Home
How to

Google Maps செயலியின் புதிய வசதி.. இனி அபராத சலான் பெறுவதை தவிர்க்கலாம்.. எப்படி தெரியுமா?

முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். இதனால் தான் இந்த கூகுள் மேப்ஸ் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாக செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுபடுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது போனில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியைத் தட்டினால் போதும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகக் காட்டிவிடும்.

கூகுள் மேப்ஸ் செயலியின் புதிய வசதி.. இனி சலான் பெறுவதை தவிர்க்கலாம்..

அதேபோல் இந்த செயலியில் தொடர்ந்து புதிய புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் இருக்கும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் கூகுள் மேப்ஸ் செயலியில் மீண்டும் பயனுள்ள புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது அந்த புதிய வசதி என்ன? மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது வாகனங்களில் செல்லும் மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனவே வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை மீறி செல்லும் போது அபராதம் செலுத்த வேண்டும். குறிப்பாக இந்த விதிமுறை சமீபத்தில் தமிழ்நாட்டிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

கூகுள் மேப்ஸ் செயலியின் புதிய வசதி.. இனி சலான் பெறுவதை தவிர்க்கலாம்..

குறிப்பாக சென்னையில் வேகமாகச் செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் செலுத்துவதற்கான சலானை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் பயனர்கள் சலான் செலுத்துவதைத் தவிர்க்க கூகுள் மேப்ஸ் செயலியின் புதிய வசதி உதவுகிறது. இப்போது இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓபன் செய்யவும். அடுத்து கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள அக்கவுண்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2 அதன்பின்பு செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் நேவிகேஷன் செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3: அடுத்து டிரைவிங் ஆப்ஷனில் இருக்கும் ஸ்பீடோமீட்டர் (Speedometer)ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த ஸ்பீடோமீட்டர் கிளிக் செய்ததும் கூகுள் மேப்ஸ் கொண்டு நேவிகேட் செய்யும் போது ஜிபிஎஸ் (GPS) வேகம் காண்பிக்கப்படும். இந்த அம்சம் வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் போதும் நிறம் மாறி எச்சரிக்கை செய்யும்.

அதேபோல் இந்த ஸ்பீடோமீட்டர் எப்படி வேலை செய்யும் என்பது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது ஏ.ஐ தொழில்நுட்பம், ஸ்டிரீட் வியூ படங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு படங்களைப் பயன்படுத்தி கூகுள் மேப்ஸ் வேகக்கட்டுப்பாடு பற்றிய முழு எச்சரிக்கையைக் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் செயலியின் புதிய வசதி.. இனி சலான் பெறுவதை தவிர்க்கலாம்..

பின்பு இதற்கு வேண்டி உலகம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் அதிகமான அடையாள குறியீடுகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் மேப்ஸ் (Google Maps)-இல் இருக்கும் ஏ.ஐ மாடல் ஒரு எச்சரிக்கை குறியீட்டைக் கண்டறிந்தால் உடனே ஜிபிஎஸ் (GPS) விவரங்களைக் கொண்டு அதில் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதற்கு ஏற்ப வேகக்கட்டுப்பாடு விதிகளை அப்டேட் செய்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு போக்குவரத்து முறைகளைக் கொண்டு வேகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும். குறிப்பாக இந்த புதிய வசதி அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் கூகுள் மேப்ஸ் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்த செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
You can now use new feature of the Google Maps to avoid speed challan: Do you know how: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X