Home
How to

ரொம்ப நாளா எதிர்பார்த்த அம்சத்தை வெளியிட்ட Instagram.. இனி அந்த செயலியை டெலிட் பண்ணிடுங்க..

இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பல்வேறு முக்கியமான தகவல்களை இந்த செயலியில் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதன்படி தற்போது கூட ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது இன்ஸ்டாகிராம். அதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ் வீடியோக்களை நேரடியாக டவுன்லோட் (download) செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப நாளா எதிர்பார்த்த அம்சத்தை வெளியிட்ட Instagram..

எனவே பயனர்கள் இனிமேல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ (Reels) டவுன்லோட் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது ஆன்லைன் லிங் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக இந்த அம்சத்தை நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராம் பயனர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது கிடைத்துள்ளது.

ஆனாலும் இந்த புதிய அம்சம் தற்போதைக்கு பப்ளிக் அக்கவுண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பயனர்கள் விரும்பினால் ரீல்ஸ் டவுன்லோட் செய்யப்படுவதைத் தடுக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் குறித்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசெரி தனது சேனலில் தெரிவித்தார். குறிப்பாக இந்த டவுன்லோட் செய்யும் அம்சம் ஏற்கனவே அமெரிக்கப் (US) பயனர்களுக்கு முதலில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் பயனர்கள் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரொம்ப நாளா எதிர்பார்த்த அம்சத்தை வெளியிட்ட Instagram..

இந்த புதிய இன்ஸ்டாகிராம் அம்சம் ஆனது பயனர்கள் பப்ளிக் அக்கவுண்ட்களில் இருந்து ரீல்ஸ்-ஐ சேவ் செய்து கொள்ள அனுமதி கொடுக்கிறது. அதன்படி நீங்கள் டவுன்லோட் செய்யும் ரீல்களில், அதனை உருவாக்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டின் லோகோ வாட்டர்மார்க் போன்றவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இன்ஸ்டா ரீல்ஸ் டவுன்லோட் செய்யும் வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1 முதலில் புதிய அப்டேட் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யக் குறிப்பிட்ட ஒரு ரீல்ஸ்-ல் இருக்கும் ஷேர் (Share) செய்யக் கோரும் பேப்பர் ஏர்பிளேன் ஐகானை (airplane icon) க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2 ஏர்பிளேன் ஐகானை (airplane icon) க்ளிக் செய்ததும் டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை (download option) எளிமையாகப் பார்க்க முடியும். அதை க்ளிக் செய்ததும் ரீல்ஸ் உங்களது சாதனத்தில் டவுன்லோட் செய்யப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலகளவில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்று இந்த இன்ஸ்டாகிராம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் அதிகம் விருப்பப்படும் செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இன்ஸ்டாகிராமில் அகௌண்ட் வைத்துள்ளனர், மேலும் அவர்களுக்கென மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.

ரொம்ப நாளா எதிர்பார்த்த அம்சத்தை வெளியிட்ட Instagram..

அதன்படி இந்த இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் யாருக்கு உள்ளது என்று கேட்டால் அது இன்ஸ்டாகிராமுக்கு மட்டும் தான். அதாவது இன்ஸ்டாகிராம் செயலியின் சொந்த இன்ஸ்டாகிராம் அகௌண்ட்டுக்கு தான் அதிக ஃபாலோவர்ஸ் உள்ளது. அதுவும் 663 மில்லியன் ஃபாலோவர்ஸ் உடன் முதல் இடத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளது .

குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியில் அனைத்து முக்கிய செய்திகளையும் எளிமையாகப் பார்க்க முடியும். அதேசமயம் இந்நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளன. எனவே தான் இந்த இன்ஸ்டாகிராம் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
You can now directly download Reels on Instagram: here’s how to do it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X