Home
How to

ஆன்லைனில் உங்களின் பி.எஃப். தொகையை பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஊழியர்களிடம் பி.எஃப். மூலம் பெறப்படும் தொகையுடன் மத்திய அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் ஊழியர்கள் பணியை விட்டு செல்லும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் பி.எஃப். (பிராவிடன்ட் ஃபண்ட்) எனும் சலுகை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஊழியர்களிடம் பி.எஃப். மூலம் பெறப்படும் தொகையுடன் மத்திய அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் ஊழியர்கள் பணியை விட்டு செல்லும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான மொத்த வழிமுறைகளும் மத்திய உழைப்பாளர் மற்றும் ஊதிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

எப்போது வேண்டுமானாலும், எடுத்துக் கொள்ளலாம்

எப்போது வேண்டுமானாலும், எடுத்துக் கொள்ளலாம்

தொழிலாளர் விரும்பும் போது இந்த தொகையை எப்போது வேண்டுமானாலும், எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படாத பட்சத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் எடுத்துக் கொள்ள முடியும். யுனிஃபைடு மெம்பர் போர்டல் வலைதளம் மூலம் தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பது மிகவும் எளிய காரியம் ஆகும். எனினும், தொழிலாளர்கள் குழப்பத்தை போக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஃபார்ம் 19, பார்ம் 10சி மற்றும் ஃபார்ம் 31 போன்றவற்றை ஒருங்கிணைத்து இருக்கிறது.

வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிக்கும் வழிமுறையை தொடர்ந்து பார்ப்போம்.

வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிக்கும் வழிமுறையை தொடர்ந்து பார்ப்போம்.

முன்கூட்டியே கவனிக்க வேண்டியவை:

- இவ்வாறு செய்யும் முன் உங்களிடம் ஆக்டிவேட் செய்யப்பட்ட யு.ஏ.என். நம்பர் மற்றும் EPFO வலைதளத்தில் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

- யு.ஏ.என். நம்பர் மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாக்-இன் செய்ய வேண்டும்.

ஒருவேளை யு.ஏ.என். நம்பர் இல்லாத பட்சத்தில் ஆக்டிவேட் யு.ஏ.என். எனும் பட்டனை க்ளிக் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் யு.ஏ.என். நம்பர் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரம் ஆகும்.

லாக்-இன் செய்ததும்

லாக்-இன் செய்ததும்

- லாக்-இன் செய்ததும் பக்கத்தில் பயனரின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

- அதில் Online Services ஆப்ஷனை க்ளிக் செய்து மெனு பாரில் இருக்கும் Claim ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி வங்கி அக்கவுண்ட் நம்பரின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவு செய்து, Verify பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- வெரிஃபை ஆனதும், கீழ்புறம் ஸ்கிரால் செய்து Proceed to Online Claim ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- அடுத்த பக்கத்தில் ஸ்கிரால் செய்து பட்டியலில் இருந்து Only PF withdrawal form ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- ஆதார் ஒ.டி.பி. மூலம் கோரிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

- மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பூர்த்தி செய்த பின் பயனர்கள் யு.ஏ.என். வலைதளத்தில் தங்களது கோரிக்கை நிலவரத்தை Online Services ஆப்ஷனில் Check Claim Status பட்டனை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு:

குறிப்பு:

ஒருவேளை உங்களது நிறுவனம் தொழிலாளர் வைப்பு நிதியை ஏதேனும் டிரஸ்ட் உடன் நிர்வகித்து வந்தால், பணத்தை எடுப்பதற்கான கோரிக்கையை சமர்பிக்க முடியாது.

Best Mobiles in India

English summary
withdraw your Provident Fund online Heres what you need to Know: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X