Home
How to

போச்சு டா.. வாய்ஸ் மெசேஜிற்கு வந்த புதிய மாற்றம்.. வச்சி செய்யப்போகும் WhatsApp பயனர்கள்!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், கடந்த 2021 ஆம் ஆண்டில் டெக்ஸ்ட் (Text), போட்டோ (Photo) மற்றும் வீடியோ (Video) மெசேஜ்களுக்கான வியூ ஒன்ஸ் (View Once) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த அம்சம் வாய்ஸ் மெசேஜ்களுக்கும் (Voice Messages) விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப்பின் மற்ற மெசேஜ்களில் வேலை செய்வதை போலவே வியூ ஒன்ஸ் அம்சமானது வாய்ஸ் மெசேஜையும் ஒருமுறை கேட்டதும் காணாமல் அடித்துவிடுகிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம், ஒரு லேட்டஸ்ட் அப்டேட் (Latest Update) வழியாக பெரும்பாலான ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களை வந்தடைந்துள்ளது.

போச்சு டா.. WhatsApp வாய்ஸ் மெசேஜிற்கு வந்த புதிய மாற்றம்!

முதலில் உங்களுக்கு இந்த அம்சம் அணுக கிடைக்கிறதா என்பதை சோதிக்க, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சென்று வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட்டை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பின்னர் கீழ்வரும் எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றி வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜை அனுப்பவும்:

வாட்ஸ்அப் வழியாக வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜை அனுப்புவது எப்படி? 01. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து, யாருக்கு வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜை அனுப்ப விரும்புகிறீர்களோ, அவருடைய சாட் விண்டோவிற்கு (Chat Window) செல்லவும். இப்போது சாட்பாக்ஸின் (Chatbox) கீழ் வலது மூலையில் உள்ள மைக்ரோஃபோன் ஐகானை (Microphone icon) லாங் பிரஸ் (Long Press) செய்யவும்.

போச்சு டா.. WhatsApp வாய்ஸ் மெசேஜிற்கு வந்த புதிய மாற்றம்!

02. இப்போது உங்களுடையயே வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் ஆக ஆரம்பிக்கும்; கூடவே குறிப்பிட்ட வாய்ஸ் ரெக்கார்ட்-ஐ லாக் செய்வதற்கான பூட்டு போன்ற லாக் ஐகானும் (Lock icon) தோன்றும். அந்த லாக் ஐகானை நோக்கி மேல் நோக்கி ஸ்க்ரோல் (Swipe Up) செய்யவும்.

03. இப்படி செய்யும்போது லாக் ஐகான் ஆனது இன்னும் சற்று மேல்நோக்கி செல்லும்; வியூ ஒன்ஸ் ஐகான் தென்படும். அதே சமயம் உங்கள் வாஸ் மெசேஜும் தொடர்ந்து ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருக்கும். வாய்ஸ் ரெக்கார்ட்-ஐ செய்து முடிப்பதற்குள் வியூ ஐகானை கிளிக் செய்து விடவும்.

போச்சு டா.. WhatsApp வாய்ஸ் மெசேஜிற்கு வந்த புதிய மாற்றம்!

04. அவ்வளவு தான் "வழக்கமான" வாய்ஸ் மெசேஜ் ஆனது வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பப்பட தயாராக இருக்கும். இனிமேல் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்து அனுப்புவது மட்டுமே ஆகும்.

05. வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பபட்ட வாய்ஸ் குரல், பெறுநர் அதை ஒருமுறை கேட்ட பிறகு, அந்த வாய்ஸ் மெசேஜ் அவரது சாட்டில் இருந்து தானாகவே மறைந்துவிடும். இது நடந்தபிறகு நீங்கள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆனது ஓப்பன்டு (Opened) என்கிற டெக்ஸட் ஆக மாறும்.

06. ஒருவேளை நீங்கள் அனுப்பிய வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ், 14 நாட்களுக்குள் திறக்கப்படவில்லை என்றால் அந்த மெசேஜ் பெறுநரின் சாட்டில் இருந்து தானாகவே மறைந்துவிடும். மேலும் இந்த வியூஸ் ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜை சேமிக்கவோ, ஸ்டார்டு மெசேஜ் ஆக மாற்றவோ அல்லது ஷேர் செய்யவோ முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜிலும் கூட லாக், பாஸ் (Pause), ரெக்கார்ட் (Record) மற்றும் டெலிட் (Delete) போன்ற விருப்பங்கள் அணுக கிடைக்கும். மைக்ரோஃபோன் ஐகானை லாங் பிரஸ் செய்து அதை மேல்நோக்கி ஸ்க்ரோல் செய்யும் போதே, மேற்கண்ட விருப்பங்களை காண்பீர்கள்.

லாக் விருப்பமானது நீளமான வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்யும் போது மைக்ரோஃபோன் ஐகானை லாங் பிரஸ் செய்ய வேண்டிய அவசியத்தை நீக்கும். பாஸ் மற்றும் ரெக்கார்ட் விருப்பங்கள் உங்கள் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டிங்கை நிறுத்தவும், பின்னர் தொடரவும் அனுமதிக்கும். டெலிட் விருப்பமானது நீங்கள் ரெக்கார்ட் செய்த வாய்ஸ் மெசேஜை டெலிட் செய்ய அனுமதிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp View Once Voice Message How To Sent Disappearing Audio Message
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X