Home
How to

கண்டிப்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய Windows 10 கீபோர்டு ஷார்ட்கட் .! மிஸ் பண்ணாதீங்க.!

விண்டோஸ் 10 இயங்குதளத்தைப் பல பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பிரபலமான OS தளங்களில் ஒன்றான இந்த OS பதிப்பில் சிறந்த UI மற்றும் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்கள் ஒளிந்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான அம்சங்கள்

நூற்றுக்கணக்கான அம்சங்கள்

இதில் உள்ள நூற்றுக்கணக்கான அம்சங்களில் சிலவற்றை நாம் பயன்படுத்துவதே இல்லை. குறிப்பாக உங்கள் வெளியை எளிதாக்கும் ஷார்ட்கட்களை நாம் பயன்படுத்துவதே இல்லை. அப்படியான ஷார்ட்கட்களில் அதிகம் தேவைப்படும் கீபோர்டு ஷார்ட்கட்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

விண்டோஸ் 10-ல் உள்ள கீபோர்டு ஷார்ட்கட்

விண்டோஸ் 10-ல் உள்ள கீபோர்டு ஷார்ட்கட்

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் சுமார் ஒரு டன் கீபோர்டு ஷார்ட்கட் அம்சங்கள் கொட்டிக்கிடக்கிறது. இந்த எளிமையான ஷார்ட்கட்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களுக்கு கர்சரே தேவைப்படாது என்பது தான் உண்மை. உங்கள் வாழ்க்கையை எளிதாக்க, விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருக்கும் 20 ஷார்ட்கட் அம்சம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1 டெஸ்க்டாப் (Desktop)

1 டெஸ்க்டாப் (Desktop)

உங்கள் டெஸ்க்டாப் திரைக்கு விரைந்து செல்ல வேண்டும் என்றால் உடனே Windows Key + D அழுத்துங்கள்.

2. லாக் ஸ்கிறீன் (Lock Screen)

2. லாக் ஸ்கிறீன் (Lock Screen)

உங்கள் கணினியை லாக் செய்ய வேண்டும் என்றால் உடனே Windows Key + L என்ற கீஸ்-களை அழுத்துங்கள்.

3. ரன் (Run)

3. ரன் (Run)

ரன் அம்சத்தை உடனடியாக அணுக வேண்டுமென்றால் உடனே Windows Key + R என்ற பட்டன்களை அழுத்துங்கள்.

4. மல்ட்டி- டாஸ்கிங் (Multi-tasking)

4. மல்ட்டி- டாஸ்கிங் (Multi-tasking)

உங்கள் கணினியில் மல்ட்டி- டாஸ்கிங் பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் போது அடுத்த டேபிற்கு செல்ல வேண்டும் என்றால் உடனே Windows Key + Tab அழுத்துங்கள்.

5. செட்டிங்ஸ் (Settings)

5. செட்டிங்ஸ் (Settings)

செட்டிங்ஸ் மெனுவிற்கு உடனே செல்ல வேண்டும் என்றால் உடனே Windows Key + I கிளிக் செய்யுங்கள்.

6. எக்ஸிட் (Exit)

6. எக்ஸிட் (Exit)

பயன்படுத்திக்கொண்டிருக்கும் ப்ரோக்ராம் டேபை உடனே கிளோஸ் செய்ய Ctrl + F4 அழுத்துங்கள்.

7. கோர்ட்டான (Cortana)

7. கோர்ட்டான (Cortana)

இது கொரோனா இல்லை Cortana, விண்டோஸின் ஸ்மார்ட் அஸ்சிஸ்டன்டை அணுக நினைத்தாள் உடனே Windows Key + C கிளிக் செய்யுங்கள்.

8. டாஸ்க் மேனேஜர் (Task Manager)

8. டாஸ்க் மேனேஜர் (Task Manager)

டாஸ்க் மேனேஜர் என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சம் இந்த அம்சத்தை உடனே அணுகும் ஷார்ட்கட் உங்களுக்குத் தெரிந்திருந்தால் வேலை இன்னும் சுலபமாகிவிடும். டாஸ்க் மேனேஜர் உடனே அணுக Ctrl + shift + Esc அழுத்துங்கள்.

9. பைல் எக்ஸ்ப்ளோரர் (File Explorer)

9. பைல் எக்ஸ்ப்ளோரர் (File Explorer)

உங்கள் கணினியில் உள்ள பைல் எக்ஸ்ப்ளோரர் அம்சத்தை உடனே அணுக Windows Key + E அழுத்துங்கள்.

10. ஸ்கிரீன்ஷாட் (Screenshot)

10. ஸ்கிரீன்ஷாட் (Screenshot)

உங்கள் மனிதரில் இருக்கும் ப்ரோக்ராம் தகவலை ஸ்கிரீன்ஷாட் எடுக்க உடனே Windows Key + PrtScn கிளிக் செய்யுங்கள்.

11. மினிமைஸ் (Minimize)

11. மினிமைஸ் (Minimize)

உங்கள் திரையில் இருக்கும் ப்ரோக்ராமை உடனடியாக மினிமைஸ் செய்ய Windows + Home கிளிக் செய்யுங்கள்.

12. சர்ச் (Search)

12. சர்ச் (Search)

உங்கள் கணினியில் இருக்கும் தகவலை தேடி கண்டுபிடிக்க சர்ச் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த சர்ச் டேப்பிற்கு உடனே செல்ல Windows Key + S அழுத்துங்கள்.

13. ஆக்ஷன் சென்டர் (Action Centre)

13. ஆக்ஷன் சென்டர் (Action Centre)

ஆக்ஷன் சென்டர் அம்சத்தை உடனே அணுக Windows Key + A அழுத்துங்கள்.

14. விர்ச்சுவல் டெஸ்க்டாப் (Virtual Desktop)

14. விர்ச்சுவல் டெஸ்க்டாப் (Virtual Desktop)

கர்சர் இல்லாமை விர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நினைத்தால் உடனே Windows Key + Ctrl + D அழுத்துங்கள்.

15. ப்ராஜெக்ட் ஸ்கிரீன் (Project Screen)

15. ப்ராஜெக்ட் ஸ்கிரீன் (Project Screen)

ப்ராஜெக்ட் ஸ்கிரீன் டேப்பிற்கு உடனே செல்ல Windows Key + P அழுத்துங்கள்.

16. கிளோஸ் விர்ச்சுவல் டெஸ்க்டாப் (Close a Virtual Desktop)

16. கிளோஸ் விர்ச்சுவல் டெஸ்க்டாப் (Close a Virtual Desktop)

நீங்கள் ஓபன் செய்திருந்த விர்ச்சுவல் டெஸ்க்டாப் அம்சத்தை உடனே கிளோஸ் செய்ய Windows Key + Ctrl + F4 அழுத்துங்கள்.

17. கட் (Cut)

17. கட் (Cut)

ரைட் கிளிக் செய்யாமல் உடனே கட் செய்ய விரும்பினால் Ctrl + X அழுத்துங்கள்.

18. காப்பி (Copy)

18. காப்பி (Copy)

ரைட் கிளிக் செய்யாமல் உடனே காப்பி செய்ய விரும்பினால் Ctrl + C அழுத்துங்கள்.

19. பேஸ்ட் (Paste)

19. பேஸ்ட் (Paste)

ரைட் கிளிக் செய்யாமல் உடனே பேஸ்ட் செய்ய விரும்பினால் Ctrl +V அழுத்துங்கள்

20. அண்டூ (Undo)

20. அண்டூ (Undo)

நீங்கள் செய்த தவறான செயலை உடனே அண்டூ செய்ய Ctrl + Z கிளிக் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Windows 20 Shortcuts Keys You Should Know : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X