Home
How to

ஆபிஸ்ல WhatsApp Web யூஸ் பண்ணுற எல்லோருமே கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்.. இல்லனா அல்லோல படுவீங்க!

வீட்டிலும், வெளியிலும் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவது போல அலுவலகத்தில் அல்லது பணியிடங்களில், மொபைல் வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தி விட முடியாது. மீறினால்.. "வேலை செய்யுற நேரத்துல மொபைல் நோண்டுது பாரு!" என்கிற பேச்சுக்கள் அடிப்பட தொடங்கிவிடும். இந்த இடத்தில் தான் வாட்ஸ்அப் வெப்பின் (WhatsApp Web) தேவை அதிகரிக்கிறது!

ஒருவேளை நீங்களும் வாட்ஸ்அப் வெப் யூசர் என்றால்.. சமீபத்தில், வாட்ஸ்அப் வெப்பில் அறிமுகமான மிகவும் முக்கியமான ஒரு அம்சமான ஸ்கிரீன் லாக்கை (Screen Lock) பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பெயர் குறிப்பிடுவது போலவே இது உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள வாட்ஸ்அப் வெப் ஸ்க்ரீனை லாக் செய்ய அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

WhatsApp Web யூஸ் பண்ணுற எல்லோருமே கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்!

வாட்ஸ்அப் வெப்பில் அணுக கிடைக்கும் இந்த ஸ்க்ரீன் லாக் அம்சத்தை ஆன் அல்லது எனேபிள் செய்வது எப்படி என்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்.. கவலையை விடுங்கள். அதை செய்வது எப்படி என்பதை பற்றிய படிப்படியான மற்றும் எளிமையான வழிமுறைகள் (Simple Step-by-step Guide) இதோ:

1. முதலில் வாட்ஸ்அப் வெப்பிற்குள் லாக்-இன் (Login) செய்யவும். அதாவது வெப்.வாட்ஸ்அப்.காம் (web.whatsapp.com) வலைத்தளத்திற்குள் சென்று, அங்கே காணப்படும் க்யூஆர் கோட்-ஐ (QR code), உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பில் உள்ள க்யூஆர் கோட் ஸ்கேனரை (QR Code Scanner) பயன்படுத்தி ஸ்கேன் செய்து வாட்ஸ்ஆப் வெப்பிற்குள் நுழையவும்.

WhatsApp Web யூஸ் பண்ணுற எல்லோருமே கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்!

2. லாக்-இன் செய்ததும் செட்டிங்ஸ் (Settings) விருப்பத்தை கிளிக் செய்யவும். அதாவது வாட்ஸ்அப் வெப் ஸ்க்ரீனில், சாட்களுக்கு மேலே உள்ள அப்பர் மெனுவில் (Upper Menu) அமைந்துள்ள த்ரீ-டாட் மெனு ஐகானை (Three-dot menu icon) கிளிக் செய்யவும். பின்னர் விருப்ப பட்டியலில் உள்ள செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யவும்.

3. செட்டிங்ஸ்-ஐ தொடர்ந்து ப்ரைவஸி (Privacy) விருப்பத்தை கிளிக் செய்யவும். இது செட்டிங்ஸ்-க்குள் அணுக கிடைக்கும். இப்போது ப்ரைவஸிக்குள் கிடைக்கும் ஸ்க்ரீன் லாக் (Screen Lock) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். இந்த விருப்பம் ப்ரைவஸி டேப்பின் கீழே அணுக கிடைக்கும். எனவே கடைசி வரை ஸ்க்ரோல் செய்யவும்.

WhatsApp Web யூஸ் பண்ணுற எல்லோருமே கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்!

4. ஸ்க்ரீன் லாக் என்கிற விருப்பத்தை கிளிக் செய்த வேகத்தில், வாட்ஸ்அப் வெப்பிற்கான பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். இந்த இடத்தில் நீங்கள் ஒரு ஸ்ட்ராங் ஆன பாஸ்வேர்ட்-ஐ (Strong Password) உருவாக்க வேண்டியிருக்கும்; இதற்காக நீங்கள் ஸ்க்ரீனில் உள்ள வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

ஒரு பலமான கடவுச்சொல்லை உருவாக்க.. முடிந்தவரை எழுத்துக்கள், எண்கள் மற்றும் நிறுத்தற்குறிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் உங்களுடைய கடவுச்சொல் ஆனது 6 முதல் 128 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். பின்னர் நீங்கள் முதலில் டைப் செய்த அதே பாஸ்வேர்ட்-ஐ மீண்டும் உள்ளிட்டு உறுதி செய்யவும். கடைசியாக ஓகே (OK) என்பதை கிளிக் செய்யவும்.

5. கடைசியாக ஆட்டோமெட்டிக் ஸ்க்ரீன் லாக்டைமிங்-ஐ (Automatic Screen Lock Timing) அமைக்கவும். அதாவது நீங்கள் ஆன் / எனேபிள் (ON / Enable) செய்த ஸ்க்ரீன் லாக் அம்சமானது, எப்போது தானாக இயங்க வேண்டும் என்கிற நேரத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் உங்களுக்கு 1 நிமிடம், 15 நிமிடங்கள் அல்லது 1 மணிநேரம் போன்ற விருப்பங்கள் இருக்கும். உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்யவும். நீங்கள் எந்த நேரத்தை தேர்வு செய்கிறீர்களோ, ஒவ்வொரு முறையும் அந்த நேரத்திற்குள் உங்களுடைய வாட்ஸ்அப் வெப் ஆனது ஸ்க்ரீன் லாக் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அவ்வளவு தான் வேலை முடிந்தது. நீங்கள் வெற்றிகரமாக உங்களுடைய வாட்ஸ்அப் வெப்பிற்கு பாஸ்வேர்ட் உடனான ஸ்க்ரீன் லாக் பாதுகாப்பை ஆன் / எனேபிள் செய்து விட்டீர்கள். இனிமேல் வாட்ஸ்அப் வெப் விண்டோவை க்ளோஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், உங்கள் சாட்களை பாதுக்காப்பாக வைத்திருக்க முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Web Screen Lock Create Password Hide Your Chats From Others
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X