சூப்பர் டிப்ஸ்: மொபைல் மற்றும் லேப்டாப் இல் யூடியூப் "டார்க் தீம்" ஆக்ட்டிவேட் செய்வது எப்படி?

யூடியூப் இன் புதிய ஆன்ட்ராய்டு அப்டேட் ஆனா "டார்க் தீம்" உலகளவில் பிரளபளம் அடைந்து கொண்டிருக்கிறது.

By Sharath
|

யூடியூப் இன் புதிய ஆன்ட்ராய்டு அப்டேட் ஆனா "டார்க் தீம்" உலகளவில் பிரளபளம் அடைந்து கொண்டிருக்கிறது.

யூடியூப் இன் டார்க் தீம் சென்ற ஜூலை மாதத்தில் சில அதிர்ச்ட்ட பயனர்களுக்கு மட்டும் கிடைத்தது. இறுதியாக ஒரு வழியாய் தற்பொழுது அனைவர்க்கும் டார்க் தீம் கிடைக்கும்படி யூடியூப் இன் புதிய அப்டேட் கூகுள் பிளே ஸ்டோர் இல் கிடைக்கிறது.

 புதிய யூடியூப் டார்க் தீம்

புதிய யூடியூப் டார்க் தீம்

இந்த புதிய யூடியூப் டார்க் தீம் சேவையை உங்கள் ஸ்மார்ட்போன் இல் பயன்படுத்த, உங்களின் ஸ்மார்ட் போன் குறைந்தது வெர்ஷன் 13.35.51 ஆண்ட்ராய்டு இயங்கத்தலத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த புதிய அப்டேட் ஐ பெற உங்கள் யூடியூப் செயலியை முதலில் அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இல் டார்க் தீம் ஆக்ட்டிவ் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இல் டார்க் தீம் ஆக்ட்டிவ் செய்வது எப்படி?

- உங்கள் கூகுள் பிளே ஸ்டோர் சென்று யூடியூப் செயலி அப்டேட் செய்யுங்கள்.

- அல்லது இணையத்தில் புதிய யூடியூப் apk பைல் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் யூடியூப் செயலி ஓபன் செய்து வலது மேல் இடத்தில் இருக்கும் ப்ரொபைல் கிளிக் செய்யவும்.
- அடுத்து ப்ரொபைல் கீழ் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்.
- இப்பொழுது ஜெனரல் கிளிக் செய்யவும்.
- டார்க் தீம் ஆக்ட்டிவேட் செய்ய டார்க் தீம் ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.

உங்களுடைய யூடியூப் செயலி தற்பொழுது டார்க் தீம்-ற்கு மாறியிருக்கும். டார்க் தீம் வேண்டாம் என்றால் இன்னொரு முறை டார்க் தீம் கிளிக் செய்யுங்கள், உங்கள் யூடியூப் செயலி இயல்பு நிலை தீம்-ற்கு சென்று விடும்.

டார்க் தீம் காணவில்லை.!

டார்க் தீம் காணவில்லை.!

டார்க் தீம் விருப்பத்தை உங்கள் செயலி இல் காணவில்லை என்றால், உங்கள் ஸ்மார்ட்போன் இல் இயங்கும் பயன்பாடுகளின் பட்டியலில் இருந்து யூடியூப் பயன்பாட்டை மூடிவிட்டு, யூடுப் செயலி ஐ மறுதொடக்கம் செய்து முயற்சிக்கவும்.

சிங்கள் டிப்ஸ்:

சிங்கள் டிப்ஸ்:

மறுதொடக்கம் செய்தும் டார்க் தீம் விருப்பம் உங்களுக்குக் காட்டவில்லை என்றால், இந்த சிங்கள் டிப்ஸ் ஐ பின்பற்றுங்கள்.

உங்கள் ஜெனரல் செட்டிங்ஸ் இல் உள்ள லொகேஷன் விருப்பத்தை இந்தியா வில் இருந்து யூனிடெட் கிங்டம் அல்லது யூனிடெட் ஸ்டேட்ஸ் க்கு மாற்றுங்கள். மறுபடியும் யூடுப் செயலி பயன்பாட்டை மூடிவிட்டு மறுதொடக்கம் செய்யுங்கள். இப்பொழுது ஜெனரல் செட்டிங் சென்று டார்க் தீம் ஆக்ட்டிவேட் செய்து உங்கள் ஸ்மார்ட்போனிலும் அட்டகாசமான டார்க் தீம் பயன்படுத்துங்கள்.

லேப்டாப் & டெஸ்க்டாப் டார்க் தீம்

லேப்டாப் & டெஸ்க்டாப் டார்க் தீம்

உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் இல் டார்க் தீம் ஆக்ட்டிவேட் செய்ய, உங்கள் கூகுள் க்ரோம் அல்லது மொஸில்லா பையர் பாக்ஸ் இல் youtube.com டைப் செய்து யூடியூப் தளத்திற்கு செல்லுங்கள்.

டார்க் தீம் செட்டிங்

டார்க் தீம் செட்டிங்

வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி செட்டிங் பட்டன் ஐ கிளிக் செய்யுங்கள். டார்க் தீம் ஆன் என்ற விருப்பத்தை கிளிக் செய்து டார்க் தீம் இல் யூடியூப் பயன்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
YouTube’s Dark theme is rolling out to Android now – here’s how to get it : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X