Jio, Airtel, Vodafone Idea அறிவித்த அதிரடி அறிவிப்பு! மே 3ம் தேதி வரை இந்த சேவை இலவசம்!

|

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது, அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது. கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த அனைத்து நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட முதற்கட்ட ஊரடங்கின் போதும் இந்நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலத்தை நீடிப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலிடிட்டி காலம் நீட்டிப்பு

வேலிடிட்டி காலம் நீட்டிப்பு

இந்திய அரசாங்கம், இரண்டாம் கட்டமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை நீடித்துள்ளது. இதனால் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வாடிக்கையாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இரண்டாம் முறையாகத் தனது வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை தற்பொழுது நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!

இப்படியும் ரீசார்ஜ் செய்யலாம்

இப்படியும் ரீசார்ஜ் செய்யலாம்

இந்தச் சலுகையின் மூலம் வருமானம் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய முடியாதவர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் என்று டெலிகாம் கூறியுள்ளது. இதைத் தாண்டி லாக்டவுன் காலத்தில் டெலிகாம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் தளம் மட்டுமின்றி தற்போது ஏடிஎம், போஸ்ட் ஆபீஸ், மளிகை கடைகள், மருத்துக் கடைகளில் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

12 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்

12 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்

இருப்பினும் லாக்டவுன் காரணமாக 3 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. டெலிகாம் நிறுவனங்களின் அறிவிப்புப்படி இந்த ரீசார்ஜ் நீட்டிப்பு சலுகையின் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 12 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் இந்த் சலுகை

அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் இந்த் சலுகை

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தனது வாடிக்கையாளர்களின் அனைத்து ப்ரீபெய்டு பேக்குகளுக்கான வேலிடிட்டியும் மே 3ம் தேதி, அதாவது லாக்டவுன் காலம் முடியும் வரையில் வேலிடிட்டி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தற்பொழுதுஅறிவித்துள்ளது.

அமைதியா இருந்தது இதுக்கு தானா: ஒரே திட்டம் அட்டகாச சலுகைகள்- இதுதான் Airtel!அமைதியா இருந்தது இதுக்கு தானா: ஒரே திட்டம் அட்டகாச சலுகைகள்- இதுதான் Airtel!

ஊரடங்கு முடியும் வரை இந்த சேவை இலவசம்

ஊரடங்கு முடியும் வரை இந்த சேவை இலவசம்

அதேபோல் பார்தி ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் வேலிடிட்டி முடிந்திருந்தாலும் அல்லது ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும், மே 3 ம் தேதி வரையில் இந்த பயனர்களுக்கு இன்கம்மிங் கால்கள் ரத்து செய்யப்படாது என்று அறிவித்துள்ளது.

மக்களின் தேவை மற்றும் சிக்கலை அறிந்து செயல்படும் டெலிகாம் நிறுவனங்கள்

மக்களின் தேவை மற்றும் சிக்கலை அறிந்து செயல்படும் டெலிகாம் நிறுவனங்கள்

ஊரடங்கு காலம் நிறைவு பெரும் வரையில் இலவச இன்கம்மிங் கால் சேவையை அனைவரும் தடையின்றி பெறுவார்கள் என்றும் கூறியுள்ளது. இந்தச் சலுகை குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரிய அளவில் உதவும் என்பதில் சந்தேகமில்லை. மக்களின் தேவை மற்றும் சிக்கலை அறிந்து டெலிகாம் நிறுவனங்கள் வழங்கிவரும் சலுகையகளை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரையும் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்பு துண்டிக்காமல் ஒன்றிணைய செய்துள்ளது.

ஜியோ அறிவித்த சலுகை

ஜியோ அறிவித்த சலுகை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், இதேபோன்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இத்துடன், ஜியோ புதிதாக JioPOS Lite என்ற பயன்பாட்டுச் செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த JioPOS Lite பயன்பாட்டைப் பயன்படுத்தி மற்ற ஜியோ எண் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் உதவி செய்தால், உதவி செய்தவருக்கு கமிஷன் கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு

இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு

இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் சில வாரங்களுக்கு முன்பு டெலிகாம் நிறுவனங்களை, தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஏற்ப இலவச டேட்டா நன்மையை வழங்குமாறு அறிவுறுத்தியது. டிராயின் அறிவுறுத்தல் படி இந்தச் சலுகையின் கீழ் எத்தனை வாடிக்கையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்ற முழு விபரத்தைச் சமர்ப்பிக்குமாறு டிராய் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel, Vodafone Idea Extend Validity And Free Incoming Calls To All Prepaid Mobile Accounts : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X