வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்: சேட்டிங்கை எதுக்கு டெலிட் செய்யனும்., மறைத்து வைக்கலாமே- சிம்பிள் பாஸ்!

|

சமூகவலைதளங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப் ஆகும். பிரபல தகவல் பரிமாற்ற தளமாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. வாட்ஸ்அப் தளம் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்துப்பட்டு வரும் தளமாகும். பயனர் அனுபவத்தை மேம்படுத்த பயன்பாடு தொடர்ந்து பல புதிய அம்சங்களை இணைத்து வருகிறது. அதாவது தகவல் பரிமாற்ற தளமாக இருக்கும் வாட்ஸ்அப் தற்போது பணத்தை பரிமாற்றம் செய்யவும் அனுமதிக்கிறது. அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையை அறிந்து பல்வேறு அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்கிறது. வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் அம்சங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையில் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது.

வாட்ஸ்அப் சேட்டிங் மறைப்பு

வாட்ஸ்அப் சேட்டிங் மறைப்பு

பல்வேறு சமயங்களில் நமது பணி நோக்கம், நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்பு கொள்வதற்கு என ஸ்மார்ட்போன்களையும் வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தி வருகிறோம். வாட்ஸ்அப் பயன்பாட்டில் செய்தி புகைப்படம் வீடியோ பகிரத் தெரிந்து பயன்படுத்துவர் பலரும் அதில் இருக்கும் நுணுக்கங்கள் அறிந்துக் கொள்வதில்லை. வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் பல்வேறு டிரிக்ஸ்களை தொடர்ந்து நாம் தெரிவித்து வருகிறோம். நாம் பயன்படுத்தும் சாதனங்களை குழந்தைகளும் பெற்றோர்களும் சாதாரனமாக எடுத்து பயன்படுத்துவது வழக்கம். அதில் தனிப்பட்ட தகவல் என்பது பலருக்கும் இருக்கும். அதில் பலரும் வாட்ஸ்அப் அரட்டைகளை பிறர் யாரும் பார்த்துவிடக் கூடாது என டெலிட் செய்து விடுவார்கள். அதுவே திரும்ப தேவை எனும் போது இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட அரட்டை மற்றும் குழு அரட்டைகளை மறைக்க வாட்ஸ்அப்பின் காப்பக அரட்டை அம்சத்தை பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப் Archive Chat அம்சம்

வாட்ஸ்அப் Archive Chat அம்சம்

வாட்ஸ்அப் Archive Chat அம்சம் பயன்பாடு குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த அம்சத்தின் மூலம் அனைவரும் எந்தவொரு குழு அல்லது தனிப்பட்ட அரட்டையை நீக்காமல் மறைத்து வைக்கலாம். இந்த அம்சத்தை பயன்படுத்தி முக்கிய அரட்டை பட்டியலை தேர்ந்தெடுத்து அதை மறைக்க பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பில் முன்னதாக புதிய செய்தியை பெற்ற உடன் காப்பக அரட்டை அம்சம் மேலே தோன்றும். வாட்ஸ்அப் இந்த ஆண்டு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது காப்பகப்படுத்தப்பட்ட சேட்டிங்கை தனித்தனியாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் புதிய செய்தியை பெறும் பட்சத்திலும் தங்களுக்கு எந்த அறிவிப்பும் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. உங்கள் சேட்டிங்கை நீக்காமல் நிரந்தரமாக மறைக்க இந்த அம்சம் பயன்படும். வாட்ஸ்அப்பில் சேட்டிங்கை நிரந்தரமாக மறைப்பது மற்றும் காப்பகப்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

காப்பகப்படுத்துவது அல்லது மறைப்பது எப்படி?

காப்பகப்படுத்துவது அல்லது மறைப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் சேட்டிங்கை காப்பகப்படுத்துவது அல்லது மறைப்பது எப்படி?

ஸ்டெப் 1: உங்கள் வாட்ஸ்அப் தளத்துக்கு சென்று நீங்கள் காப்பகப்படுத்த விரும்பும் தனிப்பட்ட அல்லது குழு சேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 2: தற்போது நீக்கு, முடக்கு மற்றும் காப்பக விவரம் உள்ளிட்ட சில விருப்பங்களை காண்பீர்கள்.

