புது ஸ்மார்ட்போன் வாங்க நேரம் வந்துடுச்சு : கண்டறிவது எப்படி.?

உங்கள் ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்.!

|

ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது என்பதால் நீங்கள் ஒவ்வொரு சில மாதங்களுக்கும் புது தொலைபேசி மேம்படுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அடுத்த ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் வண்ணம் உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் பாதுக்காப்பாக வைத்துக்கொள்ள முடியும் தான் ஆனாலும் கூட நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனிற்கென்று ஒரு எல்லை உண்டு, அதற்கு மேல் உங்களால் ஒன்றுமே செய்ய இயலாது.

அப்படியாக உங்கள் ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன.?

1. திரையில் செங்குத்து கோடுகள் அல்லது டிஸ்ப்ளே ஒளிர்வு

1. திரையில் செங்குத்து கோடுகள் அல்லது டிஸ்ப்ளே ஒளிர்வு

மிகவும் எளிதாக சேதமடைய கூடிய பகுதியாக ஒரு கருவியின் டிஸ்ப்ளே திகழ்கிறது. உங்கள் போன் திரையில் செங்குத்து கோடுகள் அல்லது ஒளிர்வு போன்ற அசாதாரண மாற்றங்கள் உள்ளது என்றால் அது உங்கள் தொலைபேசியை மாற்ற கோரும் ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும்.

2. டிஸ்ப்ளேவின் மெதுவான இயக்கம்

2. டிஸ்ப்ளேவின் மெதுவான இயக்கம்

உங்கள் தொலைபேசி டிஸ்ப்ளே காட்டும் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி இதுவாகும். உங்களின் டிஸ்ப்ளே மிகவும் மெதுவாக இயங்குகிறது மற்றும் அதே சமயம் நீங்கள் கிளிக் செய்வது ஒன்றாக இருக்கும் ஆனால் கிளிக் ஆவது வேறொன்றாக இருக்கும் - இதுபோன்ற சிக்கல்கள் இருப்பின் அது உங்கள் தொலைபேசியை மாற்ற கோரும் ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும்.

3. பவர் பொத்தான் வேலை செய்யவில்லை

3. பவர் பொத்தான் வேலை செய்யவில்லை

ஸ்மார்ட்போன்கள் ஒரு சில பொத்தான்கள் மட்டுமே கொண்டுள்ளது அதில் பவர் பட்டன் முக்கியமான பங்கு வகிக்கும் ஆற்றல் பாட்டனாக திகழ்கிறது. ஒருவேளை உங்களின் பவர் பட்டன் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டது என்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த வழக்கில், நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியாது மற்றும் சாதனத்தை எளிமையாக பயன்படுத்தவும் முடியாமல் போகும்.

4. அடிக்கடி ஷட் டவுன்

4. அடிக்கடி ஷட் டவுன்

உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி தடைப்படுகின்றது (ஷட் டவுன்) என்றால் அந்த கருவியில் யன்படுத்தப்படும் பேட்டரியில் ஏதேனும் பிரச்சினை இருக்க முடியும். நீங்கள் இந்த வழக்கில் இரண்டு விடயங்களை நிகழ்த்தலாம், ஒன்று பேட்டரியை மாற்றலாம் அல்லது உங்கள் கருவியையே மாற்றி விடலாம். பேட்டரி மாற்ற வேண்டுமெனில் உங்கள் கருவி ரீமூவபில் பேட்டரி கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.

5. நிலையற்ற ஓஎஸ் மற்றும் ஆப்ஸ் கிராஷ்

5. நிலையற்ற ஓஎஸ் மற்றும் ஆப்ஸ் கிராஷ்

சில சந்தர்ப்பங்களில், இயங்குதளம் மேம்படுத்தல் நிகழ்த்திய பின் சாதனத்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம் எனினும், இது அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்களுக்கு பொதுவானது அல்ல. நீங்கள் அடிக்கடி பயன்பாடுகளில் கிராஷ்களை சந்திக்கிறீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் ஓஎஸ் நிலையற்ற ஒன்றாக தெரிகிறது என்றால், நீங்கள் உடனடியாக பேக்டரி ரீசெட்தனை முயற்சி செய்ய வேண்டும். அது உதவி செய்யவில்லை என்றால், நீங்கள் உங்கள் சாதனத்தை மேம்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

6. ஓவர் ஹீட்டிங் பிரச்சனை

6. ஓவர் ஹீட்டிங் பிரச்சனை

உங்கள் கருவி அதிக அளவிலாக சூடாகும் பிரச்சினைகளை சந்திக்கிறது என்றால், குறிப்பாக கருவி எந்த விதமான பயன்பாட்டில் இல்லை கூஏன போதிலும் போது சாதனம் சூடாகிறது என்றால் தொலைபேசியில் ஒரு பெரிய பிரச்சினை இருக்க முடியும். அதிக சூடு என்பது எப்போதுமே ஆபத்தானது, ஒரு வெடிப்பு ஏற்படலாம். ஒருமுறை பழுது சோதனை செய்வது நல்லது இல்லையென்றால் ஒரு புதிய கருவியை வாங்கிவிடுவது மிக நல்லது.

7. பேட்டரி வீக்கம்

7. பேட்டரி வீக்கம்

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி தொடர்ந்து வீக்கமாகிக்கொண்டே போகிறது என்றால் நீங்கள் பேட்டரி மாற்றிவிடுவது மிக நல்லது, புதிய கருவி வாங்கி விட்டால் மிக மிக நல்லது. பேட்டரி வீக்கம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இந்த நிகழ்வு பேட்டரியில் உள்ள ரசாயனங்கள் உடைந்து வருகின்றன என்பதை வெளிக்காட்டும் ஒரு அடையாளம் ஆகும். அது தொடர்புடைய கடுமையான விளைவுகளை சந்திப்பதற்கு முன்னால் உஷாராகி கொள்வது நல்லது.

பேடிஎம் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புதிய கருவி.! பேடிஎம் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புதிய கருவி.!

8. மெதுவான கேமிரா இயக்கம்

8. மெதுவான கேமிரா இயக்கம்

உங்கள் மொபைலில் கேமிராவின் இயக்கம் மிக மெதுவாக இருந்தால் அது உங்கள் சாதனம் வயதாகி விட்டது என்பதை உணர்த்தும் ஒரு அடையாளம் ஆகும். ஒரு படம் கிளிக் செய்யும் போது கேமராவில் பின்னடைவு நிகழும் போதே நாம் உஷாராகி விட வேண்டும்.

9. பலவீனமாகும் பேட்டரி ஆயுள்

9. பலவீனமாகும் பேட்டரி ஆயுள்

உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுள் நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது என்றால், அது உங்கள் தொலைபேசியை மாற்ற வேண்டிய அறிகுறிகளில் ஒன்றாகும். நிச்சயமாக, ஒரு பவர் பேங்க் வாங்கி இந்த சிக்கலை தீர்க்க முடியும் தான். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதுவொரு சிறந்த தீர்வு அல்ல, நிரந்தரமாக இந்த சிக்கலை தீர்க்க பேட்டரி அல்லது தொலைபேசியை மாற்றுவது நல்லது.

டைம் டிராவல் : யாரும் அறிந்திராத அரிய தகவல்கள்.!! டைம் டிராவல் : யாரும் அறிந்திராத அரிய தகவல்கள்.!!

மேலும் படிக்க

மேலும் படிக்க

இனிமேல் நமக்கு தேவைப்படாத 7 முக்கியமான கேட்ஜெட்ஸ்.!

Best Mobiles in India

Read more about:
English summary
When and why should you replace your smartphone with a new one. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X