வாட்ஸ்அப் அப்டேட்: உடனே ஸ்டேட்டஸ்-க்கு போங்க.. செக் பண்ணி பாருங்க!

|

வாட்ஸ்அப்பில் ஏற்கனவே போதும் போதுமென்று 'ஸ்வைப்' செய்து வருகிறோம். இதற்கிடையில் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு புதிய அம்சமானது.. உங்களை மேலும் அதிகமாக ஸ்வைப் செய்ய வைக்க போகிறது.

அதென்ன அம்சம்? அந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி? அந்த அம்சத்தின் கீழ் ஸ்வைப் செய்வதனால் WhatsApp-இல் என்ன நடக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

வாட்ஸ்அப்பில்.. புதுசா ஒரு ஸ்வைப் சேர்த்துள்ளது!

வாட்ஸ்அப்பில்.. புதுசா ஒரு ஸ்வைப் சேர்த்துள்ளது!

வழக்கமாக, யாரெல்லாம் நமக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள் என்பதை அறியவும், அவர்கள் என்ன மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள் என்பதை படிக்கவும்..

..யாரெல்லாம் என்னென்ன ஸ்டேட்டஸ்களை வைத்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கவும்; ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை செய்யவும் என.. எப்போதுமே வாட்ஸ்அப்பில் 'ஸ்வைப்' செய்து கொண்டே இருக்கிறோம் அல்லவா? அந்த பட்டியலில் புதுசா ஒரு 'ஸ்வைப்' சேர்த்துள்ளது!

மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன நேரத்தில் வந்த போன் கால்களை கண்டுபிடிப்பது எப்படி?மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன நேரத்தில் வந்த போன் கால்களை கண்டுபிடிப்பது எப்படி?

அதென்ன ஸ்வைப்?

அதென்ன ஸ்வைப்?

அது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஈமோஜி ரியாக்ஷன்ஸ்களுக்கான 'ஸ்வைப்' ஆகும்.

வழக்கமாக நீங்களொரு ஸ்டேட்டஸ்-க்கு ரிப்ளை செய்ய விரும்பினால், என்ன செய்வீர்கள்? குறிப்பிட்ட ஸ்டேட்டஸில் இருந்தபடியே அதை மேல்நோக்கி ஸ்வைப் செய்வீர்கள் அல்லவா?

இனிமேல் அப்படி செய்தால்.. ரிப்ளை செய்வதற்கான ஆப்ஷன் மட்டுமின்றி.. 8 ஈமோஜிக்களும் அணுக கிடைக்கும்!

டைப் செய்யாமலேயே கருத்து பரிமாற்றம்!

டைப் செய்யாமலேயே கருத்து பரிமாற்றம்!

மெட்டாவுக்கு (Meta) சொந்தமான வாட்ஸ்அப், தன் பயனர்கள் வரம்பற்ற ஈமோஜிகளை பயன்படுத்தி ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வதற்கான வழிகளை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதாவது டைப் செய்யும் வேலையை குறைத்து, ஈமோஜிகளின் வழியாகவே பெரும்பாலான கருத்து பரிமாற்றங்களை நிகழ்த்தும் வழிகளை கண்டறிந்து வருகிறது.

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

அதனொரு பகுதியாக!

அதனொரு பகுதியாக!

இந்த 2022 ஆம் ஆண்டு வாட்ஸ்அப், அதன் மெசேஜ்களுக்கான ஈமோஜி ரியாக்ஷன்களை அறிமுகம் செய்தது.

அதன் வழியாக, ஒரு குறிப்பிட்ட மெசேஜை 'லாங் பிரஸ்' செய்வதன் வழியாக, உங்களுக்கு பல வகையான ஈமோஜி ரியாக்ஷன்ஸ் அணுக கிடைக்கும்; அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.

தற்போது இதே போன்ற ஒரு வசதி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நீங்கள் மேல்நோக்கி ஸ்வைப் செய்யும் போது, அதற்கு ரிப்ளை செய்வதற்கான வசதியோடு சேர்த்து.. ரியாக்ட் செய்வதற்கான ஈமோஜிகளும் அணுக கிடைக்கும்!

இந்த அம்சம் யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்?

இந்த அம்சம் யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்?

தற்போது வரையிலாக, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஈமோஜி ரியாக்ஷன் அம்சம் ஆனது வாட்ஸ்அப் மொபைல் ஆப்பின் பீட்டா வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது.

இதை "ஒரு வகையாக சோதனை" என்றே எடுத்துக்கொள்ளலாம். ஆக கண்டிப்பாக இந்த அம்சம், கூடிய விரைவில் அனைவருக்கும் அணுக கிடைக்கலாம்!

என்னென்ன ஈமோஜிக்கள் கிடைக்கும்?

என்னென்ன ஈமோஜிக்கள் கிடைக்கும்?

சில பீட்டா டெஸ்டர்கள் இந்த அம்சத்தின் கீழ் மொத்தம் எட்டு ஈமோஜிக்களை பெற்றுள்ளனர் அதில் சிரிப்பது, அழுவது, கைக்கூப்பி கும்பிடுவது போன்ற ஈமோஜிக்களும் அடங்கும்.

ஒருவேளை நீங்கள் வாட்ஸ்அப் பீட்டா யூசர் என்றால்.. இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ!

இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிற்கு ஈமோஜி வழியாக ரியாக்ட் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிற்கு ஈமோஜி வழியாக ரியாக்ட் செய்வது எப்படி?

- உங்கள் மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து, ஏதேனும் ஒரு ஸ்டேட்டஸிற்கு செல்லவும்.

- பின்னர் அதை மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

- இப்போது உங்களுக்கு எட்டு வகையான ஈமோஜிக்கள் அணுக கிடைக்கும்.

- அதில் ஒன்றை தேர்வு செய்ய, குறிப்பிட்ட ஈமோஜி ஆனது ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆக அனுப்பப்படும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
WhatsApp Status Emoji Reactions How To Use

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X