ஸ்டெப் 3: இதில் காப்பக தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

ஸ்டெப் 4: தங்கள் சேட்டிங் பட்டியலின் மேல் காப்பக பட்டன் தோன்றும் இதில் அனைத்தும் மறைக்க என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் சேட்டிங்கை மீட்டெடுப்பது எப்படி?

வாட்ஸ்அப் சேட்டிங்கை மீட்டெடுப்பது எப்படி?

வாட்ஸ்அப் சேட்டிங்கை மீட்டெடுப்பது எப்படி?

ஸ்டெப் 1: நீங்கள் வாட்ஸ்அப்பில் காப்பக அரட்டை பகுதியை திறக்க வேண்டும்.

ஸ்டெப் 2: தற்போது நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் அரட்டை தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: இறுதியாக காப்பக பட்டனின் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள unarchive என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் காப்பக அரட்டைகளில் இருந்து ஏதேனும் புதிய தகவல்கள் வந்தால் வாட்ஸ்அப் தங்களுக்கு தெரிவிக்காது. ஆனால் இதற்கும் மாற்று உண்டு, நீங்கள் இந்த செட்டிங்கை மாற்றலாம், காப்பகப்படுத்தப்பட்ட சேட்டிங்கை அறிவிப்புகளையும் பெறலாம்.

அறிவிப்பு பெற வழிமுறைகள்

அறிவிப்பு பெற வழிமுறைகள்

ஸ்டெப் 1: வாட்ஸ்அப்-க்கு சென்று மேலே உள்ள மூன்று புள்ளி விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2: இதில் செட்டிங்கை கிளிக் செய்து சேட்டிங் பகுதிக்கு செல்லலாம்.

ஸ்டெப் 3: அரட்டைகளை காப்பகப்படுத்து என்பதை கிளக் செய்ய வேண்டும். அதாவது இதன்மூலம் தற்போது நீங்கள் சேட்டிங்கை பெறுவீர்கள். இதை மீண்டும் இயக்கினால் காப்பகப்படுத்தப்பட்ட சேட்டிங்கையும் அறிவிப்பையும் பெறமாட்டீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் இந்த அம்சத்தை ஆன் செய்தவுடன் ஏழு நாட்களுக்கு பிறகு வாட்ஸ்அப் தாமாகவே அனைத்து செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்கள் அம்சம்

ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்கள் அம்சம்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு சாட்டிங் செய்யும் போது, சாட்டிங்கை சுவாரஸ்யமானதாக மாற்ற ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்களை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் சேவையை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து பல விதமான ஸ்டிக்கர் பேக்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் இல் உங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் முறையை பற்றி இப்போது பார்க்கலாம். வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப்பின் புதிய கருவி மூலம் தனிப்பயன் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எளிதாகிறது. இந்தப் புதிய கருவி மூலம் எந்தப் படத்தையும் நீங்கள் எடிட் செய்து, அதை எமோஜிகள் உடன் இணைத்து, டெக்ஸ்ட் உரைகளைச் சேர்த்து, ஸ்டிக்கர்களாக மாற்ற பயனர்களுக்கு இப்போது அனுமதி கிடைக்கிறது.

பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கலாம்

பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கலாம்

இந்த புதிய முறைப்படி எப்படி உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கலாம் என்பதை பார்க்கலாம். ஸ்டிக்கர் மேக்கர் டூலை அணுக நீங்கள் முதலில் உங்களின் வாட்ஸ்அப் பயன்பாட்டை திறக்க வேண்டும். வாட்ஸ்அப் சாட் விண்டோவில் உள்ள இடத்திற்கு செல்லவும் > அட்டாச் ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். தெரியாதவர்களுக்கு பேப்பர் கிளிப் போன்ற ஐகானை காணிப்பீர்கள். பின்னர் காணப்படும் ஸ்டிக்கர் என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Whatsapp Tips: How to Hide Whatsapp Chating Without Delete?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X