Home
How to

பிரவுசர் டேப்களை மியூட் செய்ய அற்புத டிப்ஸ்.!

கூகுள் பிரவுசரின் ஒவ்வொரு டேபிலும் ஆடியோ பிளே ஆகும் பட்சத்தில் ஸ்பீக்கர் ஐகான் தெரியும்.

By Meganathan S

இணையத்தில் இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு வலைத்தளங்களும் ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களை ஆட்டோபிளே முறையில் பதிவேற்றம் செய்கின்றன. இவை நம் இணைய அனுபவத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அதுவும் அதிகளவு வலைத்தளங்களை பல்வேறு டேப்களில் பயன்படுத்தும் போது எந்த டேப் எந்த ஒலியை பரப்புகிறது என்பதை தேடிப்பிடித்து அவற்றை மியூட் செய்வதற்குள் தலையை சுற்றி விடும்.

பிரவுசர் டேப்களை மியூட் செய்வது எப்படி?

இந்த தொல்லையை சரிகட்டவே இந்த தொகுப்பு. இதில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ், கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி என பல்வேறு பிரவுசர்களில் டேப்களை மியூட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

சமீபத்திய விண்டோஸ் 10 அப்டேட் எட்ஜ் பிரவுசரில் பல்வேறு டேப்களை ஒற்றை க்ளிக் மூலம் மியூட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 கூகுள் க்ரோம்:

கூகுள் க்ரோம்:

கூகுள் பிரவுசரின் ஒவ்வொரு டேபிலும் ஆடியோ பிளே ஆகும் பட்சத்தில் ஸ்பீக்கர் ஐகான் தெரியும். அந்த வகையில் ஸ்பீக்கர் ஐகான் உள்ள டேப்-இல் ரைட் க்ளிக் செய்து மியூட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இதனை நீங்கள் பயன்படுத்தும் டேபில் இருந்து வெளியே வராமலும் செய்ய முடியும்.

எட்ஜ்:

எட்ஜ்:

டேப்களை மியூட் செய்யும் வசதி ஒருவழியாக எட்ஜ் பிரவுசரிலும் வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 அப்டேட் ஆட்டோபிளே ஆகும் டேபில் ஸ்பீக்கர் ஐகானை காண்பிக்கும். அதனை கிளிக் செய்து மியூட் ஆப்ஷனை செயல்படுத்த முடியும். இதனை நீங்கள் பயன்படுத்தும் டேப் மட்டுமின்றி பின்னணியில் இயங்கும் டேப்களிலும் செய்ய முடியும். இந்த பிரவுசரிலும் நீங்கள் பயன்படுத்தும் டேபில் இருந்து வெளியே வராமல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 ஃபர்ஃபாக்ஸ்:

ஃபர்ஃபாக்ஸ்:

ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரிலும் ஆடியோ ஒலிக்கும் டேப்களில் ஸ்பீக்கர் ஐகான் காணப்படும், அதனை க்ளிக் செய்து மியூட் ஆப்ஷனை இயக்க முடியும். இதே போன்று குறிப்பிட்ட டேப்களில் ரைட் க்ளிக் மூலமாகவும் மியூட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

ஒபேரா:

ஒபேரா:

பல்வேறு டேப்களை பயன்படுத்தும் போது அவற்றில் ஒலிக்கும் ஆடியோ மியூட் செய்ய ஒபேரா சிறந்த வழிமுறைகளை வழங்குகிறது. பின்னணியில் ஒலிக்கும் ஆடியோக்களை இந்த பிரவுசரில் சுலபமாக மியூட் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தும் டேபில் இருந்தபடியே ரைட் க்ளிக் மூலம் மற்ற டேப்களையும் மியூட் செய்ய முடியும்.

மற்ற பிரவுசர்களை போன்று இதிலும் ஸ்பீக்கர் ஐகானை க்ளிக் செய்து பின்னணியில் ஒலிக்கும் டேப்களை மியூட் செய்யலாம். ஒபேராவில் ஆடியோ ஒலிக்கும் டேப்களில் சிறிய ஆடியோ லெவல் டிஸ்ப்ளே செய்யப்படும் இவற்றில் மவுஸ் டேப் மூலம் ஸ்வைப் செய்தால் பெரிய ஸ்பீக்கர் ஐகான் தெரியும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
சஃபாரி:

சஃபாரி:

ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் எட்ஜ் போன்றே சஃபாரி பிரவுசரிலும் இரண்டு வகையில் மியூட் செய்யும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. டேபில் தெரியும் மியூட் ஐகானை க்ளிக் செய்தோ அல்லது ரைட் க்ளிக் மூலமாகவோ மியூட் செய்யலாம். இத்துடன் யூஆர்எல் பாரில் சஃபாரி நீல நிற ஸ்பீக்கர் ஐகானை காண்பிக்கும், இதை க்ளிக் செய்து பின்னணியில் இயங்கும் அனைத்து டேப்களையும் மியூட் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Your guide to muting browser tabs; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X