உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?வாங்க பார்ப்போம்.!
உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா என்று எப்படி அறிவது? அப்படி உங்களின் பேஸ்புக் அக்கௌன்ட்டை யாரேனும் ஹேக் செய்திருந்தால் அதை எப்படி உடனே மீட்டுச் சரி செய்வது.
உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா என்று எப்படி அறிவது? அப்படி உங்களின் பேஸ்புக் அக்கௌன்ட்டை யாரேனும் ஹேக் செய்திருந்தால் அதை எப்படி உடனே மீட்டுச் சரி செய்வது என்று பார்க்கலாம்.

பேஸ்புக் புது சேவை
பேஸ்புக் நிறுவனம் அண்மையில் தனிநபர் பாதுகாப்பு கருதி புது சேவையை அறிமுகம் செய்தது. இதன்படி உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அக்கௌன்ட்டை எங்கு எப்போது, எந்த இடத்திலிருந்து, எந்த கணினியிலிருந்து லாக் இன் செய்து பயன்படுத்துகின்றனர் என்று தெரிந்துகொள்ளலாம்.

உடனே லாக் அவுட் செய்து பாதுகாத்துக்கொள்ளலாம்
அப்படி உண்மையில் உங்களின் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தால், உடனே இதே சேவையைப் பயன்படுத்தி உங்களுக்குத் தெரியாமல் லாக் இன் செய்யப்பட்ட அந்த அக்கௌன்ட்டை சில நொடியில் லாக் அவுட் செய்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

செயல்முறை:
உங்கள் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிந்துகொள்ள இதைச் செய்யுங்கள்
- உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை லாக் இன் செய்யுங்கள்.
- உங்கள் அக்கௌன்ட்டின் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு செல்லவும்.
- செட்டிங்ஸ் கீழ் உள்ள செக்யூரிட்டி அண்ட் லாக் இன் சேவையை கிளிக் செய்யவும்.

பாஸ்வேர்டை மாற்றம் செயல்முறை
- Where You're Logged In என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் அக்கௌன்ட் எப்பொழுது, எங்கு இயக்கத்தில் இருக்கிறது என்று தெரிந்துவிடும்.
- அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தால் உடனே அந்த அக்கௌன்ட்டை கிளிக் செய்து லாக் அவுட் செய்யவும்.
- பின் உடனே உங்களின் பாஸ்வேர்டை மாற்றம் செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications