சியோமி பயனர்களே: பிரபல டெய்லி ஹண்ட் செயலியில் டார்க் தீம் பயன்முறையை சரிசெய்வது எப்படி?

|

சியோமி நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றாகும். எண்ணில் அடங்கா நுகர்வோர்கள் சியோமி மற்றும் அதன் துணை பிராண்டுகளான ரெட்மி, போக்கோ சாதனங்களை பயன்படுத்துகின்றனர். சியோமியின் MIUI OS ஆனது டார்க் தீம் (டார்க் மோட்) உட்பட பல தனித்துவமான அம்சங்களை கொண்டு வருகிறது. சியோமி, ரெட்மி, போக்கோ போன்களில் உள்ள டார்க் தீம் பிரபல டெய்லி ஹண்ட் ஆப்ஸ்கள் உள்ளிட்ட பல பயன்பாடுகளை பாதிக்கிறது என்றே கூறலாம்.

சியோமி பயனர்களே: டெய்லிஹண்ட் செயலியில் டார்க் தீம்மை சரிசெய்வது எப்படி

டெய்லி ஹண்ட் இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் பயன்பாடுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விரல் நுணியில் பல்வேறு அணுகலை வழங்கும் இந்த செயலி சமீபத்திய பல புதுப்பிப்புகளை வழங்குகிறது. நீங்கள் பிரபல டெய்லி ஹண்ட் பயன்பாட்டை எம்ஐ, போக்கோ, ரெட்மி சாதனங்களில் பயன்படுத்தினால் சில அசௌகரிய உணர்வுகளை சந்தித்திருக்கலாம். பிற குறிப்பிட்ட பிராண்ட்களின் சாதனங்களிலும் இந்த சிக்கல் நேர்ந்திருக்கலாம். இதை சில எளிய வழிமுறைகள் மூலம் சரி செய்ய முடியும்.

டெய்லி ஹண்ட் பயன்பாட்டில் சியோமி டார்க் தீம்மை சரி செய்வது எப்படி?

சியோமி பயனர்களே: டெய்லிஹண்ட் செயலியில் டார்க் தீம்மை சரிசெய்வது எப்படி

ஸ்டெப் 1: உங்கள் போனில் செட்டிங்க்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்து டிஸ்ப்ளே தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

சியோமி பயனர்களே: டெய்லிஹண்ட் செயலியில் டார்க் தீம்மை சரிசெய்வது எப்படி

ஸ்டெப் 2: தற்போது கொடுக்கப்பட்ட விருப்பங்களில் இருந்து டார்க் மோட் பயன்முறையை தேர்ந்தெடுக்கவும்.

சியோமி பயனர்களே: டெய்லிஹண்ட் செயலியில் டார்க் தீம்மை சரிசெய்வது எப்படி

ஸ்டெப் 3: இந்த செயல்பாடு முடிந்ததும், மீண்டும் டார்க் மோட் பயன்முறை விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தாமாக டார்க் மோட்-க்கு மாறிய அனைத்து ஆப்ஸ் பட்டியலும் காட்டப்படும்.

சியோமி பயனர்களே: டெய்லிஹண்ட் செயலியில் டார்க் தீம்மை சரிசெய்வது எப்படி

ஸ்டெப் 4: இதில் டெய்லி ஹண்ட் ஆப்ஸ் பயன்பாட்டில் காட்டப்படும் டார்க் மோட் பயன்முறையை அணைத்து வைக்க வேண்டும்.

அவ்வளவுதான்! வேலை முடிந்தது., இந்த செயல்முறை மூலம் டெய்லி ஹண்ட் செயலியில் எதிர்கொள்ளப்படும் சிக்கலை தீர்க்கலாம். தொடர்ந்து பிரபல செய்தி செயலியான டெய்லி ஹண்ட்டை எளிதாக பயன்படுத்தவும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும் முடியும். டார்க் தீம் பயன்பாடு என்பது ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். முன்னதாக சில செயலிகள் விருப்பத்திற்கு ஏற்ப ஆன் செய்து வைக்கும் வகையில் டார்க் மோட் அம்சத்தை கொண்டு வந்தது.

ஆனால் இந்த வழிமுறைகள் மூலம் உங்கள் மொபைலில் டார்க் தீம் பயன்பாட்டை தேவைக்கேற்ப ஆன் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் அனைத்து ஆப்ஸ்களிலும் டார்க் தீம் பயன்பாட்டை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டில் டார்க் தீம் பயன்பாடு என்பது சில சிக்கலான அனுபவத்தையும் வழங்குகிறது. இதுபோன்ற சிக்கலான அனுபவத்தை நீங்கள் சந்தித்து வந்தால் இந்த ஸ்டெப்கள் மூலம் இவைகளை எளிதாக சரி செய்து, உங்களுக்கு பிடித்த ஆப்ஸ்களின் அணுகலை சிக்கலின்றி தொடர்ந்து அனுபவிக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Fix Dark Theme On Dailyhunt App On Your Xiaomi Phone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X