வந்தாச்சு வாய்ஸ் சாட்.. வாட்ஸ்அப் யூசர்கள் ஹேப்பி அண்ணாச்சி.. பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் சாட் (Voice Chat) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் க்ரூப்களுக்காக (WhatsApp Group) பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சாட் அம்சம் எப்படி வேலை செய்யும்? இதை பயன்படுத்துவது எப்படி? இதோ விவரங்கள்:
வாட்ஸ்அப் வாய்ஸ் சாட் என்றால் என்ன? வாட்ஸ்அப் வாய்ஸ் சாட் என்பது ஒரு பெரிய க்ரூப்பிற்கான ஆடியோ கால் (Audio Call Feature for WhatsApp Group) அம்சமாகும். இது சில கூடுதல் அம்சங்களுடன் வருகிறது மற்றும் க்ரூப் மெம்பர்களை லைவ் சாட் செய்ய அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் வாய்ஸ் சாட்-ஐ பயன்படுத்துவது எப்படி?
01. நீங்கள் வாய்ஸ் சாத்-ஐ தொடங்க விரும்பும் ஒரு க்ரூப் சாட்-ஐ திறக்கவும்.
02. பின்னர் ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டிங் ஐகானை கிளிக் செய்யவும்.
03. இப்போது ஸ்டார்ட் வாய்ஸ் சாட் (Start Voice Chat) என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஒரு வாய்ஸ் சாட்-ஐ தொடங்கியவுடன், குறிப்பிட்ட க்ரூப்பில் உள்ள மெம்பர்கள் வாட்ஸ்அப் காலிற்கு பதிலாக புஷ் நோட்டிஃபிக்கேஷனை பெறுவார்கள். மேலும் வாய்ஸ் சாட்டில் யாரெல்லாம் இணைந்துள்ளனர் என்பதை ஸ்க்ரீனின் அடிப்பகுதியில் உள்ள பேனரில் பார்க்க முடியும்.

வாட்ஸ்அப் வாய்ஸ் சாட்டில் எத்தனை பேர் பங்கு பெறலாம்? ஒரு க்ரூப் சாட்டில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் வாய்ஸ் கால் அம்சமானது 32 பேர் வரை ஆதரிக்கிறது, ஆக மெம்பர்களின் எண்ணிக்கை 33 முதல் 128 வரை இருந்தால் மட்டுமே வாய்ஸ் சாட் அம்சம் செயல்படும்.
வாய்ஸ் சாட்கள் எண்ட் டு என்ட் என்க்ரிப்ட் செய்யப்படுமா? ஆம்! வாட்ஸ்அப்பில் உள்ள டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ்களை போலவே, புதிய வாட்ஸ்அப் வாய்ஸ் சாட்களும் கூட எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும். அதாவது பெறுநர் மற்றும் அனுப்புனர் தவிர்த்து இடையில் உள்ள எவராலும் இதை அணுக முடியாது என்று அர்த்தம்.

ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலும் வேலை செய்யுமா? ஆம்! வாட்ஸ்அப் வாய்ஸ் சாத் அம்சமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு பதிப்புகளிலும் குரல் வேலை செய்யும். படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் இந்த அம்சம் கூடிய விரைவில் அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப்பில் ஐபி ப்ரொடெக்ட் (IP Protect) என்று அழைக்கப்படும் ஒரு புதிய ப்ரைவஸி அம்சம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, இந்த அம்சத்தை ஆன் / எனேபிள் செய்துவிட்டால்.. அதன்பிறகான வாட்ஸ்அப் கால்கள் ஆனது வாட்ஸ்அப் சர்வர்களின் வழியாக நடக்கும்.
இப்படி நடக்கும் போது மற்றவர்களால் (அதாவது வாட்ஸ்அப் காலில் உள்ள பங்கேற்ப்பாளர்களால்) உங்களுடைய ஐபி அட்ரெஸ்-ஐ (IP Address) கண்டுபிடிக்க முடியாது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் வாட்ஸ்அப்பின் புதிய ஐபி ப்ரொடெக்ட் அம்சமானது உங்கள் லோக்கேஷனை (Location) கண்காணிப்பதை மிகவும் கடினமாக்கும்.
வாட்ஸ்அப்பில் உங்களுடைய ஐபி அட்ரெஸை மறைக்க உதவும் வாட்ஸ்அப் ஐபி ப்ரொடெக்ட் என்கிற ப்ரைவஸி அம்சத்தை இயக்குவது எப்படி என்று உங்களலால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்.. கவலையை விடுங்கள். அதை செய்வது எப்படி என்பதை விளக்கும் எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:
01. வாட்ஸ்அப்பை திறக்கவும்.
2. வாட்ஸ்அப்பிற்குள் உள்ளே, மேல் வலது மூலையில் உள்ள த்ரீ டாட்ஸ் ஐகானை (Three dots icon) கிளிக் செய்யவும்.
3. இப்போது செட்டிங்ஸ் (Settings) விருப்பத்திற்குள் செல்லவும்.
4. பின்னர் ப்ரைவஸி (Privacy) என்கிற விருப்பத்திற்கு செல்லவும்
5. இப்போது நன்றாக கீழ்நோக்கி ஸ்க்ரோல் (Scroll down) செய்யவும்; கீழே அட்வான்ஸ்டு (Advanced) என்கிற பிரிவை காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
6. அதன் பின்னர் ப்ரொடெக்ட் ஐபி அட்ரெஸ் இன் கால்ஸ் (Protect IP address in calls) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதன் அருகே உள்ள சுவிட்சை டாகில் செய்யவும் (Toggle on the switch). அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications








