இத்தனை நாளா தெரியாம போச்சே! யாருக்கும் தெரியாமல் WhatsApp இல் இதை செய்யலாமா? இனி குஷிதான்!

|

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக WhatsApp இருக்கிறது. பயனர்களின் தேவை அறிந்து நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு புதுப்புது அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் தளத்தை நாம் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தாலும் அதில் ஒருசில அம்சங்கள் இருப்பதையே பலரும் அறிவது இல்லை. அதன்படியான ஒரு அம்சத்தை தான் பார்க்கப்போகிறோம்.

பிரதான பயன்பாடாக இருக்கும் வாட்ஸ்அப்

பிரதான பயன்பாடாக இருக்கும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மிகவும் பிரதானமாக இருப்பது அதன் ஸ்டேட்டஸ் அம்சம் ஆகும். இன்பம், துன்பம் என பல நிலைகளை சந்தித்து வரும் மனிதர்கள் தங்களது நிலைப்பாட்டை பிறருக்கு பகிர வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்கு பிடித்த புகைப்படங்களையும், தகவல்களையும் கூட ஸ்டேட்டஸ் ஆக பலரும் வைப்பது உண்டு. இதில் சில சிக்கலை பலரும் சந்திப்பதுண்டு.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

ஒருசில நபர்களின் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமலயே பார்க்க வேண்டிய நிலை பலருக்கும் இருக்கும். அவருடன் சண்டையில் இருக்கிறோமே அவரது ஸ்டேட்டஸை நாம் பார்த்தால் அது சிக்கலுக்கு வழி வகுக்குமே. இருந்தாலும் அவர் எதுகுறித்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது ஆர்வம் அதிகமாக இருக்கிறதே என்ற நிலையை சந்திக்க நேரிடலாம்.

இது போல் பல நிலைகளை சந்திக்கும் நபர்களுக்கு தீர்வு இருக்கிறது. அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமலயே பார்ப்பதற்கு வழிகள் இருக்கிறது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமலயே எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

எளிய வழிமுறைகள்..

எளிய வழிமுறைகள்..

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளவும்.

மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்து செட்டிங்க்ஸ் அமைப்பை ஓபன் செய்து கொள்ளவும்.

பிரைவசி விருப்பம்

அதில் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்து பிரைவசி என்ற தேர்வுக்குள் உள் நுழைய வேண்டும்.

அதில் காட்டப்படும் Read Receipts என்ற ஆப்ஷனை ஆஃப் செய்து கொள்ளவும்.

அவ்வளவு தான் நீங்கள் யார் ஸ்டோரியை பார்த்தாலும் அது அவர்களுக்கு காட்டப்படாது.

வாட்ஸ்அப் சேட்டிங் மெசேஜ்களை முறையாக பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் சேட்டிங் மெசேஜ்களை முறையாக பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் சேட்டிங் மெசேஜ்களை முறையாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

பயனர்கள் தங்களின் ஒருசில வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி காட்டவும், மெசேஜ்களின் தலைப்பை தனித்துவமாக்கி காட்டுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதோடு மட்டுமின்றி எழுத்துகளை சாய்வு வடிவில் எழுதி அனுப்புவார்கள். இதையெல்லாம் பார்த்து எப்படி என்று சிந்தித்திருப்போம். ஆனால் முறையாக அறிந்திருக்க மாட்டோம். உங்கள் எண்ணங்களை பிரதபலிக்க வார்த்தை ஜாலங்கள் உடன் அதை தனித்துவமாக்கி காட்டுவது என்பதும் மிக அவசியம்.

வித்தியாசமாக எழுதுவது எப்படி?

வித்தியாசமாக எழுதுவது எப்படி?

Bold: உங்கள் வார்த்தையில் எந்த சொல்லை தனித்துவமாக்கி காட்டுவதற்கு விரும்புகிறீர்களோ. அந்த சொல்லின் இருபுறமும் ஸ்டார் குறியீட்டை பயன்படுத்த வேண்டும். (எடுத்துக்காட்டு) *நன்றி*

Italics: நீங்கள் தேர்ந்தெடுக்கும் சொல்லின் இருபுறமும் அடிக்கோடிட்டு காட்டுவதன் மூலம் குறிப்பிட்டுள்ள சொல் சாய்வு நிலையில் காட்டப்படும். (எடுத்துக்காட்டு) _நன்றி_

குறியீடு போதும்

Strike: உங்கள் சொல்லில் டில்ட் குறியீடு பயன்படுத்துவதன் மூலம் வார்த்தை நடுவே கோடு போன்ற தோற்றத்தை அளிக்கச் செய்யலாம். (எடுத்துக்காட்டு) ~நன்றி~

இந்த குறியீடுகளின மூலம் மெசேஜ் டைப் செய்வதில் உங்கள் வித்தையை பிறருக்கு காண்பிக்கலாம்.

வாட்ஸ்அப்பில் மட்டும் எவ்வளவு டேட்டா உபயோகித்துள்ளோம்?

வாட்ஸ்அப்பில் மட்டும் எவ்வளவு டேட்டா உபயோகித்துள்ளோம்?

வாட்ஸ்அப் தளத்தில் மெசேஜ் அனுப்புவது, புகைப்படம், வீடியோ பதிவிறக்கம் பதிவேற்றம் என மொத்தமாக எவ்வளவு டேட்டா பயன்படுத்தியுள்ளோம் என்பதை எப்படி அறிந்துக் கொள்வது என பார்க்கலாம்.

WhatsApp Settings தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

ஸ்டோரேஜ் மறறும் டேட்டா என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் நெட்வொர்க் பயன்பாட்டை ஓபன் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

இதில் டேட்டா நுகர்வு குறித்த அனைத்து புள்ளி விவரங்களை விரிவாக காணலாம்.

Best Mobiles in India

English summary
Whatsapp Tricks! How to see WhatsApp status without them knowing?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X