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot