WhatsApp Tricks: இவ்ளோ ரகசிய அம்சங்களா.. இத்தனை நாளா தெரியாம போச்சே!

|

சமூகவலைதளங்களில் பிரதான செய்தியிடல் பயன்பாடாக வாட்ஸ்அப் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. வங்கியில் கூட கணக்கில்லாமல் இருக்கும் ஆனால் வாட்ஸ்அப்பில் கணக்கில்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் சொர்ப்பம்.

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதற்கும், பெறப்பட்ட மெசேஜை படிப்பதற்கும், புகைப்படம் வீடியோவை டவுன்லோட் செய்து பார்ப்பதற்கும் அதை ஷேர் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். மிஞ்சிப் போனால் பிறர் ஸ்டேட்ஸ்களை பார்த்து நேரம் செலவிடுவோம்.

வாட்ஸ்அப்பில் அடிப்படையாகவே பல ரகசிய அம்சங்கள் இருக்கிறது. அதுகுறித்த தகவலை பார்க்கலாம்.

பல்வேறு அடிப்படை அம்சங்கள்

பல்வேறு அடிப்படை அம்சங்கள்

வாட்ஸ்அப் பயனர்களை தங்கள் சேட்டிங்கை பில்டர் செய்ய அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் எவ்வளவு டேட்டா உபயோகித்துள்ளீர்கள் என அறிந்துக் கொள்ளலாம். அதிக அளவிலான ஃபைல்களை மட்டும் தேர்ந்தெடுத்து டெலிட் செய்யலாம். இதுமட்டுமில்லை இன்னும் நிறைய ரகசிய அம்சங்களை தான் விரிவாக பார்க்கப்போகிறோம்.

பல்வேறு புதுப்புது அம்சங்கள்

பல்வேறு புதுப்புது அம்சங்கள்

உலகம் முழுவதும் அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில், வாட்ஸ்அப் பிரதான ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

இதில் பல அம்சங்கள் அதன் பயனர்களுக்கு மிகவும் தேவையுள்ளதாக இருக்கும். அதோடு வாட்ஸ்அப்பில் பல சிறந்த அம்சங்கள் சுவாரஸ்யமாகவும், அடிப்படையாகவும் இருக்கிறது. இதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

மிகவும் பயனுள்ள அம்சங்கள்

மிகவும் பயனுள்ள அம்சங்கள்

வாட்ஸ்அப் இல் பயனுள்ளதாக இருக்கும் அடிப்படையான சில அம்சங்களை தான் தற்போது பார்க்கப்போகிறோம். இந்த அம்சங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டின் அனுபவத்தை மாற்றி அமைக்கும்.

அம்சங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க..

வாட்ஸ்அப் சேட்டிங் மெசேஜ்களை முறையாக பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் சேட்டிங் மெசேஜ்களை முறையாக பயன்படுத்துவது எப்படி?

பயனர்கள் தங்களின் ஒருசில வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி காட்டவும், மெசேஜ்களின் தலைப்பை தனித்துவமாக்கி காட்டுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதோடு மட்டுமின்றி எழுத்துகளை சாய்வு வடிவில் எழுதி அனுப்புவார்கள். இதையெல்லாம் பார்த்து எப்படி என்று சிந்தித்திருப்போம். ஆனால் முறையாக அறிந்திருக்க மாட்டோம். உங்கள் எண்ணங்களை பிரதபலிக்க வார்த்தை ஜாலங்கள் உடன் அதை தனித்துவமாக்கி காட்டுவது என்பதும் மிக அவசியம்.

Bold: உங்கள் வார்த்தையில் எந்த சொல்லை தனித்துவமாக்கி காட்டுவதற்கு விரும்புகிறீர்களோ. அந்த சொல்லின் இருபுறமும் ஸ்டார் குறியீட்டை பயன்படுத்த வேண்டும். (எடுத்துக்காட்டு) *நன்றி*

Italics: நீங்கள் தேர்ந்தெடுக்கும் சொல்லின் இருபுறமும் அடிக்கோடிட்டு காட்டுவதன் மூலம் குறிப்பிட்டுள்ள சொல் சாய்வு நிலையில் காட்டப்படும். (எடுத்துக்காட்டு) _நன்றி_

Strike: உங்கள் சொல்லில் டில்ட் குறியீடு பயன்படுத்துவதன் மூலம் வார்த்தை நடுவே கோடு போன்ற தோற்றத்தை அளிக்கச் செய்யலாம். (எடுத்துக்காட்டு) ~நன்றி~

இந்த குறியீடுகளின மூலம் மெசேஜ் டைப் செய்வதில் உங்கள் வித்தையை பிறருக்கு காண்பிக்கலாம்.

வாட்ஸ்அப்பில் மட்டும் எவ்வளவு டேட்டா உபயோகித்துள்ளோம்?

வாட்ஸ்அப்பில் மட்டும் எவ்வளவு டேட்டா உபயோகித்துள்ளோம்?

வாட்ஸ்அப் தளத்தில் மெசேஜ் அனுப்புவது, புகைப்படம், வீடியோ பதிவிறக்கம் பதிவேற்றம் என மொத்தமாக எவ்வளவு டேட்டா பயன்படுத்தியுள்ளோம் என்பதை எப்படி அறிந்துக் கொள்வது என பார்க்கலாம்.

WhatsApp Settings தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

ஸ்டோரேஜ் மறறும் டேட்டா என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் நெட்வொர்க் பயன்பாட்டை ஓபன் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

இதில் டேட்டா நுகர்வு குறித்த அனைத்து புள்ளி விவரங்களை விரிவாக காணலாம்.

வாட்ஸ்அப் தளத்தில் குறிப்பிட்ட சேட்டிங் மற்றும் பெரிய ஃபைல்களை நீக்குவது எப்படி?

வாட்ஸ்அப் தளத்தில் குறிப்பிட்ட சேட்டிங் மற்றும் பெரிய ஃபைல்களை நீக்குவது எப்படி?

உங்கள் மொத்த ஸ்மார்ட்போனிலும் அதிக மெமரியை எடுத்துக் கொள்வது வாட்ஸ்அப் தான். ஸ்டோரேஜ் விவரத்தில் சென்று பார்த்தால், வாட்ஸ்அப் "ஜிபி" கணக்கான டேட்டாவை எடுத்திருக்கும். எனவே வாட்ஸ்அப்பில் அதிக அளவிலான ஃபைல்களை எப்படி நீக்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கு

ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கு

WhatsApp Settings பயன்பாட்டைத் திறக்கவும்.

இதில் ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

இதில் மேனேஜ் ஸ்டோரேஜ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதில் வாட்ஸ்அப் தொடர்பு பட்டியலை காண்பீர்கள்.

இதில் சேமிப்பு அளவை பார்த்து பெரிய கோப்புகளை நீக்க விரும்பும் சேட்டிங்கை தேர்ந்தெடுக்கவும்.

நீக்க விரும்பும் ஃபைல்களை தேர்ந்தெடுத்து எந்த கோப்பை டெலிட் செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்து கொள்ளவும்.

பின் மேல் வலதுபுறத்தில் இருக்கும் டெலிட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து டெலிட் செய்யலாம்.

வாட்ஸ்அப்பில் வெவ்வேறு சேட்டிங்கிற்கு வால்பேப்பரை மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப்பில் வெவ்வேறு சேட்டிங்கிற்கு வால்பேப்பரை மாற்றுவது எப்படி?

சேட்டிங் அம்சத்தை மேலும் தனித்துவமாக்க ஒவ்வொரு சேட்டிங்கிற்கும் வெவ்வேறு வால்பேப்பரை பயன்படுத்தலாம்.

நீங்கள் வால்பேப்பர் அமைக்க விரும்பும் சேட்டிங்கை தேர்ந்தெடுக்கவும்.

மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.

இதில் வால்பேப்பர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை வால்பேப்பராக தேர்ந்தெடுத்து, அட்ஜஸ்ட் செய்துவைத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Whatsapp Tricks: These Basic things can Change Your Whatsapp Experience

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X