யூட்யூப்பின் இரகசியமான 'டார்க் மோட்' அம்சம் - ஆக்டிவேட் செய்வதெப்படி.?

Written By:

உங்களுக்கு தெரியுமா.?? யூட்யூப்பில் ஒரு இரகசியமனா டார்க் மோட் (Dark mode) அம்சம் உள்ளதென்பது.? இந்த டார்க் மோட் அம்சம் என்றால் என்ன.?? இதை செயல்படுத்த முடியுமா.? இதை எப்படி செயல்படுத்துவது.? என்ற உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதோ.!

சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூட்யூப்தனை நாம் அனைவருமே இசை, வீடியோக்கள் பார்க்க பயன்படுத்துகிறோம் மற்றும் பில்லியன் கணக்கான பயனர்கள் நேரத்தை செலவிட யூட்யூப்தனை உபயோகிக்கிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. அந்த பில்லியன் கணக்கான பயனர்களில் பலருக்கும் தெரியாத ஒரு அம்சம் தான் - டார்க் மோட்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டார்க்நஸ் குறைத்தாலும்

டார்க்நஸ் குறைத்தாலும்

இந்த இரகசியமான யூட்யூப் டார்க் மோட் கொண்டு நீங்கள் கருமையான யூட்யூப்பை பயன்படுத்தலாம். எவ்வளவு தான் டார்க்நஸ்தனை (Darkness) குறைத்தாலும் வெகு நேரம் பிரகாசமான யூட்யூப் வீடியோக்களை பார்க்கும் உங்கள் கண்கள் சோர்வடைவது நிச்சயம். ஒருவேளை இதில் இருந்து தப்பிக்க விரும்பினால் அதாவது உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால் நீங்கள் தாராளமாக இந்த யூட்யூப் டார்க் மோட் அம்சத்தை பயன்படுத்தலாம்.

வழிமுறை #01

வழிமுறை #01

இந்த சீக்ரெட் டார்க் மோட் அம்சமானது கூகுள் க்ரோம் பதிப்பு 57 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் கிடைக்கிறது. எதற்கும் ஒருமுறை நீங்கள் வழிமுறைகளை பயன்படுத்தி பார்ப்பது உங்களுக்கு உதவலாம். முதலில், நீங்கள் உங்கள் கூகுள் க்ரோம் உலாவியை அப்டேட் செய்ய வேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

உங்கள் கூகுள் க்ரோம் பரவுஸர் அப்டேட் முடிந்ததும்.நீங்கள், Ctrl + Shift + I (ஐ) என்பதை அழுத்த க்ரோம் டெவலப்பர் டூல் டேப் திறக்கும்.

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது நீங்கள் கன்சோல் டேப் தனை தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கே பின்வரும் குறியீட்டை கேட் காப்பி செய்து (மேற்கோள் குறிகள் இல்லாமல்) பேஸ்ட் செய்ய வேண்டும் "document.cookie="VISITOR_INFO1_LIVE=fPQ4jCL6EiE; path=/" பின்னர் என்டர் தட்டவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது உங்கள் பக்கத்தை ரெப்பிரஷ் செய்து மெனு செல்லவும் அங்கு நீங்கள் டார்க் மோட் அம்சத்தை பார்ப்பீர்கள். அதை ஆக்டிவேட் செய்து விட்டு தொடர்ந்து டார்க் மோட் அம்சத்தை அனுபவிக்கவும், சிம்பிள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
YouTube Has A Secret Dark Mode – Here’s How You Can Activate It. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot