Home
How to

சிக்னல், எச்சரிக்கைகளுக்கு சிவப்பு நிறம் பயன்படும் காரணம் என்ன? முதலில் கண்டறிந்தவர் யார்?

நாம் ரயில் நிலையங்களிலோ, போக்குவரத்து சிக்னல்களிலோ ஒரு ஐந்து குறைந்தது ஐந்து நிமிடமானது காத்து நிற்பதுண்டு. சிவப்பு விளக்கு எரியும் போது, எதற்காக நிற்கின்றோம்.

By Rajivganth Gurusamy

நம்மில் பெரும்பாலோனோர் சிந்திப்பது கிடையாது. சிந்தித்து இருந்தால் இன்று நம்மில் ஏராளமானோர் பெரும் ஞானியாக இருந்திருக்க முடியும். கண்டுபிடிப்புகளுக்கு மட்டும் சிந்தித்தால் போதாது. ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் பயன்படுத்தப்படும் நிறமோ இல்லை. பயன்படுத்தும் பொருட்களை அதில் ஏன் உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கூட நாம் இன்னியும் தெளிவான பாதைக்கு பயணிக்க முடியும் என்று அறிஞர்கள் சொல்கின்றனர்.

சிக்னல், எச்சரிக்கைகளுக்கு சிவப்பு நிறம் பயன்படும் காரணம் என்ன?

நாம் ரயில் நிலையங்களிலோ, போக்குவரத்து சிக்னல்களிலோ ஒரு ஐந்து குறைந்தது ஐந்து நிமிடமானது காத்து நிற்பதுண்டு. சிவப்பு விளக்கு எரியும் போது, எதற்காக நிற்கின்றோம். றகு மஞ்சள் நிற விளக்கு எரிந்த உடன் ஏன் தயாராகின்றோம். பிறகு பச்சை விளக்கு எரியத் துவங்கியவுடன் ஏன் செல்கின்றோம். ஆனால் எதற்காக நிற்க சிவப்பு விளக்கை பயன்படுத்த வேண்டும் நினைத்து இருக்கின்றோமா?

இந்த பச்சை, மஞ்சள் நிறங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு சிவப்பு நிறத்துக்கு மட்டும் இருக்கின்றது. இதற்கு ஏன் என்று அறிவியல் பூர்வமாகவும் உளவியல் ரீதியாகவும் பார்த்தால், நமக்கே பிரமிக்க வைக்கின்றது.

சிக்னல் பயன்பாடு:

சிக்னல் பயன்பாடு:

சிவப்பு நிறங்கள் முதலில் ரயில்கள் நிற்க பயன்படுத்தப்பட்டது. பிறகு ரயில்கள் இயங்கத்துக்கு பச்சை நிறம் என்று பயன்படுத்தப்பட்டது. பிறகு வாகன போக்குவரத்து வந்த பிறகு விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாகவும் வாகங்களை நெசரில் இல்லாமல் சாலைகளில் இயக்கவும் சிக்கனல் பயன்பாடு கொண்டுவரப்பட்டது. தற்போது லேசர் எனப்படும் அகச்சிவப்பு கதிரை துப்பாக்கியில் பயன்படுத்தி இன்று ராணுவத்தினர் எதிரியை துள்ளியமாக சூட் செய்து விடுகின்றனர்.

19ம் நூற்றாண்டில் வந்தது:

19ம் நூற்றாண்டில் வந்தது:

முதலில் 19ம் நூற்றாண்டில் முதன் முதலில் ரயில்கள் இயக்கத்துக்காக சிவப்பு சிக்னல் லைட்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு செல்ல பச்சை லைட் பயன்படுத்தப்பட்டன. ஒரு சில காலத்திற்கு பிறகு தான் மஞ்சள் லைட் பயன்பாட்டுக்கு வந்தது.

சிவப்பு விளக்கு கண்டுபிடித்தவர்:

சிவப்பு விளக்கு கண்டுபிடித்தவர்:

சிவப்பு நிற விளக்கை டிராப்பிக் சிக்னலில் முதலில் 1912ம் ஆண்டு ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுது. இதை அறிமுகப்படுத்தியவர் டிட்ராய்ட் போலீசை சேர்ந்த லெஸ்டர் வயர். முதலில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு 1920ம் ஆண்டு மஞ்சள் நிறம் சேர்ந்த விளக்கு பயன்படுத்தபடுகின்றது.

சிவப்பு நிறம்:

சிவப்பு நிறம்:

சிவப்பு நிறம் என்றாலே பொதுவாக ரத்தம் தொடர்பானதாகவும் உள்ளுணர்வை அதிகரிக்க செய்வதாக இருக்கின்றது. மேலும் இந்த சிவப்பு நிறம் அபாயத்தை பெரிதும் பிரதி பலிப்பதாக கருத்தப்படுகின்றது. அங்கு செல்ல வேண்டும் நில். எச்சரிக்கையாக இரு சொல்வதாக பயன்படுத்தப்படுகின்றது.

எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் ஏன்?

எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் ஏன்?

சிவப்பு நிறம் லைட்கள் மற்றும் எச்சரிக்கை செய்ய பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. ஏன் சிவப்பை மட்டும் எச்சரிக்கை செய்ய பயன்படுத்துகின்றோம். மஞ்சளை பயன்படுத்த கூடாதா என்று நீங்கள் கேட்கலாம் கேட்க உரிமையும் உண்டு. ஆனால் அதுபோல பயன்படுத்த முடியாது. சிவப்பு நிறத்திற்கு மட்டும் தான் எச்சரிக்கை செய்ய தனி சிறப்பு உள்ளது.
சிவப்பு நிறமானது மழை, பனி, வெயில், இருள் ஆகியவைகளில் சிக்காமல் நீண்ட தூரத்திற்கு ஊருவி பாயும் தன்மை கொண்டுள்ளது. இதில் அதிக அடர்த்தியான கதிர்களில் வெளிப்படுகின்றது. இதனால் தான் பயன்படுத்தப்படுகின்றது.

உயிரிழப்புகளை தடுத்துள்ளது:

உயிரிழப்புகளை தடுத்துள்ளது:

டிராப்பிக் சிக்னல், ஏர்போர்ட், மெட்ரோ, ரயில்வே, மின்சாதனங்கள், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமானவைகளிலும் சிவப்பு நிறம் இல்லாவிட்டால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். தற்போது வரை சிவப்பு நிறம் என்பது நமக்கு உதவிகரமாக இருந்து வருகின்றது.

Best Mobiles in India

English summary
Who invented traffic lights? Why is red color used for warning? Know more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X