Home
How to

பிளாஸ்டிக் பாட்டில்கள் போதும்; சல்லி பைசா செலவு இல்லாமல் ஒரு ஏசி; செய்வது எப்படி.?

பட்ஜெட் சிக்கல், மின்சார கட்டணம் சிக்கல் என கழுத்தை நெருக்கும் பல பிரச்சனைகள் அதில் உள்ளதே, அதிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா.? - நிச்சயமாக இருக்கிறது.!

By Gizbot Bureau

எங்கு பார்த்தாலும் துப்பாட்டாவால் முகத்தை மூடிய பெண்கள், கர்சீப்பை அல்லது தொப்பியை மாட்டிக்கொண்ட தலைமறைப்புகளுடன் ஆண்கள் - இதெல்லாம் மண்டைய பொளக்கும் வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது என்பதை நமக்கு வெளிப்படையாய் உணர்த்தும் அறிகுறிகளாகும்.

வெயிலுக்கு பயந்து காலையில் பொழுதோடு எழுந்து பணிகளுக்கு ஓடுவதும், ஆபிஸில் ஏசி இருந்தால் அங்கேயே கொஞ்சம் நேரம் உட்காந்துவிட்டு தாமதமாக வீடு திரும்புவதும், இனி சகமான காரியங்களாகும். வீட்டில் ஒரு ஏசி இருந்தால் நல்லாத்தான் இருக்கும் ஆனால் பட்ஜெட் சிக்கல், மின்சார கட்டணம் சிக்கல் என கழுத்தை நெருக்கும் பல பிரச்சனைகள் அதில் உள்ளதே தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால் எண்களின் பதில் - ஆம். நிச்சயமாக இருக்கிறது என்பது தான்.!

அஷிஸ் பால்

அஷிஸ் பால்

வங்கதேசத்தை சேர்ந்த அஷிஸ் பால் - என்பவர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தி மின்சாரம் இல்லாமல் செயல்படும் ஒரு வகையான ஈகோ கூலர் (Eco cooler) குளிர்சாதன பெட்டியை வடிவமைத்தவர் ஆவார்.

மின்சாரம் இன்றி

மின்சாரம் இன்றி

இவர் வடிவமைத்துள்ள இந்த 'சாதனம்' ஆனது முற்றிலும் மின்சாரம் இன்றி இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியாகும். மிகவும் குறைந்த அளவிலான செலவில் இதை உருவாக்கலாம் என்று விளக்கும் அஷிஸ் பால் இதற்கு ஈகோ கூலர் என்றும் பெயரிட்டுள்ளார்.

அடிப்படை அறிவியல்

அடிப்படை அறிவியல்

நாம் பள்ளிக்காலங்களில் அறிவியல் புத்தங்கங்களில் படித்த உள்நுழையும் காற்றானது விரிவடையும் போது குளிராவது தான் இந்த ஈகோ கூலர் கருவியின் அடிப்படை அறிவியல் தந்திரமாகும்.

செலவு

செலவு

வெயிலில் இருந்து தப்பிக்க மிகவும் குறைந்த செலவில் உருவாக்கம் பெறும் இந்த குளிர்சாதன பெட்டியானது, கண்டறியப்பட்ட பொழுதே வங்கதேசம் முழுக்க சுமார் 25,000 வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்போது அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கலாம்.

திறன்

திறன்

பயன்பாடுகளுக்கு ஏற்ப பயனளிக்கும் இந்த ஈகோ கூலர் கருவியானது சாதாரண வெப்ப அளவு கொண்ட அறையினுள் வெப்பநிலையை சுமார் 5 டிகிரி வரை குறைக்கும் திறன் கொண்டுள்ளது.

குளிர்ச்சி

குளிர்ச்சி

கொடுமையான வெயிலில் இருந்து மின்சாரமின்றி 5 டிகிரி அளவில் தப்பிக்க முடியும் என்பதற்காகவே இக்கருவியை பாராட்ட வேண்டும் மற்றும் இது எப்படி வேலை செய்கின்றது என்பதை மிகவும் எளிமையாக வாய் மூலம் காற்றை ஊதி மறுபக்கம் குளிர்ச்சியை கையில் உணர முடியும்.

எளிமை

எளிமை

அந்த எளிமையான அறிவியல் முறையில் தான் பிளாஸ்டிக் பாட்டில்களில் காற்றை அழுத்தி உள்ளே அனுப்புவதால் காற்று குளிர்விக்கப்படுகின்றது - இவ்வளவு தான் ஈகோ கூலர்.!

உலக வெப்படமடைதல்

உலக வெப்படமடைதல்

பிளாஸ்டிக் பாட்டில்களை மண்ணுக்குள் புதைய விடமால் செய்த மாதிரியும் ஆகிற்று, உடன் நமக்கே நமக்கான ஒரு ஏர் கூலரையும் உருவாக்கிடலாம். ஆர்வமும் உலக வெப்படமடைதல் சார்ந்த அக்கறையும் இருந்தால் இதை உருவாக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் மரங்களை நடுங்கள் உடன் பிளாஸ்டிக்குகளை அறவே தவிர்த்திடுங்கள்.!

Best Mobiles in India

English summary
You too can make an air conditioner that works without electricity. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X